LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    இயற்கை விவசாயம் Print Friendly and PDF

இயற்கை உணவுகளை பிரபலப் படுத்தும் தாய்வழி இயற்கை உணவகம் !!

இன்றைய சூழலில் பாஸ்ட் புட் உணவகங்களும், நவீன ஹோட்டல்களும் பெருத்த வண்ணம் உள்ளது. மறுபக்கம் அதற்கு இணையாக மருத்துவமனைகளும், மருந்து கடைகளும் பெருத்து, தினமும் தீராத புதிய புதிய நோய்களும் கண்டுபிடிக்கப்பட்டு , மருந்துகளையும், அறுவை சிகிச்சைகளையும் செய்து கொண்டே நம்மை சோதனை எலிகளாக மாற்றியுள்ளனர். ஆனாலும் நோய்கள் தீர்ந்த பாடில்லை.


இதற்கெல்லாம் தீர்வாக ஆரோக்கியத்திற்கு மதிப்பளிக்கும் மாறுபட்ட மக்களும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் சிவகாசியை சேர்ந்த மாறன் ஜீ .

அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக “தாய்வழி இயற்கை உணவகம் ” நடத்தி வருகிறார். அங்கு மறைந்து போன பாரம்பரிய உணவுகள் முதல் சமைக்காத இயற்கை உணவுகள் வரை அடங்கும். அதில் பல மூலிகைகளும் அடங்கும்.


இதன் மூலம் சிவகாசியில் பாஸ்ட் புட் கடைகளுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்வது முற்றிலும் தடைபட்டு , அலோபதி மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்வது தடைபட்டு , மற்ற நகரங்களைக் காட்டிலும் நோயுற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.


காரணம் இது உணவகம் மட்டுமல்ல. இவர் மக்களுக்கு ஆரோக்கிய உ ணவை வழங்குவதோடு மட்டுமல்லாமல் , அந்த உணவுகளை தாயரிப்பது பற்றியும், அதன் மருத்துவத் தன்மைபற்றியும் எந்த ஒரு ” ஒளிமறைவுமில்லாமல் ” கற்றும் கொடுக்கிறார். 


மேலும் இன்று உணவுகளை எப்படி உண்பது என்பது வரைக்கும் நாம் மறந்து, நோயாளிகாளாய்ப் போன நிலையில் அதிலிருந்து நம்மை மீட்கத் தேவையான “ இயற்கை வாழ்வியல் கலைகளை “ பயிற்சியாகவும் அளிக்கிறார்.கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் முதல் பள்ளி, கல்லூரிகள் வரை ” இயற்கை வாழ்வியல் விழிப்புணர்வு ” கூட்டங்களும் நடத்திவருகிறார். 


நம்மாழ்வார் ஐயாவும் இவரை தன்னுடைய வானகத்தில் நடைபெறும் பயிற்சிகளில் கலந்து கொண்டு “ இயற்கை வாழ்வியலை “ கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை தொடர் நிகழ்வாகவே வைத்திருந்தார்கள்.


இதனால் இவரது கடைகளுக்கு வரும் நோயளிகள் முற்றிலும் குணமடைந்து , பயனாளிகளாக மாறுகின்றனர். இதனால் தன் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற “ வீதியெங்கும் இயற்கை உணவகம் “ என்ற கொள்கையை சமூகத்தில் விதைத்து வருகிறார்.


இதற்கு பெரிய முதலீடு ஏதும் தேவையில்லை எனவும் கூறுகிறார். இதனால் வேலை வாய்பில்லாமல் இருப்பவர்களும், சுய தொழில் செய்ய வேண்டும் என நினைப்பவர்களும் இவரை தொடர்ந்து நாடி வருகின்றனர்.


தொடர்புக்கு : மாறன் ஜீ 


கைபேசி எண் : 93674 21787

by Swathi   on 29 May 2014  6 Comments
Tags: Iyarkai Unavagam   Iyarkai Unavu   Organic Food   இயற்கை உணவு   இயற்கை உணவகம்        
 தொடர்புடையவை-Related Articles
இயற்கை சமையலில் அசத்தும் ஆரோக்யம் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவகம் !! இயற்கை சமையலில் அசத்தும் ஆரோக்யம் இயற்கை மற்றும் பாரம்பரிய உணவகம் !!
இயற்கை உணவுகளை பிரபலப் படுத்தும் தாய்வழி இயற்கை உணவகம் !! இயற்கை உணவுகளை பிரபலப் படுத்தும் தாய்வழி இயற்கை உணவகம் !!
கருத்துகள்
07-May-2018 04:07:09 KANNANARUMUGAM said : Report Abuse
நான் மதுரை, ஐய்யா வணக்கம் தற்பேதுதான் உங்களை பற்றி அறிகிறேன், மன்னிக்கவும் உங்களை தவரவிட்டது எனது துர்பாக்கியம்,என் பிறப்புறுப்பிள் அடிகடி நமைச்சல், நிர்கடுப்பு,வந்துகொண்டு இருக்கிறது,இதுபோல் என் கண்களில் அதிக எரிச்சளும் வந்து என்னை சோர்வடைய செய்கிறது இதற்கு தக்க நாட்டுமருந்து கிடைக்குமா,இல்லை உங்களை சந்திக்க நேரம் கிடைக்குமா,உங்கள் மருந்துகள் மதுரையில் கிடைக்குமா....9344101713 .
 
09-Nov-2017 09:30:40 கே.Chandran said : Report Abuse
சார் நான் உடல் எடை அதிகமாக இருக்கிறேன் அதை குறைக்க இயற்கை உணவு பட்டியலை (தெரியப்படுத்தவும் நன்றி (காலை / பகல் / இரவு உணவு )
 
02-Dec-2016 01:00:44 panbarasi said : Report Abuse
சார், நான் இயற்கை உணவுகள் கற்று கொள்ள வேண்டும். நன்றி பான்பரசி.
 
13-Jul-2015 00:14:59 கே. ராஜேந்திரன் said : Report Abuse
வணக்கம் மாறன் க, நான் ராஜேந்திரன் வயது 62 ஈயற்கை உணவு சாப்பிட்டு வருகிறேன் அனால் உடல் எடை மிகையும் குறைத்துவிட்டது. கன்னம் ஓடின்கிவிட்டது. நண்பர்கர் எல்லோரும் என்னை கின்ன்டல் செய்கிறார்கள் மெடிக்கல் செக்ப்க்கு அலைக்க்ரர்கள். நான் முதுமை தொத்டதுடன் kanappadukiren . ப்ளீஸ் அட்வைஸ் மீ. மேலும் எலாசி பவுடர் எப்படி பண்ணனும். எலாசி மிக்ஷெர் போட்டால் பவுடர் aakamaattankuthu . ப்ளீஸ் advice மீ பெஸ்ட் ரேகர்ட்ஸ் கே. ராஜேந்திரன்53@ஜிமெயில்.com
 
04-Jun-2015 06:17:49 S.PREMADEVI said : Report Abuse
சார், எனக்கு சக்கரை நோய் உள்ளது. எனக்கு இயற்க்கை உணவு பற்றி தெரிவிக்கவும். நன்றி
 
27-Mar-2015 04:17:59 sivasubramanian said : Report Abuse
இயற்கை உணவுகள் தயாரிப்பது பற்றிய நூல் அல்லது வெப் சைட் பற்றிய விவரம் therivikkavum
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.