LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

நான் பார்த்த தமிழகத் தலைவர்கள்

*நான் பார்த்த தமிழகத் தலைவர்கள். *
-------------------------------------
இன்றைக்கு இந்த கருப்பு வெள்ளை அரிய படத்தை பார்க்க நேர்ந்தது. இது தந்தை பெரியார் மறைவின்போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

இந்த படத்தில் பெருந்தலைவர் காமராஜர், தலைவர் கலைஞர், எம்.ஜி,ஆர், ஈ.வி.கே.சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர், கே.ஏ.மதியழகன், ப.உ.சண்முகம், ஏ.வி.பி.ஆசைத்தம்பி போன்ற ஆளுமைகள் ஒரு சேர இருக்கும் காட்சி. இதில் கே.ஏ.மதியழகன், ப.உ.சண்முகம் ஆகியோருடன் தொடர்போ, அறிமுகமோ எனக்கு கிடையாது. ஆனால், மற்றவர்களோடு என்னை பெயர் சொல்லி அழைக்கப்படும் அளவிற்கு அறிமுகமும், அவர்கள் வழங்கிய பணிகளையும் செய்துள்ளேன். நான் அறிந்த தலைவர்களுள் பிரபாகரன் மட்டும் இங்கில்லை. அவரின் காலக்கட்டம் அப்போது இங்கே எழவில்லை.

பெருந்தலைவர் காமராஜர் என்னை கோவில்பட்டி தம்பி என்றும், தலைவர் கலைஞர் என்னை இராதா என்றும், எம்.ஜி.ஆர் வக்கீல் என்றும் அழைப்பார்கள். ஈ.வி.கே. சம்பத் அவர்களுடன் நன்கு அறிமுகம். நெடுமாறனோடு நான் அரசியலில் களப்பணியாற்றும போது சம்பத் அவர்கள் என்னை தம்பி என்றே அழைப்பார். நாவலர் அவர்கள் நான் தினமணியில் எழுதிய கட்டுரைகளை படித்துவிட்டு, அவரை நேரில் சந்திக்கும் போது பாராட்டுவதும் உண்டு. கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியரை சந்திக்கும் போதெல்லாம் உங்கள் கட்டுரைகளை படித்தேன். பொதுத்தளத்தில் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று அடிக்கடி ஆலோசனை சொல்வார். ஏ.வி.கே. ஆசைத்தம்பி எனது பக்கத்து ஊரான விருதுநகரைச் சேர்ந்தவர். நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் வேலு மெஸ்சின் அருகில் அவரது வீடு உள்ளது. அவரை சந்திக்கும் போதெல்லாம் விருதுநகர், சாத்தூர் பகுதிகளைப் பற்றி கேட்பது வாடிக்கை. தொடர்ந்து புகைபிடித்துக்கொண்டே இருப்பார். அது தான் அவருக்கு ஆபத்தாக முடிந்தது.

பொது வாழ்வில் 48 ஆண்டுகளில் நான் பார்த்த இந்த அரசியல் தலைவர்களோடு பழகியது இன்றும் பசுமையாக நினைவுகள் உள்ளன. இப்படி ஆளுமையான தலைவர்களோடு அறிமுகமாகி அன்பு பெற்றதே பெரும் வரம் மட்டுமல்ல. நான் செய்த அரசியல் தவத்தின் கொடையாகும். இதை தாண்டி வேறு என்ன அங்கீகாரங்கள் வேண்டும்.

தமிழகத்தில் அரசியல் மனமாச்சரியங்களை கடந்து இப்படி தலைவர்களை அப்போது ஒருங்கிணைந்து பார்த்தது இன்றைய வரலாறு.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

by Swathi   on 07 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி
அரசியல் பேசுங்கள் ! அரசியல் பேசுங்கள் !
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள் நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்
பெரியாரும்,சிவாஜியும் ! பெரியாரும்,சிவாஜியும் !
சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா? சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?
ஏன் இப்படி ஆனோம்...? ஏன் இப்படி ஆனோம்...?
ஜெயகாந்தனும், கலைஞரும்! -எழுத்தாளர்  சாவித்திரி கண்ணன் ஜெயகாந்தனும், கலைஞரும்! -எழுத்தாளர் சாவித்திரி கண்ணன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.