தாட்டா (Tata) குழுமங்களின் தலைவர் (Chairman of Tata Sons), முதன் முதலாக தாட்டாவின் குடும்பத்தினர் அல்லாதவர் அக்குழுமத்தின் தலைவராக இருப்பவர் திரு நடராசன் சந்திரசேகர் அவர்களே! இவர் நாமக்கல்லில் மோகனூரில் தமிழ்வழி பள்ளிக்கல்வி கற்றவர். கல்லூரிப்படிப்பைத் திருச்சிறாப்பள்ளியில் படித்தவர். இவரைத் செப்டம்பர் 5, 2018 அன்று தொரண்டோவில் Invest India என்னும் கருத்தரங்கில் நேரில் சந்தித்து ஒரு சில மணித்துளிகள் பேச இயன்றது. மோகனூரையும் அருகே உள்ள ஊர்கள் சிலவற்றையும் என் குழந்தைப் பருவம் முதல் அறிவேன் என்பதால் அவருடன் இதுபற்றியும் பேசவும் இயன்றது. இனிய முகத்தினர், கூர்மையான அறிவினர், முன்னாண்மை (leadership) நிறுவி புகழ் ஈட்டியவர். தமிழ்வழி படித்து உயர்ந்தவர்களில் முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியவர். தாட்டா குழும நிறுவனங்கள் ஏறத்தாழ 100 உள்ளன. இவை அனைத்துக்கும் தலைவர் இவர். இக்குழுமத்தின் பொதுச்சந்தையில் உள்ள 29 தொழிலகங்களின் சந்தை மதிப்பு மட்டும் 150+ பி'ல்லியன் அமெரிக்க வெள்ளி ஆகும். தமிழில் படித்தால் முன்னேறமுடியாது என்று பொய்ப்பரப்புரை செய்வோர்களை நம்பாதீர்கள்.
#தமிழ் #தமிழ்வழிக்கல்வி #நடராசன்_சந்திரசேகர்
(படம் விக்கிப்பீடியா; படக்கலைஞர்: Harshdeepsingh12)