LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF
- தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles

தமிழிசையைப் பாடுவதே பிராணாயாமம் செய்வது போலத்தான்!

தமிழிசையைப் பாடுவதே பிராணாயாமம் செய்வது போலத்தான்! 

முனைவர் பா. சுந்தரவடிவேல், பி.எச்.டி

தென் கரோலின மருத்துவப் பல்கலைக் கழகம், சார்ள்ஸ்டன், அமெரிக்கா. 

பிராணாயாமம் என்பது மூச்சுப் பயிற்சி என்பதும், அது அட்டாங்க யோகக் கலைகளுள் ஒன்று என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் மண்ணில் தொடர்ந்து அவதரிக்கும் சித்தர்களாலும், முனிவர்களாலும் அருளப்பட்டவையே இந்த அருங்கலைகள்.அத்தகைய மூச்சுப் பயிற்சி முறைகள் பல உள்ளன.ஒவ்வொருவரது உடல் நிலைக்கும், மன நிலைக்கும் பொருத்தமான பயிற்சி முறைகளைச் சரியான குருவின் உதவியால் நாம் கற்றுக் கொள்ள முடியும். ஆனால் மூச்சுப் பயிற்சி முறைகளைக் கற்றுக் கொள்வதும், அதனை அன்றாட வாழ்வில் கடைபிடிப்பதையும், தொடர்ந்து பயில்வதையும் நம்மில் பலர் பல்வேறு காரணங்களுக்காகச் செய்ய இயலாமல் போய்விடுகிறது. அதன் காரணமாக மூச்சுப் பயிற்சிகளால் விளையக்கூடிய பல நன்மைகளை நம்மால் பெற முடியாமல் போய்விடுகிறது.அதற்கு ஒரு மாற்றாகத்தான் இசை எனும் அருமையான பெருங்கொடை நமக்கு வாய்த்திருக்கிறது.ஏனென்றால் வாயால் பாடுவதே ஒரு மூச்சுப் பயிற்சியா கிறது.எப்படி என்று பார்ப்போம்.

எனது மற்றும் எனது குழந்தைகளின் குருநாதர் திருபுவனம் ஆத்மநாதன் ஐயா அவர்கள் இசை என்பதே மூச்சுப்பயிற்சி என்று அடிக்கடி குறிப்பிடுவார்.நான் ஒரு யோக மருத்துவ ஆராய்ச்சியாளன்.எனக்குள்ளும் இதே போன்ற ஒரு எண்ணம் இருந்து வந்திருக்கிறது.மூச்சுப் பயிற்சியானது பல்வேறு நோய்களுக்கு உற்ற மருந்தாக அமையும் என்பது இப்போதைய ஆராய்ச்சிகளில் தெரிய வருகிறது.உதாரணமாக, அமெரிக்காவிலுள்ள தென் கரோலின மருத்துவப் பல்கலைக் கழகத்தில் இயங்கும் எனது ஆராய்ச்சிக் குழு ஒரு பரிசோதனையைச் செய்தது. இதில் திருமூலரின் திருமந்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் மூச்சுப் பயிற்சி ஒன்றைச் செய்யும்போது நமது உடலில் நரம்பு வளர்ச்சிக் காரணி (ழிமீக்ஷீஸ்மீ ரீக்ஷீஷீஷ்tலீ திணீநீtஷீக்ஷீ) அதிக அளவில் சுரப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது எப்படி முக்கியமாகிறது?இந்த நரம்பு வளர்ச்சிக் காரணியானது மூளையின் செயல்திறன் பாதிக்கப்பட்ட அல்சைமர் முதலான நோயாளிகளின் உடலில் குறைந்துபோய்க் காணப்படுகிறது.இவர்கள் மூச்சுப் பயிற்சி செய்தால் இந்தப் புரதம் கூடுவதற்கான வாய்ப்பிருக்கும் என எங்களது ஆராய்ச்சி தெரிவிக்கிறது.இது ஒரு உதாரணம்தான்.இதனைப் போலப் பல நன்மைகள் மூச்சுப் பயிற்சியால் விளைகின்றன. எடுத்துக் காட்டாக, உயர் இரத்த அழுத்தம், தளர்ச்சி, மறதி, நம்பிக்கையின்மை, ஊக்கமின்மை, மனச் சோர்வு, பயம், வலி, இதயக் கோளாறுகள், சுவாசக் கோளாறுகள், புற்று நோயினால் ஏற்படும் பக்க விளைவுகள் போன்ற பலவிதமான நோய்களில் மூச்சுப் பயிற்சி ஒரு அருமருந்தாக அமைகிறது. முக்கியமாகக் குழந்தைகளுக்கு நினைவாற்றல் பெருகவும், எண்ணங்களை ஒருமுகமாகக் குவிக்கவும், சிந்தனைத் திறனை அதிகரிக்கவும், உடலை உறுதியாக வைத்துக் கொள்ளவும் மூச்சுப் பயிற்சிகள் உதவுகின்றன. இசைபாடுவதை ஒரு மூச்சுப் பயிற்சி என்று குறிப்பிட்டோம்.அது எப்படி என்பதை இன்னும் சற்று ஆராய்வோம்.

நமது உடலில் ஏழு ஆதார நிலைகள் உள்ளன.இவை நம் உடலின் ஒவ்வொரு பகுதிகளையும் இயக்கும் நரம்புக் கூட்டங்கள் (ழிமீக்ஷீஸ்மீ றிறீமீஜ்us) என்றும் கொள்ளலாம். இவற்றை சக்கரங்கள் என்றும் குறிப்பிடுவார்கள். அவையாவன: மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை, சகஸ்ரதளம் என்பவை. இந்த நிலைகள் நமது முதுகெலும்பின் முடிவுப்பகுதிக்குக் கீழே (மூலாதாரம்) தொடங்கி, உச்சித் தலை (சகஸ்ரதளம்) வரையில் ஒவ்வொரு முக்கியமான பகுதியிலும் அமைந்திருக்கிறது.சரி, இவற்றுக்கும் இசைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?அங்குதான் இசையை உருவாக்கிய நமது முன்னோர்களின் ஞானத்தை நாம் உணர முடிகிறது.அதாவது ஒவ்வொரு சக்கரத்தின் ஆதார நிலைக்கும் ஒரு சுரத்தை அமைத்திருக்கிறார்கள்.

மூலாதாரம் - ச - குரல்

சுவாதிட்டானம் - ரி - துத்தம்

மணிபூரகம் - க - கைக்கிளை

அநாகதம் - ம - உழை

விசுத்தி - ப - இளி

ஆஞ்ஞை - த - விளரி

சகஸ்ரதளம் - நி - தாரம்

இந்த அமைப்பினால், நாம் ஒவ்வொரு சுரத்தையும் பாடும்போதும் உடலில் உள்ள அந்தந்த ஆதார நிலைகளை நம் மூச்சினால் தூண்டுகிறோம்.நமது பிராண சக்தியானது, சுரங்களைப் பாடும்போது அந்தந்த சக்கரங்களைத் தொட்டு எழுப்பி நல்ல செயல்பாட்டில் வைத்திருக்கிறது.இப்போது நம் இசையாசிரியர் சொல்வது நினைவுக்கு வரவேண்டும், “சஞ்.பாடும்போது அடிவயிற் றிலிருந்து எடுக்க வேண்டும்“.குருநாதர் குறிப்பிடுவது மூலாதாரம் என்றும், ஒவ்வொரு சுரமும் ஒவ்வொரு சக்கரம் என்பதையும் உணரவேண்டும்.

மேலும், விரைவாக மூச்சினை இழுத்து அதனை நீண்ட நேரம் மெதுவாக வெளிவிடுவது மூச்சுப் பயிற்சி முறைகளுள் ஒன்று.நாம் பாடும்போது இதைத்தானே செய்கிறோம்.சுரங்களுக்கு இடையே, வரிகளுக்கு இடையே விரைவாக மூச்சினை இழுத்துக் கொள்கிறோம், பிறகு பாடும்போது மெதுவாக மூச்சு குரலோடு வெளிச் செல்கிறது. அதோடுகூட, தமிழில் அமைந்திருக்கும் வல்லின, மெல்லின, இடையின எழுத்துக்களைச் சரியாக உச்சரித்துப் பாடும்போது, நாக்கின் அசைவுகள், குரலின் அதிர்வுகள் ஆகியவை யும் கூடுதலாக நம் உடலில் பல்வேறு வேதி மாற்றங்களை உண்டாக்கி நமக்கு நன்மையைத்  தருகின்றன.  இவ்வாறாக, மூச்சுப் பயிற்சி முறைகள் செய்கின்ற அதே வேலையை தமிழிசையைப் பாடுவதும் செய்கின்றது என்பது எவ்வளவு விந்தையான செய்தி! நாளும் தமிழிசையைப் பாடுவோம், உடலையும் மனதையும் திண்மையாகக் கட்டி, தமிழிசைபோல வாழ்வாங்கு வாழ்வோம்!  

by Swathi   on 28 Jan 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழிசையை இணையம் வழியே கற்கும் அமெரிக்கத் தமிழ் குழந்தைகள் .. தமிழிசையை இணையம் வழியே கற்கும் அமெரிக்கத் தமிழ் குழந்தைகள் ..
அ.இர.ரகுமான் அறக்கட்டளை” சார்பாக “கருணாமிர்தசாகரம்” இணையதளம் அ.இர.ரகுமான் அறக்கட்டளை” சார்பாக “கருணாமிர்தசாகரம்” இணையதளம்
அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக் கழகத்தில் தமிழிசைக்கான பாடநூல் வெளியிடப்பட்டது.. அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக் கழகத்தில் தமிழிசைக்கான பாடநூல் வெளியிடப்பட்டது..
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் -வள்ளலார் (திருவருட்பா) எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் -வள்ளலார் (திருவருட்பா)
அற்புதம் அற்புதமே... பாடல், திருபுவனம் G.ஆத்மநாதன் அற்புதம் அற்புதமே... பாடல், திருபுவனம் G.ஆத்மநாதன்
மாசறு பொன்னே வலம்புரி முத்தே -சிலப்பதிகாரம் மாசறு பொன்னே வலம்புரி முத்தே -சிலப்பதிகாரம்
இனிமைத் தமிழ்மொழி எமது –பாரதிதாசன் இனிமைத் தமிழ்மொழி எமது –பாரதிதாசன்
பொதியம் பிறந்த தமிழ் -புலவர் ராசுவின் எழுத்தில் திருபுவனம் குரு.ஆத்மநாதன் குரலில் பொதியம் பிறந்த தமிழ் -புலவர் ராசுவின் எழுத்தில் திருபுவனம் குரு.ஆத்மநாதன் குரலில்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.