LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்க தலைநகரில் தமிழிசையும் பரதமும்...

கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 22) பிற்பகலில் வாசிங்டன் நகரில் பிரபல கர்நாடக இசைக் கலைஞரும், திரையிசைப் பின்னணிப் பாடகருமான கலைமாமணி உன்னிகிருஷ்ணனின் “தேமதுரத் தமிழோசை” என்கிற தமிழிசை நிகழ்ச்சி ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையைச் சேர்ந்த திரு இராமநாடக நிகேதன் குழுவினரின் ”ஆண்டாள் திருமணம்” என்கிற பரதநாட்டிய நாடகமும் நடைபெற்றது. தரம் வாய்ந்த இரண்டு செவ்வியல் கலை நிகழ்ச்சிகளும் செவிகளுக்கும், கண்களுக்கும் இனிய விருந்தை அளித்தன. இரண்டு நிக்ழச்சிகளுக்கும் இடைவேளையில் எலிகாட் சிட்டி ‘டேலண்ட்’ தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சிறப்பாகத் தமிழ் இலக்கியப் பாடல்களைச் சந்தத்துடன் பாடி மகிழ்வித்தனர்.
வாசிங்டன், மேரிலாந்து, விர்ஜினியா, டெலவர், பென்சில்வேல்னியா மாநிலங்களிலிருந்து தமிழர்கள் வந்து இரண்டு நிகழ்ச்சிகளையும் அண்டு களித்தது மட்டுமல்லாமல் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நன்கொடையையும் அளித்தனர். செலவுகள் அனைத்தும் போக 20000 அமெரிக்க வெள்ளிகள் ஹார்வர்டு இருக்கைக்காக நன்கொடையாக அளிக்கப்பட்டன. வாசிங்டன் பகுதியின் முக்கிய தமிழ்ப் புரவலரான திரு. பாலகன் ஆறுமுகசாமி 10000 வெள்ளிகளை நன்கொடையாக அளித்தார்.
ஐநூறாயிரம் அமெரிக்க வெள்ளிகளை முதல் நன்கொடையாக அளித்து ஹார்வர்டு இருக்கைக்கான ஏற்பாட்டைத் தொடங்கி வைத்து முடுக்கிவரும் மருத்துவர் ஜானகிராமனும், தமிழ் இருக்கைச் செயற்குழுவைச் சேர்ந்த முனைவர் சங்கரபாண்டியும், ஹார்வர்டு இருக்கை பற்றிய விவரங்களை எடுத்துரைத்தனர். கலைமாமணி உன்னிகிருட்டிணன் உள்ளிட்ட அனைத்துக் கலைஞர்களும் பெருமைப்படுத்தப் பட்டனர். இசைக்கலைஞர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்து ஒருங்கிணைத்த முனைவர் பாலாஜியையும் , நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்குப் பெரிதும் உதவிய வாசிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவர் இராஜாராமையும், தமிழ்ச் சங்கச் செயற்குழுவையும் மருத்துவர் ஜானகிராமன் பாராட்டி நன்றி தெரிவித்தார்.
நன்கொடை நல்கிய புரவலர்களுக்கும், விழா சிறப்பாக நடைபெறப் பெரிதும் உழைத்த திரு. செந்தில் குமார், முனைவர் விஜயகுமார், முனைவர் மனோகரன், முனைவர் ஜெயந்தி, திருமதி சாந்தி, திரு, செந்தில் முருகன், திரு. இராமசாமி, திரு. கண்ணன் குஞ்சிதபாதம், திரு. சிவா உள்ளிட்ட அனைவருக்கும் தமிழ் இருக்கை செயற்குழு நன்றி தெரிவிக்கிறது.

by Swathi   on 25 Apr 2017  0 Comments
Tags: Tamil Isai   Thamil Isai   Bharatham   தமிழிசை   பரதம்   வாசிங்டன்     
 தொடர்புடையவை-Related Articles
தமிழிசையின் அரிய நூல்கள்! தமிழிசையின் அரிய நூல்கள்!
அமெரிக்க தலைநகரில் தமிழிசையும் பரதமும்... அமெரிக்க தலைநகரில் தமிழிசையும் பரதமும்...
உலக பொது மறையில் ஓர் உலக சாதனை - பரதம் 5000 உலக பொது மறையில் ஓர் உலக சாதனை - பரதம் 5000
டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015 டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015
தொல்காப்பியமும் திருக்குறளும் - முனைவர் இர. பிரபாகரன் தொல்காப்பியமும் திருக்குறளும் - முனைவர் இர. பிரபாகரன்
மதுரை அக்ஷயா அறக்கட்டளை க்கு நிதிசேகரிப்பு இசை நிகழ்ச்சி மதுரை அக்ஷயா அறக்கட்டளை க்கு நிதிசேகரிப்பு இசை நிகழ்ச்சி
அமெரிக்காவில் தமிழிசை முழங்கிய தமிழ்த்தளிர்கள் அமெரிக்காவில் தமிழிசை முழங்கிய தமிழ்த்தளிர்கள்
இன்றைய 'மஹா பாரதம்' இன்றைய 'மஹா பாரதம்'
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.