LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015

மார்ச் 21, 2015 அன்று அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இயங்கி வரும் அவ்வை தமிழ் மையமானது ‘தமிழ் இசை விழா’வை ஃப்ரிஸ்கோ உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடத்தியது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மையத்தின் தலைவர் திரு. விவேக் வாசுதேவன் வரவேற்புரை ஆற்றினார்.

வீணா இசைப்பள்ளி, நாகலட்சுமி இசைப்பள்ளி, கர்நாட்டிகா இசைப்பள்ளி, சப்த ஸ்வரா இசைப்பள்ளி, லலிதா இசைப்பள்ளி மற்றும் கோஸ்பல் தேவாலய இசைக் குழுமம் ஆகியவற்றில் இசை பயிலும் குழந்தைகள் உட்பட சுமார் 90 குழந்தைகள் கலந்து கொண்டு மொத்தம் 32 தமிழிசைப் பாடல்களைப் பாடினர். பல்வேறு இராகங்களில் அமைந்த பக்திப் பாடல்கள், சங்க இலக்கியப்பாடல்கள், இசை அறிஞர்களின் பாடல்கள் எனப் பல பிரிவுகளிலிருந்தும் மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக இடைவிடாமல் தமிழிசைப் பாடல்கள் பாடப்பட்டது.

தமிழ் மீதும், தமிழிசை மீதும் தணியாத ஆர்வம் கொண்டு பல்வேறு அறப்பணிகளைச் செய்து வரும் புரவலர், தமிழிசைக் காவலர் திரு. பால் பாண்டியன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இவர் டல்லாஸ் தமிழ் அன்பர்களுடன் இணைந்து டல்லாஸ் தமிழ்ச்சங்கம் அமைத்தவர். அமெரிக்கத் தமிழ் அன்பர்களுடன் சேர்ந்து பல மாநிலங்களில் இருந்த தமிழ்ச்சங்கங்களை ஒன்றிணைத்துப் பெட்னா (Federation of Tamil Sangams of North America - FeTNA) என்ற பேரமைப்பை உருவாக்கியவர், அதே போல் தமிழக மாணவர்கள், பள்ளிகளுக்கு உதவும் தமிழ்நாடு அறக்கட்டளை அமைப்பையும் (Tamil Nadu Foundation - TNF) உருவாக்கியவர். பல தமிழ் அறிஞர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வந்து உரையாற்றும் வாய்ப்பு உருவாக்கியவர். தமிழிசை அறிஞர் வீ.ப.கா. சுந்தரம், உ.வே.சா பற்றி ஆவணப்படம் எடுத்த இயக்குநர் செகநாதன், இயக்குநர் பாரதிராசா, கவிப்பேரரசு வைரமுத்து, மேலாண்மை பொண்ணுசாமி உள்ளிட்டவர்களின் கலைப்பணிகளை பெட்னா அமைப்பின் வழியாக அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர். தமிழிசைக்கு எனத் தனியாக 'இன்னிசை அறக்கட்டளை"யை உருவாக்கியவர். அந்த அறக்கட்டளை மூலம் பல்வேறு ஆய்வுகளையும், தமிழிசைப் பேரகராதி உள்ளிட்ட நூல்களையும் வெளியிட உதவியவர். தெற்காசிய ஆய்வு மற்றும் தகவல்கள் நிறுவனம் (South Asia Research and Information Institute - SARII) என்ற அமைப்பை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிப் பல ஆய்வுக் கருத்தரங்குகளை ஆண்டு தோறும் நடத்தி வருபவர்.

திரு. பால் பாண்டியன் அவர்கள் தனது சிறப்புரையில் தமிழிசைக்கு நீண்ட நெடிய வரலாறு இருப்பதாகவும், தொல்காப்பியம் காலம் முதல் அதற்கான குறிப்புகள் இருப்பதாகவும், சங்க கால நூல்கள், காப்பியங்கள், சிலப்பதிகாரம் ஆகியவற்றில் நிறைய இசைக்குறிப்புகள் , இசைக்கருவிகள் பற்றிய தகவல்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இசைக்கு மொழி தேவையில்லாவிட்டாலும், மொழிக்கு இசை வேண்டும் எனவும், அதனால் தான் தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என மூன்று கூறுகளாக முத்தமிழாக வளர்ந்ததாகவும் குறிப்பிட்டார். எனவே இதைப் போல் தமிழிசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். டல்லாஸ் நகரில் அத்தகைய தமிழிசை நிகழ்ச்சியை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடத்தும் அவ்வை தமிழ் மையத்தின் முயற்சிகளைப் பாராட்டினார். டல்லாஸ் நகரில் தமிழிசை வளர தங்களது சிறப்பான பங்களிப்பைச் செய்து வரும் இசைப்பள்ளி ஆசிரியர்களைப் பாராட்டி அவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.

விழாவின் நிறைவாக, தமிழ் இசை விழாவில் பங்கேற்றுப் பாடல்களைப் பாடிய அனைத்துக் குழந்தைகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களது பெயர்கள் பொறிக்கப்பட்ட பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. பரிசுக் கோப்பைகளை ஓக்லகாமா மநிலத்தில் இருந்து விழாவிற்கு வந்திருந்த பெரியவர் திரு. மாசிலாமணி, டல்லாஸ் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திருமதி. கீதா அருணாச்சலம், அவ்வைத் தமிழ் மையத்தின் நிர்வாகிகள் விவேக் வாசுதேவன், மோகன் தண்டபானி, சங்கர் சண்முகசுந்தரம், கேசவன் ஶ்ரீரங்கம், ஜெபா செல்வராஜ், ஶ்ரீதர் இராகவேந்திரன்  ஆகியோர் வழங்கினர்.

இறுதியாக, அமைப்பின் செயலாளர் திரு. மோகன் தண்டபானி நன்றியுரை ஆற்றினார்.

விழாவின் அனைத்து நிகழ்வுகளையும் அவ்வைத் தமிழ் மையத்தின் மழலை நிலை ஆசிரியை திருமதி. அனிதா சங்கர் மற்றும் தன்னார்வலர் திருமதி. உமா விவேக் ஆகியோர் தொகுத்து நெறியாள்கை செய்து வழங்கினர். 20க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இவ்விழாவை வெற்றிகரமாக நடத்த கடந்த 6 வாரங்களாக வேலை செய்தனர்.

image1
by Swathi   on 25 Mar 2015  0 Comments
Tags: Tamil Music Festival   FeTNA   TNF   SARII   Avvai Tamil Center   அவ்வை தமிழ் சங்கம்   அவ்வை தமிழ் மையம்  
 தொடர்புடையவை-Related Articles
வட அமெரிக்க தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழாவில் திரு V.பொன்ராஜ் அவர்கள் ஆற்றிய உரையில் சில... வட அமெரிக்க தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழாவில் திரு V.பொன்ராஜ் அவர்கள் ஆற்றிய உரையில் சில...
தமிழ்க் கல்வி தமிழ்ப் பள்ளி என முழங்கிய பெட்னா தமிழ் விழா 2016 தமிழ்க் கல்வி தமிழ்ப் பள்ளி என முழங்கிய பெட்னா தமிழ் விழா 2016
வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !! வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !!
2015 பேரவையின் தமிழ் விழா தமிழிசை அறிஞர் பேராசிரியர் வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் நூற்றாணாடு விழாவாகக் கொண்டாடப்படுகிறது 2015 பேரவையின் தமிழ் விழா தமிழிசை அறிஞர் பேராசிரியர் வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் நூற்றாணாடு விழாவாகக் கொண்டாடப்படுகிறது
டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015 டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழகத்தில் நடத்திய  இரண்டாம் ஆண்டு தமிழ் இசை விழா வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழகத்தில் நடத்திய இரண்டாம் ஆண்டு தமிழ் இசை விழா
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின்(FETNA) நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின்(FETNA) நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA)  2014 தமிழ் விழா தமிழர் அடையாளங்களின் சங்கமமாக நடந்தேறியது.. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2014 தமிழ் விழா தமிழர் அடையாளங்களின் சங்கமமாக நடந்தேறியது..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.