LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பன்னாடுகளில் வாழும் தமிழ் மகளிர் சார்பில் சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்விருக்கை அமைக்க ஒப்புதல் தெரிவித்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்..

பன்னாடுகளில் வாழும் தமிழ் மகளிர் சார்பில் சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆய்விருக்கை அமைக்க ஒப்புதல் தெரிவித்துள்ள உலகத் தமிழாராய்ச்சி இயக்குநர் கோ. விசயராகவன், தமிழாய்வுப் பணிகளுக்கு உலகத்தமிழர் அதிக அளவில் நிதி உதவி அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அமெரிக்கா, துபாய், பப்புவா கினியா, சுவிட்சர்லாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி, கனடா உட்பட பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மகளிர் ஒன்றிணைந்து ஐயை உலகத் தமிழ் மகளிர் மன்றம் என்ற அமைப்பின் பெயரில் தமிழ் வரலாறு, தமிழியல் சார் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடல் சார் தமிழியல் ஆய்வாளர் ஒரிசா பாலு வழிகாட்டலில் செயல்பட்டு வரும் இவ்வமைப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து தமிழ் வணிகமும் அதன் தொன்மையும் எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதை ஐயை திருமதி ஜானகி உள்ளிட்ட குழுவினர் மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர். 

சென்னை தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கைத் தொடங்கி வைத்த இயக்குநர் விசயராகவன், பிறர் கடல் அலையைக் கண்டு பயந்த போது, கடல் அலை மீது பயணம் செய்து உலகம் முழுதும் வணிகம் செய்தவன் தமிழன் என்றும் புகழாரம் சூட்டினார்.

கருத்தரங்கில் வெளி நாடுகளில் சிறப்பாகப் பணியாற்றிய ஐயை களுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டன.

பெண் ஆய்வறிஞர்கள் ஆய்வுக் கட்டுரைகள் வாசித்தனர்.

நர்த்தகி நடராஜ், துபாய் தமிழ்ச் சங்கம் ஜெயந்திமாலா சுரேஷ், பப்புவா கினியா ஆளுநர் மனைவி சுபா சசீந்தரன், நடிகர் பாண்டிய ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

by Swathi   on 07 Mar 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 3-ந் தேதி பள்ளிகள் தொடங்கி அன்றே புத்தகங்கள் கிடைக்கும்- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 3-ந் தேதி பள்ளிகள் தொடங்கி அன்றே புத்தகங்கள் கிடைக்கும்- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு: புதிய செயலிகள்- இணைய தளங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது! நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு: புதிய செயலிகள்- இணைய தளங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது!
நாடாளுமன்ற தேர்தல்- 18 சட்டமன்ற இடைத்தேர்தல்கள்: தமிழகத்தில்  ஏப்ரல் 18-ந் தேதி நடக்கிறது! நாடாளுமன்ற தேர்தல்- 18 சட்டமன்ற இடைத்தேர்தல்கள்: தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி நடக்கிறது!
வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு! வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு!
சென்னை- கொல்லம் தினசரி ரயில் சேவை 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது! சென்னை- கொல்லம் தினசரி ரயில் சேவை 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது!
இந்தியாவின் முதல் பெண் கல்வெட்டு ஆய்வாளர் : இந்தியாவின் முதல் பெண் கல்வெட்டு ஆய்வாளர் :
கின்னஸ் சாதனைக்காக சிதம்பரம் நடராஜர் கோயிலில் 7195 பேரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி! கின்னஸ் சாதனைக்காக சிதம்பரம் நடராஜர் கோயிலில் 7195 பேரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி!
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும்- தேசியக் கருத்தரங்கம் 20-ந் தேதி சென்னையில் நடக்கிறது! தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும்- தேசியக் கருத்தரங்கம் 20-ந் தேதி சென்னையில் நடக்கிறது!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.