LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் அக், 17,18ல் சென்னையில் நடைபெற இருக்கிறது !!

கணினி பயன்பாட்டாளர்கள் இடையே, தமிழ் எழுத்துருவின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வகையில் "தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் - 2015" வரும் 17, 18 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற இருக்கிறது.

இது குறித்து இந்த கருத்தரங்கை நடத்தும் கணித் தமிழ் சங்கத்தின் தலைவர் சொ.ஆனந்தன் கூறும்போது, தமிழ் எழுத்துருவின் பண்புகள்; ஆப்பிள், ஆண்ட்ராய்டு சாதனங்களில் தமிழ் எழுத்துருவின் அனுபவங்கள், அச்சு ஊடகம் மற்றும் காட்சித் திரையில் எழுத்துரு பிரச்னை; கலை விளம்பர ஊடகங்களில் எழுத்துரு ஆகிய தலைப்புகளில், விவாதங்கள் நடக்கின்றன.

மும்பை ஐ.ஐ.டி., பேராசிரியர் ஸ்ரீகுமார், மும்பை ஐ.ஐ.டி., டிசைன் பள்ளி பேராசிரியர் கிரிஸ் டல்வி, கவுஹாத்தி ஐ.ஐ.டி., பேராசிரியர் உதயகுமார் உள்ளிட்ட பல்வேறு கணினித் துறை, அச்சுத் துறை முன்னோடிகள், கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.

கணினியை பயன்படுத்தும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், பங்கேற்கலாம். கருத்தரங்கு நுழைவுக் கட்டணம், 1,500 ரூபாய். கணித் தமிழ் சங்கம், உத்தமம் உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 750 ரூபாய்; மாணவர்களுக்கு, 500 ரூபாய்.

முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே, கருத்தரங்கில் பங்கேற்க முடியும். இம்மாதம், 15ம் தேதிக்குள், முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவுக்கு, கணித் தமிழ் சங்கம், 2வது மாடி, 421 அண்ணா சாலை, சென்னை - 18 என்ற முகவரியை அணுகலாம்.

தொலைபேசி எண்கள் : 044-2435 5564, 94440 - 75051; இ.மெயில் tamiltypography@gmail.com.

மேலும் விவரங்களுக்கு  kanithamizh.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

by Swathi   on 07 Oct 2015  0 Comments
Tags: Tamil Typography Conference   தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம்   Tamil Fonts   தமிழ் எழுத்துரு           
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் அக், 17,18ல் சென்னையில் நடைபெற இருக்கிறது !! தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் அக், 17,18ல் சென்னையில் நடைபெற இருக்கிறது !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.