LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இந்தோனாசியாவில் உள்ள "சுரபயா" வில் வாழும் தமிழர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில்  முனைவர் விஸ்வநாதன் அவர்கள் கலந்துக் கொண்டு உரையாடினார்...

வி ஐ டி பல்கலைக் கழக வேந்தரும், தமிழர் முன்னேற்றத்திற்காக கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி சென்னையில் உருவாகிய "தமிழியக்கம்" அமைப்பின் தலைவருமான, மூத்த கல்வியாளர் முனைவர் விஸ்வநாதன் அவர்கள், இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான "சுரபயா" வில் வாழும் தமிழர்கள் ஏற்பாடு செய்த நிகழ்டசியில்  கலந்துகொண்டு உரையாடினார்.

சுமார் 17000 தீவுகளையும், 150 எரிமலைகளையும் கொண்ட நாடு இந்தோனேசியா. சுனாமி, பூகம்பம் போன்ற பல இயற்கை சீற்றங்களை அடிக்கடி எதிர்கொள்ளும் நாடும் இந்தோனேசியாதான்.

சீனா, இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்து மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இது.

நேற்றய தினம், நவம்பர் 7 ஆம் தேதி "சுரபயா" நகரில் உள்ள "சித்தாரா" உணவத்தில் நடைபெற்ற கலந்துரயாடல் நிகழ்சியில் 30 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டார்கள்.

ஆசியத் தமிழ்ச்சங்க தலைவர் இந்தோனேசியா விசாகன் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.  சுரபயா வாழ் மூத்த தமிழர் திரு கிருஷ்ண மூர்த்தி அவர்கள் முனைவர் விஸ்வநாதனுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்.

இதில் உரையாற்றிய முனைவர் விஸ்வநாதன்,  வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அவர்கள் பிள்ளைகளுக்கு தமிழர் மரபுகள், தொன்மை, செழிப்பான தமிழர் வரலாறு, கலை, இலக்கியம் , பண்பாடு ஆகியவற்றை கற்றுக்கொடுத்து, தமிழினத்தின் பெருமைகளை உணர்த்த வேண்டும் என்று கூறினார்.

முக்கியமாக, வெளிநாடு வாழ் தமிழர்கள், தமிழ் எழுத, படிக்க, பேச கூட முடியாத நிலமை பல நாடுகளில் உள்ளது, இதை மாற்ற வேண்டும்,  இதற்கான முயற்சிகளை கண்டிப்பாக "தமிழியக்கம்" எடுக்கும் என உறுதியளித்தார்.

மேலும், பல நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களின் கல்வித்தரம் இன்றும் ஒரு கேள்விக்குறி யாகத்தான் இருந்து வருகிறது. அவர்களின் கல்வித்தரத்தை உயர்தினால் மட்டுமே, நமது தமிழ்ச் சமுதாயம்,  பொருளாதார த்தில் உயர்ந்த சமுதாயமாகவும் சாதனைப் படைக்கும் சமுதாயமாகவும் வளரமுடியும்,  ஆகவே வி ஐ டி பல்கலைக்கழகம் அதற்கான அனைத்து முயற்சிகளிலும் வெளிநாட்டு தமிழர்களுக்கு உறுதுணை யாக இறுக்கும்.

வருடந்தோறும்  5 முதல் 10 தமிழ் வம்சாவளி இந்தோனேசிய மாணவர்களுக்கு  இலவச சேர்க்கை மற்றும் இலவச  கல்விக் கட்டணம் வழங்கும் என்று உறுதியளித்தார்.

"சுரபாயா தமிழ்ச்சங்கம்" என்ற தமிழ் அமைப்பை துவக்கி வைத்து பேசுகையில் விரைவில் ஒரு பிரமாண்டமான தமிழ் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்போம் என உறுதியளித்தார்..

by Swathi   on 11 Nov 2018  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர். ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர்.
கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா. கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா.
துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு. துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு.
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை. வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.
யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார். யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார்.
பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்! பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்!
அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள். அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள்.
நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன? நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன?
கருத்துகள்
12-Nov-2018 16:52:34 கே.வராகாகிரி said : Report Abuse
அயா வணக்கம் கடந்த 40 நாப்பது ஆண்டுகளாக பல அஈவுகள் செய்து மனிதர்களுக்கு ஏற்படும் நொய்யீகளை கண்டறிந்து இயற்கை உணவுகள் முலம் நோயீல்களை தீர்க்கும் வழிகளை கண்டறிந்துள்ளேன் தேவைப்படும் நபர்கள் பயன்படுத்திக்கவும்
 
12-Nov-2018 11:40:24 டாக்டர் அசோகன் இந்தோனேஷியா said : Report Abuse
பேரன்புமிக்க பெரியோர்கள் சான்றோர்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கம் . இந்தோனேசிய நாட்டில் பிறந்து , ஒரு பிரஜையாக வாழும் ஒரு சாதாரண மருத்துவன் , அசோகன் எழுதும் சில கருத்துக்கள் ( எழுத்துப் பிழைகள் இருக்கும், மண்ணிக்கவும் ) மதிப்பிற்குரிய சான்றோர் , " தமிழியைக்கம் " தலைவர் , முனைவர் ஐயா அவர்களே இந்தோனேசியாவில் வாழும் இந்நாட்டுப் பிரஜைகளில் - தமிழ்ப் படிக்க எழுதத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை ரொம்ப குறைவானது, ஏனனில் ஆர்வம் இல்லாமைதான் 1932லேயே என் தாத்தா ( தாயின் தந்தை ) மேடான் நகரில் தமிழ் ஆசிரியராக இருந்தவர் என்றுப் பதிவுச் செய்ய கடைமை இந்தப் பேரனுக்கு உண்டல்லவா , ஆம், அவர்தான் பெரியசாமி வாத்தியார் ஆவர் . அவரிடம் நான் " கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு " இந்நாட்டுப் பிரஜை குழந்தைகளுக்கு, தமிழ் பிடிப்பதர்க்கு மற்றும் உதவி செய்வதோடு அன்னவர்கள் மேல் படிப்புக்கான உதவிகளையும் வழங்கினால் மிக நன்றாக இருக்கும் என நினைக்கிறேன், நாடுகிறேன் அன்புக் கரங்களை .. சந்தர்ப்பம் கிடைத்தால் தங்களை நேராக கண்டு உரையாட வேண்டும் , ஆவலுடன் இருக்கிறேன் அன்புடன் மரு. குருசாமி அசோகன் ,
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.