LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வருமான வரித்துறைக்கு புதிய இணையத்தளம் !!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருமானவரி பற்றிய தகவல்களுக்கு புதிய இணையதளம்(www.tnincometax.gov.in) நேற்று தொடங்கப்பட்டது. ஒரு வாரத்தில் இந்த இணையதளம் முழு வீச்சில் செயல்படும் என முதன்மை ஆணையர் தெரிவித்துள்ளார்.


புதிய இணையதளம் குறித்து, வருமானவரி துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி கூறியதாவது, இந்த புதிய இணையதளத்தில் அனைத்து உத்தரவுகள், சுற்றறிக்கைகள், பயிற்சி வகுப்புகள், செய்திகள், நடப்புகள், மேல்முறையீட்டு வழக்குகள் பற்றிய விவரங்கள் உள்பட பல்வேறு தகவல்களும் அடங்கியுள்ளன.


வருமானவரி தொடர்பான சலுகைகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. மேலும் இந்த இணையதளத்தில், வருமான வரித்துறையின் தலைமையிடமான டெல்லி இணையதளத்தில் உள்ள தகவல்களும் இதில் இடம்பெற்றிருக்கும். இதில் ஒப்பந்த கோரிக்கைகளை டவுன்லோடு செய்து கொள்ளலாம். 


வருமானவரி துறை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மற்றும் இணையதள முகவரியையும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம் எங்களுக்கும், பொதுமக்களுக்கும் பணிகள் சுலபமாகும். தற்போது இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த இணையதளம் முழு வீச்சில் செயல்படும் என வருமானவரி துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி கூறியுள்ளார்.

by Swathi   on 19 Feb 2014  0 Comments
Tags: வருமான வரித்துறை   இணையதளம்   வருமான வரி   Income Tax   Tamilnadu Income Tax   tnincometax     
 தொடர்புடையவை-Related Articles
வருமான வரித்துறைக்கு புதிய இணையத்தளம் !! வருமான வரித்துறைக்கு புதிய இணையத்தளம் !!
விரைவில் அமேசானில் பொருள் வாங்கினால் குட்டி விமானம் மூலம் டெலிவரி !! விரைவில் அமேசானில் பொருள் வாங்கினால் குட்டி விமானம் மூலம் டெலிவரி !!
ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா படத்தயாரிப்பளர்கள் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரைடு !!! ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா படத்தயாரிப்பளர்கள் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரைடு !!!
இணையதளங்களில் தேர்தல் பிரச்சாரம் : புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம் !! இணையதளங்களில் தேர்தல் பிரச்சாரம் : புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.