தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளில் 1330 இடங்கள் உள்ளன. இந்த இளநிலை படிப்புகளில் சேருவதற்காக ஆன்லைனில் பதிவு செய்யும் முறை நேற்று தொடங்கியது. அதன்படி தமிழ்நாடு பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து, முதன்மையர் மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 641003 என்ற முகவரிக்கு ஜூன் 7-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவு செய்தபின், விண்ணப்பக் கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கியின் அனைத்து கிளைகளிலும் ரசீது மூலம் வங்கிக் கட்டணம் உள்பட பொதுப் பிரிவினர் ரூ.625, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.325 செலுத்த வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0422-6611345-346 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|