LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

காலராவை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்-ஸ்டாலின்

 

சென்னை, ஜூலை 27 : மு.க. ஸ்டாலின் தனது சட்டமன்றத் தொகுதியான கொளத்தூர் பகுதிக்குச் சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
அங்கு பத்திரிகையாளர்களச் சந்தித்த ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன். ஆனால், நிதி ஒதுக்கீடு செய்தும், மாநகராட்சி முறையாக ஆயத்த வேலைகளைக் கூடப் பார்க்கவில்லை என்றார். கொளத்தூர் தொகுதியில் 10, 12 இடங்களில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை இன்று பார்வையிட்டேன். பொதுமக்கள் என்னிடம் கலர் கலராக கழிவு நீர் குடிநீரில் கலந்திருப்பதை பாட்டில்களில் பிடித்து என்னிடம் காட்டினர்கள். புகார் செய்யுமாறு அறிவிக்கப்பட்ட தொலைபேசி எண்களில் புகார் செய்தால் அதிகாரிகள் தொலைபேசியை எடுப்பதே இல்லை என்றும் மக்கள் தெரிவித்தனர். குடிநீரில் கழிவு நீர் கலப்பது, குப்பைகள் சரியாக அள்ளப்படாமல் இருப்பதால் காலரா பரவிடக் காரணமாக உள்ளது என்றார்.
மேலும், சென்னையில் காலரா இல்லை என்று மேயர் சைதை துரைசாமி கூறுகிறார். ஆனால் தினமும் 4, 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். கடந்த 6 மாதங்களில் மட்டும் 29  பேர் காலராவினாலும், 7 பேர் வயிற்றுப் போக்கினாலும் உயிர்ப்பலி ஆகியுள்ளனர் என ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று ஒரு நாள் மட்டும் 27 பேர் மருத்துமனையில் அனுமதி என தமிழ் நாளிதழ்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்சினையை தீர்ப்பது என் வேலை அல்ல. எம்.எல்.ஏ.வின் வேலை என்று பொறுப்பின்றி மேயர் பேசியிருக்கிறார். முதல்வர் ஜெயலலிதாவோ 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மலைவாசத்தலமான கொடநாட்டில் இருக்கிறார். அவருக்கு ஈ, கொசு, காலரா பற்றி தெரிய வாய்ப்பில்லை. அப்படியே தெரிந்தாலும் ஹெலிகாப்டரில்தான் வந்து பார்வையிடுவார்.காலரா பரவாமல் தடுக்க மாநகராட்சி உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் மக்களை ஒன்றுதிரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவேன் என்று கூறியுள்ளார் ஸ்டாலின். 
நாங்கள் தவறான பிரச்சாரம் செய்வதாக மேயர் துரைசாமி கூறியதால் இன்று நேரில் வந்து பார்வையிட்டேன். இந்தக் குறைகளைப் போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும். 

சென்னை, ஜூலை 27 :

மு.க. ஸ்டாலின் தனது சட்டமன்றத் தொகுதியான கொளத்தூர் பகுதிக்குச் சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அங்கு பத்திரிகையாளர்களச் சந்தித்த ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்துள்ளேன். ஆனால், நிதி ஒதுக்கீடு செய்தும், மாநகராட்சி முறையாக ஆயத்த வேலைகளைக் கூடப் பார்க்கவில்லை என்றார். கொளத்தூர் தொகுதியில் 10, 12 இடங்களில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை இன்று பார்வையிட்டேன். பொதுமக்கள் என்னிடம் கலர் கலராக கழிவு நீர் குடிநீரில் கலந்திருப்பதை பாட்டில்களில் பிடித்து என்னிடம் காட்டினர்கள்.

புகார் செய்யுமாறு அறிவிக்கப்பட்ட தொலைபேசி எண்களில் புகார் செய்தால் அதிகாரிகள் தொலைபேசியை எடுப்பதே இல்லை என்றும் மக்கள் தெரிவித்தனர். குடிநீரில் கழிவு நீர் கலப்பது, குப்பைகள் சரியாக அள்ளப்படாமல் இருப்பதால் காலரா பரவிடக் காரணமாக உள்ளது என்றார். மேலும், சென்னையில் காலரா இல்லை என்று மேயர் சைதை துரைசாமி கூறுகிறார். ஆனால் தினமும் 4, 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். கடந்த 6 மாதங்களில் மட்டும் 29  பேர் காலராவினாலும், 7 பேர் வயிற்றுப் போக்கினாலும் உயிர்ப்பலி ஆகியுள்ளனர் என ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று ஒரு நாள் மட்டும் 27 பேர் மருத்துமனையில் அனுமதி என தமிழ் நாளிதழ்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்சினையை தீர்ப்பது என் வேலை அல்ல. எம்.எல்.ஏ.வின் வேலை என்று பொறுப்பின்றி மேயர் பேசியிருக்கிறார். முதல்வர் ஜெயலலிதாவோ 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மலைவாசத்தலமான கொடநாட்டில் இருக்கிறார். அவருக்கு ஈ, கொசு, காலரா பற்றி தெரிய வாய்ப்பில்லை.

அப்படியே தெரிந்தாலும் ஹெலிகாப்டரில்தான் வந்து பார்வையிடுவார்.காலரா பரவாமல் தடுக்க மாநகராட்சி உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் மக்களை ஒன்றுதிரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவேன் என்று கூறியுள்ளார் ஸ்டாலின். நாங்கள் தவறான பிரச்சாரம் செய்வதாக மேயர் துரைசாமி கூறியதால் இன்று நேரில் வந்து பார்வையிட்டேன். இந்தக் குறைகளைப் போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும். 

 

by Swathi   on 27 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.