LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    மரபு-தற்சார்பு வாழ்வியல் Print Friendly and PDF

தடம் புரண்டவர்கள் வாழ்வில் தடம் பதிக்கும் "தடம்" அமைப்பின் பணிகளைப் போற்றுவோம்!

சிறப்பு நேர்காணல்:

கஜா புயல், காவிரி டெல்டாப் பகுதிகளில் ஏற்படுத்திய பாதிப்பை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அப்பகுதியைச் சேர்ந்த ஒவ்வொருவருமே தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மாதங்கள் பல கடந்தாலும் இன்னமும் அவர்கள் வாழ்வாதாரம் முழுவதும் மாறாத நிலை.   

வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கான மாற்று வாழ்வாதாரத்தை சமூக அக்கறை உள்ள பலர்  உருவாக்கி வருகின்றனர். அவர்களில் குறிப்பிட வேண்டியவர்கள் தடம் அமைப்பினர். இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள 'டெல்டா மறுகட்டமைப்பு குழு'வின் ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரனிடம் வலைத்தமிழ் சார்பில் பேசினோம்.

கேள்வி: "தடம்"  அமைப்பு  பற்றிய சிந்தனை எப்போது தோன்றியது?

பதில்: கஜா போன்ற ஒவ்வொரு பேரிடரும் நமக்கு பல துயரங்களைத் தருகின்றன. ஆனால் ஒவ்வொரு துயரத்தின் முடிவிலும் சில வாய்ப்புகளும் நமக்கு சேர்ந்தே வரும்.அந்த வாய்ப்புகளை நாம் எப்படி பார்க்கிறோம் என்பது மிக முக்கியமான கேள்வி.

கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், மறுகட்டமைப்பு ஆகியவை செய்யும்பொழுது, தோன்றியதே நமது, "தடம்" அமைப்பு பற்றிய எண்ணங்கள். டெல்டா மறுகட்டமைப்பு குழுவில் ஒரு பகுதியாக மாற்று வாழ்வாதாரத்திற்கான பணி செய்கிறோம். அதற்காக Green Wish Foundation மற்றும் நாங்கள் எடுத்த முயற்சியே இந்த " தடம்" அமைப்பு.

கேள்வி: "தடம்" தொடங்கப் பட்டதன் நோக்கம் என்ன?

பதில்: "தடம்" தொடங்கும் முன்பாக, நாங்கள் மிகவும் யோசித்து மக்களிடம் உறுதி அளித்த ஒரு விஷயம் - "உங்களுக்கான 'மாற்று வாழ்வாதாரத்தை' உங்களின் வசிப்பிடத்திலேயே உருவாக்குவோம்" என்பது தான்.

கேள்வி: "தடம்" தொடங்கப்பட்டது எப்போது?

பதில்: கடந்த டிசம்பர் முதல் இதற்காக தொடர்ச்சியாக பல பயணங்கள், பல சந்திப்புகள், பல முயற்சிகள் என ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

"ஏதாவது ஒரு மாற்று வாழ்வாதாரத்தை ஏதேனும் ஒரு கிராமத்திலாவது துவக்கி, அதனைக் கொண்டு பல கிராமங்களிலும் யார் வேண்டுமானாலும் இதனை பெருக்கி விட முடியும் என்பது நம்பிக்கையில் செயல்படத் துவங்கினோம். நம்பிக்கை தானே வாழ்க்கை? அந்த ஒரு மாற்று வாழ்வாதாரத்தை  தோப்புப்பட்டி என்னும் கிராமத்தில் பிப்ரவரி 14- ந் தேதி துவக்கினோம்.

கேள்வி: உங்கள் ஆரம்பக்கட்டப் பணிகள் எப்படி இருந்தது?

பதில்: மிகுந்த மகிழ்ச்சியோடு நான் பகிரும் செய்தி.  தோப்புப்பட்டி கிராம மக்களுக்காக, "தடம்"மூலிகைப் பொடிகள் தயார் செய்வது குறித்து ஒரு விரிவான பயிற்சியை கடந்த பிப்ரவரி 14- ந் தேதி வழங்கினோம். இதுதான் எங்களது "தடம்" அமைப்பு பணிகளின் ஆரம்பம்.

கேள்வி: இதுவரை எவ்வளவு பேர் பயிற்சி பெற்று உள்ளனர்? உங்கள் பணிகள் திருப்தி தருகின்றனவா?

பதில்: 2 பயிற்சி முகாம்களில் சுமார் 40 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இன்னும் பலருக்குப் பயிற்சி தரும் எண்ணமும் இருக்கின்றது. செய்திகளை அறியும் பலர் எங்களைத் தொடர்பு கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு முடிந்த வரை உதவி வருகின்றோம்.

கேள்வி: பயிற்சியுடன் உங்கள் பணி முடிந்ததா? அதற்குப் பின் வேறு என்னென்ன உதவி செய்கின்றீர்கள்?

பதில்: இன்று திட்டமிட்டபடி இந்த பொருட்கள் உற்பத்தி துவங்கியது. அதோடு சிறப்பு அம்சமாக தற்சார்பு நிலையை அடையும் வகையில் மூலப் பொருட்களை கொடுக்கும் செடிகள் உற்பத்தி மையத்திலேயே பயிரிடப்பட்டது. உலக மகளிர் தினமான மார்ச் 8-ந் தேதி , "தடம்" பயிற்சிக்குப் பின் உற்பத்தி தொடங்கிய நாள்.

கேள்வி: அப்படி என்ன தான் உற்பத்தி செய்கின்றீர்கள்?

பதில்: நாம் அன்றாடம் பயன்படுத்தும், பல்பொடி, குளியல் பொடி, தலைக் குளியல் பொடி, பாத்திரம் கழுவும் பொடி, துணி துவைக்கும் பொடி, வழலை எனப்படும் சோப்புகள்,  வலி நிவாரணி தைலம் எனப்படும் எண்ணெய், மூலிகை எண்ணெய், முடி வளர்ச்சி எண்ணெய், சுக்கு மல்லி பொடி, தேனீர் பொடி, குங்குமம் மற்றும் உதட்டுச் சாயம் ஆகிய 10 பொருட்களை அவர்களே செய்ய துவங்கி விட்டார்கள். 

கேள்வி: உற்பத்தி பற்றிச் சொன்னீர்கள். அதன் விற்பனைக்கு எப்படி உதவுகிறீர்கள்?

பதில்: பெண்கள் தயாரிக்கும் இந்த பொருட்களை Thadam App மூலம் சந்தைப்படுத்த ஏற்பாடு செய்துள்ளோம். . Play Store-ல் இதனைப் பதிவிறக்கம் செய்து கொண்டு பொருட்களைப் பெற முடியும். அதற்கான இணைப்பை இதோ தருகின்றேன்.

App link in Play Store - https://play.google.com/store/apps/details?id=com.nstore.b2c.thadam

கேள்வி: " தடம்" அமைப்பிற்கு யாரெல்லாம் உதவி வருகிறார்கள்? அரசு ஏதேனும் உதவுகின்றதா?

பதில்: வாழ்வாதாரம் இழந்து பலர், எந்த வேலையும் இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு உதவ வேண்டும்.  எங்கள்  குழுவான 'டெல்டா மறுகட்டமைப்பு குழு' மற்றும்  Green Wish Foundation குழுவினர் இந்தப்பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

மற்றபடி உற்பத்தி துவக்கம் நிகழ்வில் வேளாண்மைத் துறை துணை இயக்குநர் சிவக்குமார்,  வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் லதா, வேளாண் விரிவாக்க பயிற்சி உதவியாளர் சிவ பாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மிக முக்கியமாக விவசாய கூலிகளாக இருந்து இன்று முதல் உற்பத்தியாளர்களாக மாறப்போகும் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டது மகிழ்ச்சி தந்தது.

மகளிர் தினத்தை இதைவிடச் சிறப்பாக  வேறு எப்படி கொண்டாட முடியும்? என எண்ணும் போது "தடம்" அமைப்பில் நாங்களும் ஒரு அங்கம் என்ற வகையில்,  உண்மையில் பெரிதும் மகிழ்கின்றோம். பல விஷயங்களில் தடம் பதிக்க, இது எங்களுக்கு ஒரு ஆரம்பத் தடமே!

மகிழ்ச்சியுடன் முடித்தார் "தடம்" அமைப்பின் ஒரு அங்கமாக விளங்கும், டெல்டா மறுகட்டமைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரன்.

அவரது தொடர்பு எண்: 9791050512.

தொகுப்பு: கவிஞர் மணி பாரதி.

by Mani Bharathi   on 18 Mar 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ? செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ?
தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி
மாவொளி சுற்றுதல் மாவொளி சுற்றுதல்
காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.