LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள்

தமிழ் மின்நூல் தொகுப்பில் ஈடுபட்டுள்ள தமிழ்க்கனல் திரு.பொள்ளாச்சி நசன்

தமிழ் வளர்ச்சியில் தீராத தாகம் கொண்ட திரு.பொள்ளாச்சி நசன் அவர்கள் அமெரிக்க தமிழ்க் கல்விக்கழகம் உள்ளிட்ட உலகின் பல்வேறு தமிழ் அமைப்புகளுக்கு தமிழ்க் கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்கி வருபவர். இவரது தமிழ் கல்வி முறை ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல இடங்களில் தமிழ்ப் பள்ளிகளில் பயன்படுத்தப்படுகிறது. தமிழில் உள்ள அறிய நூல்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும் நோக்கில் உலகில் உள்ள தமிழர்களை தொடர்ந்து தொடர்புகொண்டு நூல்களை சேகரித்து அவைகளை மின்நூல்களாக மாற்றி வருகிறார். இப்படி தொகுக்கப்பட்ட மின்நூல்கள் இதுவரை  28500-க்கு மேல் சென்றுகொண்டுள்ளது. இவர் தமிழம்.வலை (www.thamizham.net ) என்ற இணையம் வழியாக அனைத்து தமிழ் சேவைகளையும் தொகுத்து வருகிறார். 


திரு.பொள்ளாச்சி நசன் அவர்களின் மின்அஞ்சலில் இருந்து கீழ்காணும் விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது: 

தமிழம்.வலையில் இதழ்களை வரிசைப்படுத்திப் பட்டியலிடுவதும், அப்பட்டியலை இணையத்தில் காட்சிப் படுத்துவதும், என் பெருமைக்காக நான் செய்யவில்லை. பத்து ஆண்டுகளுக்குள் அந்த இதழ்களை வெளியிட்டவர், எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை, அப்படியே அவரைத் தேடிக் கண்டுபிடித்துக் கேட்டாலும், தான் வெளியிட்ட இதழ்கள் தன்னிடம் முழுமையாக இல்லை எனவும், அதனை வெளியிட்டுப் பொருளாதார நெருக்கடியில் தான் நலிந்து விட்டதாகவும் கூறுகிறார். பலரது இலக்கியப் பயிற்சிக்குப் படிக்கட்டாக இருந்த இதழ்களை, அந்த இதழின் படைப்பாளர்களால் கூட சேகரித்து வைக்கப்படுவது இல்லை. இதழில் தன் படைப்பு வந்த தாளை மட்டும் வெட்டி வைத்துக்கொண்டு, பிறகு அவற்றை நூலாக்கி மகிழ்ந்து, பெருமை தேடுகிறார்கள். மிகப்பெரிய படைப்பாளர்களும் இதனையே செய்கிறார்கள். படிக்கட்டாக இருந்து இலக்கிய வளர்ச்சிக்குத் துணையாக நின்று, அனைத்தையும் இழந்த அந்த இதழாளரை., அவரது சுற்றத்தினரும் வெறுக்கவே செய்கிறார்கள். என் அப்பா எனக்கு "எதனை வைத்துவிட்டுப் போனார்" என்று குற்றம் கூறுபவர்களாகவே இருக்கிறார்கள். வேதனையோடு இந்த நிகழ்வுகளை உள்வாங்கியவன் நான், அப்பழுக்கில்லாது இயங்கிய அவர்களது இயக்கத்தை சான்றாவணமாகக் காட்ட நினைத்துத் தொடர்வதுதான் இந்த இணையப்பணி. இப்பொழுது இணையத்தில் நான் தொகுக்கிற இதழ்கள் மற்றும் நூல்களின் பட்டியலை மட்டும்தான் வெளியிடுகிறேன். பலரும் வலை இறக்கும் வகையில் இணைக்க., நான் மேலும் கூடுதலாக இயங்கவேண்டியுள்ளது.


அப்பணியை எடுத்தால் தொகுக்கிற என்பணி தொய்வுறும். எனவேதான் இணையத்தில் வலை இறக்கும் வகையில் வைப்பதில்லை. இதழை இழந்த அந்த இதழாளருக்கு, அனைத்து இதழ்களையும் பாதுகாத்து, குறுவட்டில் படியெடுத்துக் கொடுக்கும் பொழுது ஏற்படும் நிறைவு அளப்பரியது. இதனை உணர்ந்தே இதழாளர்கள் விடுபட்ட இதழ்களையும் எனக்கு அனுப்பி உதவுகிறார்கள். உலகஅளவில் பாதுகாக்கப்பட்ட பட்டியலில் ( http://win.tamilnool.net/search/worldlist.htm ) விடுபட்ட இதழ்களை வைத்திருப்பவர்கள், என் செயலில் நம்பிக்கை ஏற்படுமானால் அனுப்பி வைக்கவும். இதற்காகவே, இந்தப் பட்டியலை நான் வெளியிடுகிறேன். இன்னும் சில ஆண்டுகளுக்குள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி, அனைவருக்கும் பயனாகும் வகையில் இணையத்தில் வைக்க இயலும். இதழ் நடத்தும்போது ஏற்படும் இழப்பை நான் - சிற்றிதழ்ச் செய்தி - என்ற இதழை நடத்தியபோது உணர்ந்துள்ளேன். அதன் வெளிப்பாடே இந்தப் பாதுகாப்புப் பணி. என் தொகுப்பு என்பது வணிக நோக்கம் உடையது அல்ல என்பதை என்னோடு இணைந்தவர்கள் அறிவார்கள். என்னுடன் தொடர்ந்து பயணிக்க விருப்பம் உடையவர்கள் இணையவும். தமிழம்.வலை இணையம் இதற்காகவே தன் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

அன்புடன்

தமிழ்க்கனல்

தமிழம் வலை - 9788552061 - pollachinasan@gmail.com - skype ID : pollachinasan1951 

http://www.thamizham.net -

by Swathi   on 30 Jun 2014  6 Comments
Tags: Tamil E-Book   Thamizham.net   தமிழ் மின்னூல்              
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
01-May-2018 10:20:44 P. SIVALINGAM said : Report Abuse
யாருக்கும் பயன்படாமல் பாதுகாத்து என்ன பயன். இருப்போரும் வருவோரும் பயன்பெற பகிர வழி செய்ய வேண்டும் . அனைத்து நூல்களையும் ஒன்றாக பகிராமல் பகுதி பகுதியாக பகிரலாம். எதுவுமே செய்யாமல் சேமிக்கிறேன் என்றால் அது தற்பெருமைகாகத்தான். நாய் கண்ட தெங்கம்பழம்போல் எதற்கும் பயன்படாமல்
 
25-Oct-2017 16:46:10 Balasubramanian said : Report Abuse
Ippove சொல்லுங்க
 
25-Oct-2017 16:43:00 Bala said : Report Abuse
Anbu ena thodangum paadal (kavithai vadivathil) கருத்துள்ளதாக
 
16-Sep-2017 08:29:24 sundaram said : Report Abuse
பெயர்களை மட்டும் பதிவிட்டு என்ன பயன்? மீடியாபெயர், ஆரசிவ ஆர்க் போன்றவை வேண்டும் அளவு பதிவிட அனுமதிக்கின்றன. தரவிறக்கம் கூடியதாக இவர் தனது தளத்தை மாற்றினால்தான் அது தமிழ் மற்றும் தமிழ் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். அல்லாத ஓன்று தனிமனிதனின் ஆர்வத்தை காட்டும் அல்லது வேறல்ல. சாமீ நாத அய்யரும், மதுரை தொகுப்பும் பதிவிட்டு தமிழ் தொண்டு புரிகின்றனர். இலங்கையின் நூலகம் வலை பதிவும், செல்லா, ஈகரை,தமிழ்நேசன்,சுபாஷ் சண்முக, மற்றும் ஒரத்தநாடு கார்த்திக்,பெண்மை டாட் காம் போன்றவை போற்ற தகுந்தவர்கள் என்பது என் கருத்து. பொள்ளாச்சி தமிழ் நேசன் தன்னிடம் உள்ள நூல்களை பதிவிடுவாரா! இதை அவருக்கு தெரிய படுத்துங்கள் சுந்தரம்
 
23-May-2017 04:51:24 Gurupiyari said : Report Abuse
Congratulation to Mr Natesan,pollachi.Continue your noble task
 
03-Apr-2015 10:51:54 vijayalakshmi said : Report Abuse
எனக்கு தமிழ் கட்டுரைகள் குழந்தைகளுக்கானது வேணும்.ஆறு,ஏழு வகுப்பு மாணவர்களுக்கனது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.