LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

நல்ல தமிழில் எழுதுவோம் ஆரூர் பாஸ்கர்

குருவை மிஞ்சிய சீடன் யார்?

“நீங்கள் பாலு மகேந்திராவுக்கு ரசிகரா? இரசிகரா? “ எனத் தலைப்பிட்ட முந்தைய கட்டுரையில். தமிழில் ல,ள,ர,ற போன்ற எழுத்துகள் சொல்லின் முதலில் வராது. அதனால் அவற்றை அ,இ,உ சேர்த்து எழுதவேண்டும். ரசிகர் என்பதை இரசிகர் என்றும், (இ)ராமன், (அ)ரங்கன், (இ)லங்கை என்றும்  எழுத வேண்டும் எனப் பார்த்தோம்.

மேலும் ஆங்கில இலக்கணப்படி vowels எனும் A,E,I,O,U வில் தொடங்கும் சொல்லின் முன்னால் (an) சேர்ப்பது மரபு. அதுபோல தமிழிலும் உயிர் எழுத்துக்களில் (அ முதல் ஔ) தொடங்கும் சொல்லின் முன்னால் ஒன்று எனும் எண்ணிக்கையைக் குறிக்க "ஒரு" என்றில்லாமல் "ஓர்" பயன்படுத்த வேண்டும்  எனப் பார்த்தோம்.

சரி, இந்த மாதம் நீங்கள்குருவை மிஞ்சிய சீடன் யார்?  என பலத்த யோசனை செய்யத் தேவையில்லை. ஏனென்றால் அடிப்படையில் இந்தக் கேள்வியே பிழையானது. தனக்கு மிஞ்சிதான் தானதர்மம் எனும் சொல்லாடலை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதாவது மிச்சமிருப்பதே மிஞ்சியது. 

இன்று பலர் மிஞ்சிய , விஞ்சிய எனும் இரண்டு சொற்களையும் சரியான பதத்தில் பயன்படுத்துவதில்லை. குருவை விடச் சிறந்த சீடன் யார் எனும் வினாவை “குருவை விஞ்சிய சீடன் யார்? “ எனக் கேட்பதே சரி. 

“விஞ்சி“ அதாவது மேலோங்கி நிற்பதை விஞ்சியது என்போம். அதுபோல “அவன் தனக்கு மிஞ்சிய வல்லமை படைத்தவன் மூவுலகிலும் இல்லை“ எனக் கொக்கரித்தான் என எழுதுவதெல்லாம் பிழையானது. மாறாக “...விஞ்சிய வல்லமை உள்ளவன்..“ என்பதே சரி. “கற்பில் விஞ்சிய பெருமை கண்ணகிக்கா மாதவிக்கா ? “ எனும் பட்டிமன்றத் தலைப்புகளைக் கேள்விப்பட்டிருப்பீர்களே.

அதாவது மிஞ்சியது- மீதமிருப்பது. விஞ்சியது- மேலோங்கியது. அதனால், குருவை விஞ்சிய சீடன், தந்தையை விஞ்சிய தனயன் எனப் பிழையின்றி எழுதுவோம். பேசுவோம்.

by Swathi   on 06 Nov 2019  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
கருத்துகள்
06-Nov-2019 05:09:32 Balaji said : Report Abuse
தங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இன்றுள்ள காலத்தில் குருவை மிஞ்சின சிஷிய மார்கள் உள்ளனர்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.