பிஇ படித்த பட்டதாரிகள் 6 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு ஆசிரியராக பயிற்சிக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு
பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் இனி 6 முதல் 8 வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கணக்கு ஆசிரியர் ஆகலாம்,என்று தமிழக அரசாணை வெளியிட்டது .
பொறியியல் பட்ட படிப்பு முடித்தவர்கள் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். ஊருக்கு ஒருவர் இன்ஜினயர் என்று இருந்த காலம் போய் இப்பொழுது வீட்டுக்கு ஒருவராக மாறிவிட்டார்கள் . இதனால் வேலை என்பது எல்லோருக்கும் கிடைப்பது இல்லை.
ஆண்டு தோறும் லட்சம் பட்டதாரிகள் படித்து முடித்துவிட்டு வரும் போது சிலருக்கே படிப்புக்கு ஏற்ற வேலைகள் கிடைக்கின்றன. மற்றவர்கள் கிடைத்த வேலைகளை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக அரசு பொறியியல் பட்டதாரிகளின் நலனை கருத்தில் கொண்டு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
|