LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

தமிழ் ....

நான்சோர்ந்து போகிறபோது

எனக்காக

இசைத்தாலாட்டு பாடும்

இளையராஜன் ...


என்

மனம் வருடி

இதயம் திருடுகிற

சுசீலாவும் ஜானகியும் ...


காலங்கள்

பல கடந்தும்

இன்னும் கணீர்

குரலில் செளந்தரராஜன்.....


யாரவது

ஜன்னல் சாத்தினால்

“ என்னைப் பார்த்து

ஒரு மேகம் “

எனக்குள் சுரம் பாடும்

ஜேசுதாஸ் ...


யாரேனும்

என்னைப் பார்த்து

சிரித்து விட்டால்

“ நிலாவென சிரிக்கும்

மலர்க்கொடியால்

இறந்து போனாலும்

இன்னும்

மறைந்து போகாத

ஜெயராமன் ....


அன்றாட வாழ்க்கை

என்னை அழுத்தினால்

“ ஆனந்த தேன் சிந்தும் “

மலேசியா வாசுதேவன் ....


ஏதேனும்

வேதனைகள் வந்தென்

மனக்கதவு தட்டினால்

“ முன்கதை சுருக்கம் “

சொல்லுகிற பாலகுமாரன் .....


எண்ணச் சுமைகள்

அதிகமானால்

“ இந்தக் குளத்தில்

கல்லேறிந்தவர்களோடு “

வைரமுத்து ...


சோகம் வந்தென்

முகம் அப்பிக்கொண்டால்

“ ஞானத்தை தேடுகிற “

கண்ணதாசன்....


சோம்பேறித்தனம் வந்தென்

முதுகமர்ந்தால்

“ உன்னால் முடியும் தம்பி

நம்பு “

நம்பிக்கை வளர்க்கிற

உதயமூர்த்தி....


வாழும் பொருட்டு

நாவை அடகு  கொண்ட

அந்த அயல்மொழிகள்பற்றி

ஆயிரம் சொல்லுங்கள் ....


சோர்ந்த போதும்

வீழ்ந்த போதும்

தாழ்ந்த போதும்

தடுமாறுகிற போதும் ....


தூக்கி நிறுத்தி

தோள்கொடுத்து

சிக்கொடுத்து

சீராக்கி

நேராக்குவதென்னவோ

தமிழ் தவிற

வேறேதுமில்லை ....

-      குகன்

by uma   on 07 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவின் ஒளியில்… நிலவின் ஒளியில்…
விடை தெரியாமல்.. விடை தெரியாமல்..
வானமும் வசப்படுமே! -சி.தமிழரசி , சென்னை வானமும் வசப்படுமே! -சி.தமிழரசி , சென்னை
புத்தரின் புன்னகை புத்தரின் புன்னகை
தேநீர் நேரம் தேநீர் நேரம்
ஏனெனில் என் பெயர் தமிழ். -ஆர்.பாலகிருஷ்ணன் ஏனெனில் என் பெயர் தமிழ். -ஆர்.பாலகிருஷ்ணன்
வர்ணஜாலம் வர்ணஜாலம்
நிழலாடும்  நினைவு - பாவலர் கருமலைத்தமிழாழன் நிழலாடும் நினைவு - பாவலர் கருமலைத்தமிழாழன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.