LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

அம்பேத்கர் நகரில் தீப்பிடித்த 500 குடிசைகள்

 

கடந்த ஜூலை 29 ஞாயிற்றுக்கிழமை சுமார் 7.30 மணிக்கு ஜாபர்கான்பேட்டை அம்பேத்கர் நகரில் சுமார் 500 வீடுகள் தீப்பற்றி எரிந்தது. லோக் சத்தா மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் மற்றும் நம் அமைப்புச் செயலாளர் சிவ.இளங்கோ ஜூலை 31 (நேற்று) அங்கு சென்று பார்வையிட்டு மக்களிடம் உரையாடி வந்தனர்.

இந்த காணொளியில் சில குறிப்பிடத்தக்க விசயங்கள்:
 
1. 2 நாட்களுக்கு மேலாகியும், பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் வார்டு உறுப்பினர் (கவுன்சிலர்), மாவட்ட ஆட்சியர், வட்டாச்சியர் ஆகியோரை பார்த்தும் அவர்களுக்கு அடிப்படை தேவைகள் கூட செய்து கொடுக்க யாரும் வரவில்லை.
2. அரசு கொடுத்த ரூ.5000 பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்று சேராமல் வேறு சிலருக்கு சென்றுள்ளது.

சந்தேகிக்கப்பட வேண்டிய விசயம்:
ஒரு மாத காலத்திற்கு முன் இங்குள்ள குடிசைகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு "Token for Biometric Survey" வழங்கப்பட்டுள்ளது.

மனதை துன்புறுத்தும் விசயம்:
1. நிறைய குடும்ப அட்டைகள் எரிந்துபோயுள்ளது.
2. புதிதாக வாங்கப்பட்டு பிரிக்காமல் வைத்திருந்த தையல் விசைப்பொறிகள் முழுவதும் எரிந்துபோயுள்ளன.
3. காணொளியில் கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்ணின் பட்ட சான்றிதழ் எரிந்துபோயுள்ளது.
4. எல்லோரும் மாற்று துணியில்லாமல் இருக்கிறார்கள். (குழந்தைகள் உட்பட)

இதைப் பார்க்கும் நண்பர்கள் ஏதாவது வகையில் உதவி செய்ய நினைத்தால் தங்கள் கருத்து பகிரவும். உங்கள் கருத்துகளை வைத்து அடுத்த கட்ட (உடனடியாக செய்யக்கூடிய) நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.


ஜெகதீஸ்வரன்

லோக் சத்தா 

djagadhees@tn.loksatta.org

LSP's visit to Ambedkar Nagar where around 500 huts was destroyed in a Fire Accident

 

IMP Things in the Video:
1. Even after 2 days, irrespective of the victims meeting their councillor, collector and Thashildhar nothing much has happened. They even don't have a bedsheet to sleep on.
2. Rs.5000 that was granted by the Govt to a family has not reached the right people.
Things that arouse Doubts:
1. Around a month back, the area was surveyed and everybody was given a token called "Token for Biometric Survey"

Things that are disturbing:
1. Most of the Ration cards are burnt.
2. Some of the new unpacked Tailoring machines are burnt in fire.
3. Degree certificate of the ladie with the child is burnt.
4. None of them have clothes to change (incl many Children)

If you think something can be done (for immediate relief), we are happy to know your thoughts and act accordingly.

 

 

by Swathi   on 01 Aug 2012  0 Comments
Tags: fire Accident                    
 தொடர்புடையவை-Related Articles
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.