LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    விவசாயச் செய்திகள் Print Friendly and PDF

”உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது”

”உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது” என்று ஒரு பழமொழி உண்டு ! உண்மையில் இங்கு அப்படித்தான் இருக்கிறது உழவர்களின் நிலை !

காவிரிப் பாசன பகுதியான கடலூர் மாவட்டம் சிதம்பரம் - காட்டுமன்னார் கோயில் வட்ட சாகுபடி பகுதியில் ஒரு ஏக்கர் நெல் உற்பத்திக்கு ஆகும் செலவும் - அதன் வருமானமும் பட்டியலிடப் பட்டிருக்கிறது.
--------------------------------------------------------------
ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு ஆகும் செலவு : ரூ 29,400
ஏக்கர் ஒன்றிற்கு அரசு கொள்முதல் விலை : ரூ 23,400
ஏக்கர் ஒன்றிற்கு இழப்பு : ரூ 6000
----------------------------------------------------------------
தோழர்களே,

இதில் நிலத்தடி நீர் பாசனக் கருவிகள், பசுந்தாள் குப்பை எரு, குடும்ப உறுப்பினர்கள் செலவிடும் உழைப்பின் மதிப்பு , வைக்கோல் ஏற்று கூலி இறக்கு கூலி, தொழிற்சாலைகளுக்கு உள்ளது போல் நில வாடகை, வளத் தேய்மானம், தனியார் ஆலை கொள்முதல் விலை குறைப்பு , ஆள் பற்றாக்குறையினால் ஏற்படும் கூலி உயர்வு, விவசாயக் கடனுக்கான ஆண்டு வட்டி, விளைபொருள் மகசூள் குறைவு என்பன போன்றவை செலவுக் கணக்கில் சேர்க்கப்படவில்லை ! இதையும் சேர்த்துக் கணக்குப் போட்டால் இழப்பு ஏறக்குறைய பாதிக்குப் பாதி !

ஐம்பது பைசா மிட்டாய் கூட இலாப விலையுடன் தான் சந்தைக்கு வரும் இந்நிலையில் வேளாண்மைக்கு ஏன் இந்த ஒரு நிலை!

வறட்சி, மழை, வெள்ளம் என இயற்கை சூழலோடும்,
கடன், வட்டி, வரி என வாழ்வியல் சூழலோடும் போராடி உற்பத்தி செய்யும் நெல்லுக்கு அரசு கொள்முதல் விலையை 2500 ஆக வழங்க வேண்டுமென்று உழவர்கள் கோரிக்கை வைத்து ஆண்டுகள் பலவாகிறது.

ஆனால், ஆண்டு முழுவதும் உழைத்து கொடுக்கும் உழவனுக்கு குவிண்டால் நெல்லுக்கு உரிய கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய கணக்குப் பார்க்கும் மத்திய மாநில அரசுகளோ மக்கள் பணத்தை சூறையாடும் உலக மய முதலாளிகள் டாடாவுக்கும் அம்பானிக்கும் ஆண்டுக்கு பல லட்சம் கோடிகளுக்கு கடன் தள்ளுபடி செய்கிறது.

வேளாண்மையை இலாபமற்ற தொழிலாக்கி உழவர்களே நிலத்தை விட்டு தானே வெளியேறுங்கள் என வெளியேற சொல்கிறதோ அரசு ?

சிந்தியுங்கள் !

தமிழக அரசே !
”நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ 2500 வழங்கு! ”என 
உழவர் துயர் துடைக்க
உங்கள் கைகளையும் உயர்த்துங்கள்..

============================
செய்திப் பிரிவு
தமிழக உழவர் முன்னணி 
============================

by Swathi   on 19 Mar 2014  4 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் இந்த ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு.. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் இந்த ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு..
650 நெல் ரகங்களைப் பாதுகாத்து வரும் கேரள விவசாயிக்குப் பத்மஸ்ரீ விருது 650 நெல் ரகங்களைப் பாதுகாத்து வரும் கேரள விவசாயிக்குப் பத்மஸ்ரீ விருது
உலகின் சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தேர்வு உலகின் சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தேர்வு
இந்தியாவில் முதன் முதலாக வயல்களில் சென்சார் மற்றும் ரேடர்கள் மூலமாக நடைபெற்ற நோய்க் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி. இந்தியாவில் முதன் முதலாக வயல்களில் சென்சார் மற்றும் ரேடர்கள் மூலமாக நடைபெற்ற நோய்க் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி.
3 மடங்கு லாபம் ஈட்டும் பிலிப்பைன்ஸ் விவசாயிகள்: நேரில் பார்வையிட்ட உடுமலை விவசாயிகள் தகவல் 3 மடங்கு லாபம் ஈட்டும் பிலிப்பைன்ஸ் விவசாயிகள்: நேரில் பார்வையிட்ட உடுமலை விவசாயிகள் தகவல்
நேரடியாக_உழவர்களிடம்_வாங்கிடுங்கள்... நேரடியாக_உழவர்களிடம்_வாங்கிடுங்கள்...
விவசாயிகளுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள் விவசாயிகளுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள்
தமிழ்நாட்டின் விவசாயம் ஏன் சிக்கலில் தவிக்கிறது? என்ன தீர்வு ? தமிழ்நாட்டின் விவசாயம் ஏன் சிக்கலில் தவிக்கிறது? என்ன தீர்வு ?
கருத்துகள்
14-Dec-2018 06:43:25 பாரதிராஜ்.s said : Report Abuse
இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது மகசூல் அதிகரிக்க மரபணு மற்றம் செய்யப்பட்ட விதைகளை பரிந்துரை செய்ய அரசே வழிவகை செய்கிறது. இப்படிப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைத்தால் அதிக மகசூல் செய்யலாம் அனால் அதில் வரும் பாதிப்புகள் குறித்து இங்கு யாரும் பேசுவதில்லை. விவசாயம் நிச்சயமாக அழிவை நோக்கி மிக வேகமாக செல்கின்றது
 
10-Jan-2018 17:36:05 Ranjith kumar said : Report Abuse
அரசு மானியத்தில் நான் மருந்து தெளிப்பான் வாங்க முடியுமா அதற்கு நான் யாரை அனுக வேண்டும்
 
04-Sep-2015 00:40:09 ர.பிரபாகரன் said : Report Abuse
Megavum Nalla karuthkkal ullathu na padithu thearinjiketa இன்னும் நேரிய Tamil varalarugalai பதிவுசெஐஉங்கல்
 
13-Dec-2014 09:31:00 குணசேகர் said : Report Abuse
correct
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.