LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

தாடியும்…தூக்கமும்

     ஒரு ஊர்ல ஒரு பெரியவர் இருந்தார்.அவர் ரெண்டு விஷயங்களில் தன்னைப் பற்றிப் பெருமை பட்டுக்குவார். ஒன்று அவருடைய நீண்ட தாடி பற்றிய பெருமை.வெண்மை நிறத்தில் அவருடைய காலைத் தொடுமளவுக்கு நீண்ட தாடி அவருக்கு. அடுத்தது படுத்தவுடன் தூங்கிப் போகும் அவருடைய பழக்கம் பற்றியது. யாரிடம் பேசினாலும் இதைப் பற்றி பெருமையாகச் சொல்லிக் கொள்வார். இந்த இரண்டு விஷயங்களிலும் தன்னையாரும் மிஞ்ச முடியாது என சொல்வார்.ஒரு நாள் அவருடைய பேரன் ஊரிலிருந்து வந்திருந்தான். 


     அவனிடமும் தாத்தா இது பற்றி பேசினார். பேரன் ‘சரி தாத்தா.நீங்க தூங்கும் போது உங்க நீண்ட தாடி போர்வைக்கு மேலே இருக்குமா இல்லை போர்வைக்கு அடியிலா?’ என்று சந்தேகம் கேட்க படுத்தவுடனே தூங்கிப்ப் போகும் பழக்கத்தால் தாத்தாவுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. இன்று தூங்கும் போது பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். இரவு தூங்கும் போது போர்வைக்கு அடியில் தாடி இருக்க வெளியே தெரியட்டும் என்று அதை எடுத்து போர்வைக்கு மேலே போட்டார்.


     அது பார்ப்பதற்கு நன்றாக இல்லாததால் மீண்டும் எடுத்து போர்வைக்கு அடியில் போட்டார். மீண்டும் சரி வராததால் மேலேயும் மறுபடி கீழேயும்……..இப்படியே போர்வைக்கு மேலே…கீழே என்று மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டே இருந்ததில் அன்று இரவு தூங்கவேயில்லை. மறுநாளும் இப்படி முயற்சித்து தூக்கம் தொலைக்கவே மனம் வெறுத்துப் போன தாத்தா தாடியா?தூக்கமா? னு யோசித்து முடிவில் தன்னுடைய நீண்ட தாடியை வெட்டி விட்டார். பிறகென்ன?தாடி பத்தின கவலை இல்லாம நிம்மதியாத் தூங்கத் தொடங்கினார்….ஹாஹா…

by kalaiselvi   on 07 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தந்தையை திருத்தும் மகன் தந்தையை திருத்தும் மகன்
புதிய நண்பர்கள் புதிய நண்பர்கள்
தப்பி வந்த முதலை தப்பி வந்த முதலை
ஒரு நீண்ட பயணம் ஒரு நீண்ட பயணம்
நாணயஸ்தன் நாணயஸ்தன்
வகுப்புக்கு தாமதம் வகுப்புக்கு தாமதம்
பரிசும் ஊக்கமும் பரிசும் ஊக்கமும்
முட்டாள் வேலைக்காரன்! முட்டாள் வேலைக்காரன்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.