LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- தொழில்துறை சாதனையாளர்கள்

தமிழ் வாசகங்கள்-சுயத்தொழில்-தன்னம்பிக்கை இளைஞர்கள்

படித்துவிட்டு யார் வேலை கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில், நமக்குரிய வேலையை நாமே உருவாக்கிக்கொள்வது,  முடிந்தால் நம்மை சுற்றியுள்ள சிலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது என்பது பாராட்டப்படத்தக்க ஒன்றுதானே?   அப்படித்தான் பொறியியல் படித்த மூன்று இளைஞர்கள் தமிழ் சந்தையை அடிப்படையாகக் கொண்டு ஒரு சுயத்தொழிலை, அதுவும் இலவம் என்ற தமிழ் அடையாளத்தை உலகம் முழுதும் கொண்டு செல்ல களம் இறங்கியுள்ளார்கள். இந்தியாவில் நாஸ்காம் புள்ளிவிவரப்படி பொறியியல் படிக்கும் பட்டதாரிகளில் 12 சதவீதம் பேருக்கும், கலை-அறிவியல் படிக்கும் பட்டதாரிகளில் 8 சதவீதம் பேருக்கும் மட்டுமே வேலை கிடைக்கும் நிலை இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இம்மாதிரி வளர்ந்துவரும் சுயத்தொழில் முயற்சிகள் வெற்றியடையும்போது, அது பல இளைஞர்களின் ஆர்வத்தை தூண்டும், அதவும் ஆறு கோடிக்கு மேல் மக்கள் தொகை உள்ள தமிழ் சமூகம் நம் மொழி கலாச்சார அடையாளங்களைக்கொண்டு உருவாகும் நிருவனங்களுக்கு ஆதரவு தந்து நமக்குரிய சந்தையை நாமே வலுப்படுத்த வேண்டும் என்பது அவசியம். எந்த சமுதாயம் பொருளாதார வலிமையை கொண்டுள்ளதோ அதுவே இன்றைய உலகப் போட்டியில் நிலைத்து நிற்கும்.

 

​பரபரப்பான மாநகரான சென்னையைச் சேந்த இளைஞர்களின் வித்தியாசமான யோசனைதான் இந்த இலவம்.  ஓரே கல்லூரியை சேர்ந்த யுவராஜ், லெனின்​,​ கோபிநாத் ஆகிய மூவரும், 2012 ஆம் ஆண்டு கல்லூரியில் இருவர் இயந்திரவிலும் , ஒருவர் மென்பொருள் துறையிலும் படித்து   முடித்து பொறியியல் கல்லூரியில் இருந்து வெளியேறிய பின், என்ன தொழில் செய்வதென ஒவ்வொருவரும் ஒரு கனவுகளைவைத்திருந்தார்கள்.  

 

மூவரும் தங்களுக்குள் இருந்த தொழில் நோக்கங்களை விவாதித்​துக் ​கொண்டிருக்கும்போது பரபரப்பான சென்னை சாலை​யில்  பல இளைஞர்களும், இளைஞிகளும்  டி-சர்ட்டுகளை அணித்திருப்பது கண்ணில் பட அதில் இருக்கும் வாசகங்களை கவனிக்கிறார்கள்.  ஆனால் அவை எல்லாமே ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கிறது, அதிலும் சில வாசகங்கள் வக்கிரமாகவும் இருப்பதை கண்டனர். நாம் செய்யும் தொழில் லாபம் மட்டும் தருவதாக இல்லாமல் சமுதாயத்திற்க்கும்  பயன்தரவேண்டும் என்று நினைத்த மூவரும். இந்த டி-சர்ட்டுகளில் ஆங்கில வாசகங்களுக்கு பதில் அழகிய தமிழ் வார்தைகளை பதித்தால் என்ன ​ என்று ​ தோன்றியது. உலக மொழிகளிலே ​  பழமை வாய்ந்ததாகவும், மிக அழகிய மொழியாகிய செம்மொழியான தமிழ் மொழியின் மகன்களாக பிறந்துவிட்டு இதை ஏன் நாம் செய்யக்கூடாது என்ற பொறி தட்டுகிறது.

 

தமிழில் வாசகங்களுக்கா பஞ்சம்?  என்ற நம்பிக்கையில் களத்தில் இறங்குகிறார்கள். எல்லாம் சரி, படித்ததோ பொறியியல் தொழில் பற்றி எதுவும் தெரியாதே என்றபோது, கற்றுக்கொண்டு செய்வோம் என்று முடிவெடுத்த இவர்கள். உலகத்திற்கே டி-சர்ட் தயாரிக்கும் திருப்பூரில் டி-சர்டுகளை தயாரிக்க முடிவு செய்தனர். இதை எப்படி மக்களிடம் கொண்டு செல்வது என்று யோசிக்கும்போதுதான் இணையம் மூலம் இதை விற்கலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். இணையமே அதிவிரைவில் உலக தமிழர்களை இணைக்கும் பாலமாகவும் இளைஞர்களை ஈர்க்கும் விஷயமாக இருந்ததால் ​இணையதளத்தை வடிவமைக்க ஆரம்பித்தனர். எல்லாவற்றிர்க்கும் முன் பெயர் வைக்கவேண்டும். என்ன பெயர் வைக்கலாம் என்று கலந்தாசிக்கும்போது பெயர் வித்தியாசமாகவும், தமிழ் மொழியிலும், அதே சமயம் யாரும் உபயோகிக்காத பெயராகவும் இருக்கவேன்டும் என தீர்மானித்து, பல பெயர்களை பட்டியலிட்டு கடைசியில் "இலவம்" என பெயரை தெரிவு செய்து அதன் பெயரிலேயே இணையமும் ஆரம்பிக்கப்பட்டது. மூவரும் நடுத்தரவர்கத்தை சார்ந்தவர்கள், இந்த தொழிலில் பெரிய முதலீடு போடமுடியாது என்பதால். சிறிய வேலை முதல் பெரிய வேலை வரை இவர்களே கற்றுக் கொண்டு அதை செய்து  ​பணத்தை மிச்சபடுத்தி அதில் கிடைத்த அனுபவமே இவர்களை மேலும் பயணிக்க உதவியது.

 

​இணையமும் ​ முழுக்க முழுக்க இவர்களாலே வடிவமைக்கபட்டது. ஆடை​களில் ​வரும் வாசகங்களும், அதை அச்சிடுவது, வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பது என அனைத்து வேலைகளுமே மூவரும் மாறி மாறி பிரித்துகொண்டு செய்யத் தொடங்கினர். முகநூல், மின்னஞ்சல்  போன்றவற்றை விளம்பரங்களுக்கு பயன்படுத்தி அதன்மூலமே புதிய வாடிக்கையாளர்களை சம்பாதித்தனர். புதிய புதிய முயற்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக அறிமுக படுத்தி சோதனைகளில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.

 

இவர்கள் ஆடைகளில் பெரும்பாலும் பாரதியார், வள்ளுவர்,விவேகானந்தர், பாரதிதாசன்,  பெரியார், பூங்குன்றனார், தொல்காப்பியர் ஆகியோரின் வாசகங்களும், அவர்களைப் பற்றி பெருமைப் படுத்தும் வாசகங்களும் இடம் பிடித்து இருக்கின்றன. தமிழனாய் இருப்பதில் எவ்வளவு பெருமை என்று தமிழின் அருமை பெருமைகளை பறைசாற்றும் வாசகங்களும் இடம்பெற்று இருக்கின்றன. இலவத்தின் அடிப்படை நோக்கமே தமிழர்களை பெருமை படுத்தும் தமிழ் பேசும் ஆடைகளை தமிழ் நாட்டிலே தயாரித்து அதை உலகம் முழுக்க இருக்கும் மக்களுக்கு கொண்டுசேர்க்கவேண்டும் என்பதே. ​அதனால் ​ தான் இலவம் எனபது  "தமிழர்களால் தமிழர்களுக்கு தமிழில்" என்று போட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

 

இணைய வழி வியாபாரம் என்பதால், தமிழகம், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுதும் இருக்கும் தமிழர்கள் இதை வாங்க ​ஆர்வம் காட்டி வருகின்றனர். விரைவில் உலக அளவில் எல்லா நாடுகளிலும் ஒரு  ​தமிழ் ​ தயாரிப்பு ​இருக்கவேண்டும். அதிலும் குறிப்பாக உலகத்திற்க்கே ஆடை தயாரிக்கும் திருப்பூர், இதுவரைக்கும் ஒரு வியாபார குறியீட்டை உருவாக்கவில்லை என்ற குறையை இலவம் போக்கும் என்று நம்பிக்கை பொங்க கூறுகிறார்கள் இந்த இளைஞர்கள்.  இலவம் என்பது ஒரு தமிழனின் வியாபார குறியீடு என உலகம் பேசவேண்டும் என்ற உறுதியுடன் பேசும் இந்த இளைஞர்களின் தன்னம்பிக்கை வெற்றிபெற வலைத்தமிழின் சார்பாக வாழ்த்துகிறோம். மேலும் மேடைகள்தோறும ஆறு கோடி மக்களைக் கொண்ட தமிழன் தனக்கென்று தமிழ் அடையாளத்துடன் பல பொருள்களை உருவாக்கவேண்டும், ஒரு நுகர்வோராகவே மட்டுமே நாம் இருக்கிறோம் என்று முழங்கிவரும் வேளையில் இதுபோல் தோன்றும் சில நம்பிக்கை முயற்சிகளை தட்டிக்கொடுத்து வரவேற்போம்.   தமிழனின் தயாரிப்புகள் உலகச் சந்தையில் நமது குறியீட்டுடன் பவனி வரட்டும். எம் தமிழ் வாசகங்களை பயன்படுத்துவதை இளைஞர்கள் பெருமையாகக் கருதட்டும்.

 

தொடர்புகொள்ள:

www.ilavam.com
Ph:+91-9791083009
Chennai,TamilNadu,INDIA

www.ilavam.com

Ph:+91-9791136945 / 9791083099.

Chennai,TamilNadu,INDIA

 

 

 

வலைத்தமிழுக்காக,

இலக்கியன்

www.ilavam.comPh:+91-9791083009Chennai,TamilNadu,INDIA

by Swathi   on 23 May 2014  9 Comments
Tags: Tamil Engineers   Tamil T-Shirt   Tamil Brand T-Shirts   தமிழ் வாசகங்கள்   தமிழ் சட்டை   தமிழ் டி சர்ட்     
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் வாசகங்கள்-சுயத்தொழில்-தன்னம்பிக்கை இளைஞர்கள் தமிழ் வாசகங்கள்-சுயத்தொழில்-தன்னம்பிக்கை இளைஞர்கள்
கருத்துகள்
21-Nov-2018 15:26:35 செந்தில் said : Report Abuse
வணக்கம் மாலிமார் உங்கள் ஊரில் எந்த மாதிரி தேவைகள் உள்ளது எனற விபரத்தை கேட்டு அதன் மூலம் தாங்கள் ஆரம்பிக்கலாம்
 
30-Sep-2018 05:06:54 malimar said : Report Abuse
வணக்கம். எனக்கு சுய தொழில் தொடங்க ஆசை. என்ன தொழில் தோதான வேண்டும் என்பது பற்றி நல்ல. ஆலோசனைக் கூறவும். நன்றி மாலிமார்
 
24-Jun-2018 10:39:12 K..VAARAAGHAKIRI said : Report Abuse
எல்லோரும் தொழில் தொடங்கவும் சம்பாதிக்கவும் விரும்புகின்றார்கள் ஏளாவாய்ப்புகளும் இருந்தும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாதா சூழ்நிலையால் பல வருவயானை இழந்துள்ளோம் வலைதமிழ் .இதழ் உலக விபாரா தொடர்புகளை ஏற்படுத்தும் இதழாக மாறினால் பல லட்சம் குடும்பங்கள் மேன்மையடையும்
 
02-Oct-2017 10:18:54 VIVEKANANTHAN said : Report Abuse
வாழ்த்துக்கள் சகோதர்களே , முன்னேறுவோம் ,,,,, முன்னேற்றுவோம் ........................
 
30-Apr-2017 08:00:42 டி அன் டி தமிழ்செல்வன் said : Report Abuse
உங்களுடைய இந்த முயற்சி அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு புது ஆரம்பம் ... நிச்சயம் நீங்கள் புது வரலாறு படைப்பீர்கள் ... மேல்மேலும் வளர வாழ்த்துகிறோம் இப்படிக்கு டி அன் டி
 
05-Oct-2016 12:16:29 sathiskumar said : Report Abuse
வணக்கம் நண்பர்களே கண்டிப்பாக உங்கள் (தமிழன்) முயற்சி கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி அடையும் உங்கள் வித்தியாசமான முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் நீங்கள் வாடிக்கையாளர் கேட்கும் வாசகங்களை அச்சிட்டு தந்தால் தொழில் மிக விரைவாக வெற்றி அடையும்
 
07-Sep-2015 00:41:01 s.kiruthika said : Report Abuse
hi brothers, hands of your brilliyant idia,
 
11-Feb-2015 03:19:11 saravanan said : Report Abuse
எச்போர்ட் வியாபாரம் செய்ய ,என்ன பொருள் எங்கு விற்க ஆலோசனை ,மற்றும் விலை நிர்ணயம் செய்வது எப்படி என்று விளக்கவும்
 
30-Oct-2014 02:18:10 kavitha said : Report Abuse
சுயத்தொழில் செய்யனும் ஆசை ஆனால் என்ன தொழில் செய்வது என்று தெரியவில்லை ஒரு ஆலோசனை கூறுங்கள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.