LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழ்நாடு நாள்!

தமிழ்நாடு நாள்!

1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாளன்று, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதராஸ் மாகாணம் (Madras Presidency) என்ற பெயரில் இணைந்திருந்த மதராஸ், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களும் மொழிவாரி மாநிலங்களாகத் தனித்தனியே பிரிக்கப்பட்டன.

ஆந்திரா இந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றது. கேரளா இதனைக் ’கேரளப் பிறவிதினம்’ என்றும் கர்நாடகா ’கன்னட ராஜயோத்ஸவா’ என்றும் பெயரிட்டுக் கொண்டாடிவருகின்றன. தமிழர்களாகிய நாமும் ’தமிழ்நாடு நாள்’ என்று இதனை மகிழ்வுடன் கொண்டாடிவருகின்றோம்.

மொழிவாரியாக நான்கு மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பும், தமிழ்நாடு ’மதராஸ் மாநிலம்’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது.  மதராசைத் தமிழ்நாடாக மாற்றப் போராடிய போராளிகள்தாம் எத்தனை பேர்! 

சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்கள் மதராஸ் மாநிலத்தைத் தமிழ்நாடு எனப் பெயர்மாற்றம் செய்யவேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்துக் கடுமையாகப் போராடினார்.

தியாகி சங்கரலிங்கனார் தமிழகத்துக்கு மதராஸ் எனும் பெயர் இருத்தல் கூடாது! தமிழ்நாடு என்றே பெயர்வைக்க வேண்டும் எனும் கொள்கையோடு, 27.07.1956இல் விருதுநகர் தேசபந்துத் திடலில் ’உயிர் பெரிதன்று – மானமே பெரிது’ என்ற முழக்கத்தை முன்வைத்து 76 நாள்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்தார். 

ஈதொப்ப, தமிழ்நாடு எனும் பெயர் மாற்றத்திற்காகச் சட்டமன்றத்தில் முழங்கிய தோழர் ஜீவா, கேரளத்தோடு இணைந்திருந்த குமரி மாவட்டத்தைத் தமிழகத்தோடு இணைக்கவேண்டும் என்று களமாடி வென்ற ’குமரித் தந்தை’ மார்ஷல் நேசமணி, நேசமணியைப் போலவே தெற்கெல்லைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட குஞ்சன் நாடார், திருத்தணியைத் தமிழகத்தோடு இணைக்கப்போராடி மீட்டதால் ’தணிகை மீட்ட தளபதி’ என்றழைக்கப்பட்ட கே.விநாயகம், சித்தூர் மாவட்டத்தில் வசித்துவந்த தமிழர்களைத் தெலுங்குமொழி பேசுவோராக மாற்றிவிட முனைந்த ஆந்திரத்தின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி, அவர்களுக்குத் தமிழ்மொழிக் கல்வி அளித்த ’மாத்தமிழர் மங்கலங்கிழார்’ என்று பலருடைய அயரா உழைப்பும் தியாகமும் இந்நாளில் நன்றியோடு நினைவுகூரத்தக்கதாகும். 

இத்துணைப் பேரின் கனவுக்கும், இடைவிடாப் போராட்டத்துக்கும் பலன் கிடைத்தது அறிஞர் அண்ணாவின் கழக ஆட்சியில்! அவர்தாம் மதராஸ் மாநிலத்தைத் தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்து வரலாற்றில் இடம்பிடித்தார். 

தமிழ்நாடு கண்ட நல்லுள்ளங்கள் அனைத்தையும் இந்நாளில் போற்றி வாழ்த்துவோம்! 

 

-மேகலா இராமமூர்த்தி , புளோரிடா, அமெரிக்கா 

by Swathi   on 01 Nov 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.