LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்காவில் கூடைப்பந்து விளையாட்டில் சாதித்துவரும் அமெரிக்கத்தமிழர் வருண் ராம்...

வடஅமெரிக்காவில் முதல் தலைமுறைத் தமிழர்கள் ஓரளவு தங்களை நிலைநிறுத்திக்கொண்டு அடுத்த தலைமுறையை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்கள். அதில் பலர் இன்று அமெரிக்காவின் பல துறைகளில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். குறிப்பாக மருத்துவம், விஞ்ஞானம், ஆராய்ச்சி, தகவல் தொழில் நுட்பம், கணினி, கல்வி  முதலிய துறைகளில் முன்னேறி தங்களுக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்து வருகிறார்கள். 


இப்படி தமிழ்க் குழந்தைகள் பல துறைகளில் முன்னேறி வருவது நமது தமிழினத்திற்குப் பெருமை. வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தை சார்ந்த திரு. இராமசாமி மற்றும் முனைவர் சாந்தினி அவர்களின் மகன் வருண் ராம் அமெரிக்கக் கூடைப்பந்து விளையாட்டில் மிக்க ஆர்வம் உடையவர். இவர் படிக்கும் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் கல்லூரியில் உள்ள கூடைப்பந்து விளையாட்டு அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அமெரிக்காவில் கல்லூரி அணிகளுக்கு இடையே நடக்கும் கூடைப்பந்து போட்டிகள் மிகப் பிரபலம். அதிலும் குறிப்பாக இந்த அணியில் இடம் பெற  6.1/6.2/6.3 அடி உயரம், நல்ல கடுமையான உடல்வாகு எல்லாம் இருக்க வேண்டும்.இது போன்ற விளையாட்டுகளில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களே மிக அதிகமாக விளையாடுவார்கள். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இந்த விளையாட்டில், தமிழர் இளைஞர் ஒருவர் இந்த அணியில் இடம் பெற்று ஆடுகிறார் என்றால் நமக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சி. வருண் கல்லூரியில் நன்கும் படிக்கிறார். அவருடைய கடந்த பல வருட கடுமையான பயிற்சிக்கு முழுக்க முழுக்க அவரது பெற்றோர் உறுதுணையாக இருக்கிறார்கள். 


வருண் ராம் மேலும் பல வெற்றிகள் பெற்று அமெரிக்க விளையாட்டில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள அனைத்து தமிழர்களும் வாழ்த்துவோம்... 

 

About Varun Ram...As a Junior (2013-14): Played in season-high 18 minutes versus Christian Abilene (11/13)...made Maryland debut in first half against #19 UConn (11/8), posting one assist.As a Sophomore (2012-13): Sat out due to NCAA transfer rules.BEFORE MARYLAND: Spent one season at Trinity College (Conn.) where he played point guard for head coach Jamie Cosgrove... named the MVP of the Trinity College Tournament and UMass Boston Tournament... a three-year letterwinner, two-year starter and two-year captain at River Hill High School.PERSONAL: Parents are Kolandavel and Santhini Ramasamy... Has a sister, Anita, who graduated Phi Beta Kappa from Johns Hopkins... Graduated from River Hill High School in 2010 with a 4.56 GPA... Says his craziest ambition is to play on the Indian National Team. Majoring in Physiology and Neurobiology.

 

Varun in virgin Island 

http://www.washingtonpost.com/blogs/terrapins-insider/wp/2013/10/25/former-walk-on-varun-ram-defies-expectations-earns-scholarship-for-terps/

by Swathi   on 28 Nov 2013  0 Comments
Tags: Tamizhar   Varun Ram   College Basketball   வருண் ராம்   அமெரிக்க தமிழர்   வடஅமெரிக்கா     
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்க தமிழர் ஆரோக்கியசாமிக்கு நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும் மார்கோனி பரிசு !! அமெரிக்க தமிழர் ஆரோக்கியசாமிக்கு நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும் மார்கோனி பரிசு !!
அமெரிக்காவில் கூடைப்பந்து விளையாட்டில் சாதித்துவரும் அமெரிக்கத்தமிழர்  வருண் ராம்... அமெரிக்காவில் கூடைப்பந்து விளையாட்டில் சாதித்துவரும் அமெரிக்கத்தமிழர் வருண் ராம்...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.