கட்டுமானத்துறையில் மிகவும் பிரபலமாக விளங்கும் பன்னாட்டு நிறுவனம் எல்&டி.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாருக்கான பல்வேறு கட்டுமான வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது. மேலும், தன்னுடைய வேலைகளை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து அவற்றை இந்தியா மற்றும் பன்னாட்டுச் சிறு நிறுவனங்களுக்குக் கொடுத்து துணை ஒப்பந்தக்காரர்களாகக் கொண்டுள்ளது.
ஆனால், இதற்காக அரசுக்குச் செலுத்த வேண்டிய சேவை வரியினை எல்&டி நிறுவனமானது செலுத்தவில்லை என்பதை மத்திய வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால், சென்னையிலுள்ள, எல்&டி நிறுவனத்தின், கட்டுமானப் பிரிவு அலுவலகம் மற்றும் 100க்கும் மேற்பட்ட, துணை ஒப்பந்ததாரர்கள் வீடுகள் ஆகியவைகளில் சோதனை நடத்தப்பட்டது.
எல்&டி செய்துள்ள வரி ஏய்ப்பின் மொத்த மதிப்புத் தொகை சுமார் நூறு கோடிக்கு மேல் இருக்கலாம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
|