LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தகடூர் கோபியின் மறைவு! தமிழ் இணையத் துறைக்குப் பேரிழப்பு!

தமிழ்க்கணிமைக்கு உழைத்தவர்களில் ஒருவரான தகடூர் கோபி அவர்கள் ஞாயிறு (28-01-2018) அன்று இறைவனடி சேர்ந்தார், தமிழ்க்கணிமைக்கு அவர் ஆற்றிய பங்கு அளப்பறியாதது.

1. தகடூர் தமிழ் மாற்றி
2. உமர் பன்மொழி மாற்றி
3. அதியமான் எழுத்துரு மாற்றி
4. அதியன் பயர்பாக்ச் மீட்சி
5. தமிழ் விசைப்பலகை

இவை அனைத்தும் இவரால் தமிழ்க்கணினிக்கு வழங்கப்பட்டவையாகும்.

இன்று இணையத்தில், சமூக ஊடகங்களில் தமிழ் பெருமளவில் பரவி இருக்கிறது. ஆனால் இந்த மாற்றம் ஒரு நாளில் நடந்து விட வில்லை. இணையத்தில் தமிழ் மெல்ல, மெல்ல தான் எழுந்து நடக்கத் தொடங்கியது. சுமார் 10-15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழை இவ்வளவு எளிதாகக் கணினியிலோ, இணையத்திலோ தட்டச்சு செய்யவோ, வாசிக்கவோ முடிந்ததில்லை என்பதை இணையத்தில் அக் காலக்கட்டத்தில் இருந்து வாசிக்கும், எழுதி வரும் பலர் அறிவார்கள்.

அப்படியான சூழலில் சிறு சிறு செயலிகள் தன்னார்வலர்களால் ஆங்காங்கே எழுதப்பட்டது. இந்தச் செயலிகள் தமிழ் வாசிக்கவும், தட்டச்சு செய்யவும் பலருக்கும் உதவியது. இணையத்தில் தமிழ் அப்படித் தான் சிறுக, சிறுக வளர்ந்தது. யாகூ குழுமங்கள், வலைப்பதிவுகள், இணையத்தளங்கள் என வளரத் தொடங்கிய தமிழ் இன்று சமூக ஊடகங்கள் காலக்கட்டத்தில் இணையம் எங்கும் பரவி உள்ளது.

இன்று வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் இன்றைய செயலிகளைச் சில வருடங்களில் அர்த்தமற்ற ஒன்றாக மாற்றி விடுகிறது. ஆனால் அப்படியான தொழில்நுட்பங்களின் படிக்கட்டுகளில் ஏறித் தான் நாம் இந்த இடத்தை அடைந்து இருக்கிறோம் என்பது பலருக்குத் தெரியாது.

தமிழுக்குச் சத்தமில்லாமல் தொண்டாற்றி விட்டு அந்த மனிதர்கள் மறையும் பொழுது தான் நாம் அவர்களை நினைத்துப் பார்க்கும் சூழ்நிலை உள்ளது. அந்த வரிசையில் தகடூர் கோபி.

இது குறித்து தகடூர் கோபியின் நெருங்கிய நண்பரான முனைவர் மு.இளங்கோவன் கூறியதாவது:

தமிழ்க் கணிமைத்துறைக்குப் பெருந்தொண்டாற்றியவரும் என் அருமை நண்பருமான தகடூர் கோபி என அழைக்கப்பெற்ற த. கோபாலகிருட்டினன் அவர்கள் இயற்கை எய்திய செய்தியை அறிந்து மிகுந்த துயருற்றேன். கடந்த பத்தாண்டுகளாக யானும் கோபியும் மிகவும் நெருங்கிப் பழகியுள்ளோம். 14.09.2008 இல் தருமபுரியில் மருத்துவர் கூத்தரசன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த தமிழ் இணையப் பயிலரங்கில் யானும் கோபியும், முகுந்துவும் இணைந்து உரையாற்றிய நிகழ்வுகள் யாவும் என் மனக்கண்ணில் விரிகின்றன.

கோவை இணைய மாநாடு, சிங்கப்பூர் இணைய மாநாடு என்று பல்வேறு மாநாடுகளில் கலந்துகொண்டு, பேசி மகிழ்ந்துள்ளோம். கோபியின் இணையப் பணியை ஒரு நேர்காணலாக்கி, அவரின் பணிகளைத் தமிழ் ஓசை நாளிதழ் வழியாகத் தமிழுலகுக்கு அறிமுகம் செய்தேன்(11.01.2009). இணையம் கற்போம் என்ற என் நூலிலும் அந்த நேர்காணல் உள்ளது. இதனை மாணவர்கள் பாடமாகப் படிக்கின்றனர்.

இணையத்தில் எனக்கு ஏற்படும் ஐயங்களைப் போக்கியும், தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை உடனுக்குடன் செய்தும் மகிழ்பவர். அண்மையில் சிங்கப்பூர் செல்வதற்கு முன்பாக கோபியைச் சந்திக்க விரும்பினேன். அவர் சிங்கையிலிருந்து விடுபட்டு, இந்தியா வந்த செய்தியைச் சொன்னார். மீண்டும் சந்திக்க ஆர்வமுடன் இருந்த நிலையில் கோபியின் மறைவு மிகப்பெரிய இழப்பாக எனக்கு அமைந்துவிட்டது.

கோபி அவர்கள் மிகச் சிறந்த மொழிப்பற்றாளர். அவர் உருவாக்கிய மென்பொருள்களுக்கு அதியமான், ஔவை, தகடூர் என்று பெயர் வைத்தமை ஒன்றே அவரின் மொழிப்பற்றையும் ஊர்ப்பற்றையும் வெளிப்படுத்துவதற்குப் போதுமான சான்றுகளாகும்.

என் அருமை நண்பர் கோபியை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்களின் துயரில் நானும் பங்குகொள்கின்றேன். தமிழ் இணையத்துறை உள்ளவரை கோபியின் பணிகள் என்றும் நினைவுகூரப்படும்.

கோபி குறித்த என் பழைய பதிவுகள்:

தகடூர் கோபி நேர்காணல்
http://muelangovan.blogspot.in/2009/01/blog-post_11.html

தருமபுரி இணையப் பயிலரங்கம்
http://muelangovan.blogspot.in/2008/09/blog-post_2386.html

கோபியின் இணையதளம்
http://www.higopi.com

by Swathi   on 03 Feb 2018  9 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
10-Feb-2018 01:48:02 Ramesh said : Report Abuse
Thagadur gopi_in maraivu tamil _kkum tamil samoogathirkkum periyappagum!
 
07-Feb-2018 09:49:31 சுந்தர் said : Report Abuse
அன்னாரது பணி மிகவும் பாராட்டுக்குறியது அவர் விட்ட பணி தொடரப்படவேண்டும்
 
07-Feb-2018 07:30:56 கோ.ராம் said : Report Abuse
இவரின் தமிழ் தொண்டிற்கு எனது நன்றியும் வணக்கமும் மரியாதையுடன் சமர்ப்பிக்கிறேன்.
 
05-Feb-2018 10:56:58 பாலு vijay said : Report Abuse
இவரின் இழப்பு ஈடு செய்ய ஏலாது. தமிழ் தட்டச்சில் எவ்வளவு துன்பம் இருந்ததோ அனைத்தையும் நீக்கி அனைவரும் மிக இயல்பாக தமிழில் நினைத்த வேகத்தில் அப்படியே தமிழில் கையில் பேனா பிடித்து எழுதுதல் அளவிற்கு அவர் கொணர்ந்திருந்தார். எவ்வளவு என்படைப்புக்களை அவரது தகடூரில்தான் திறம்பட செய்து தமிழில் வளர்ந்திருந்தேன். எப்படியாவது அவரை சந்திப்பேன் நன்றி தெரிவிக்க என நினைத்திருக்கையில் இப்படி இவ்வளவு விரைவில் அவரது மறைவுச் செய்தி என்னை துக்கத்தால் நிரப்பியது. தமிழில் நான் தட்டச்சு செய்யும் நாளது வரை என் மனம் அவருக்கு நன்றி கூறிக்கொண்டேயிருக்கும். தமிழிருக்கும் வரை தக்கட்டும் அன்னார் புகழ்.
 
04-Feb-2018 18:50:46 கொழந்தவேல் இராமசாமி said : Report Abuse
தகடூர் கோபி தமிழன்னைக்கு சூட்டிய ஆரங்கள் தமிழுள்ளவரை புகழுடன் இருக்கும். தகடூர் தம்பியின் மறைவு மிகுந்த வருத்தத்திற்குரிய துக்கச் செய்தி. இயற்கையின் நிழலில் நிலைத்து நிற்கட்டும், தம்பி அவர்களின் உயிர்! ஆழ்ந்த இரங்கல்கள், கொழந்தவேல் இராமசாமி மேரிலாந்து, வட அமெரிக்கா
 
04-Feb-2018 17:07:16 RATHINAPANDI said : Report Abuse
தகடூர் கோபிக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
 
04-Feb-2018 13:55:55 மு.ராஜகோபால் said : Report Abuse
கோபியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
 
04-Feb-2018 09:37:20 சொ.அர. இராசேந்திரன் said : Report Abuse
தகடூர் கோபியின் ஆத்மா சாந்தியடைய எனது மனமார்ந்த வேண்டுதல்கள் ...
 
04-Feb-2018 08:50:24 ந .ஜெயபாலன் said : Report Abuse
கோபியின் புகழ் என்றும் சிறந்து விளங்கும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.