LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி

தயக்கம் தவிர்



அஞ்சி அஞ்சி அடங்குவதோ – நண்பா

அர்த்தம் இன்றி வாழ்வதோ!

நெஞ்சில் வீரம் வேண்டாமோ – நண்பா

நெருப்பாய் இருக்க வேண்டாமோ!

அடிமைகள் போல வாழ்வதோ – நண்பா

ஆடு மாடாய் அலைவதோ!

அடிமை அறுக்க வேண்டாமோ – நண்பா

அறிவை வளர்க்க வேண்டாமோ!

துன்பம் கண்டு சோர்வதோ – நண்பா

துயரம் கொண்டு சாவதோ!

இன்பம் காண வேண்டாமோ – நண்பா

இமயம் ஏற வேண்டாமோ!

உன்னை மறைத்து வாழ்வதோ – நண்பா

உன்னுள் உன்னைப் புதைப்பதோ!

உன்னுள் உறுதி வேண்டாமோ – நண்பா

உலகம் காண வேண்டாமோ!

தயங்கித் தயங்கிச் சாவதோ – நண்பா

தகுதி சாக வாழ்வதோ!

தயக்கம் தகர்க்க வேண்டாமோ – நண்பா

தகுதியைக் காட்ட வேண்டாமோ!

உண்மையைக் கொன்று எரிப்பதோ – நண்பா

வெற்று உடலையே சுமப்பதோ!

புது உதயமாதல் வேண்டாமோ – நண்பா

உலகம் போற்ற வேண்டாமோ!

தோல்வி கண்டு துவள்வதோ – நண்பா

சோர்வு கொண்டு தாழ்வதோ!

வாழ்வை வெல்ல வேண்டாமோ – நண்பா

புது வாசம் வீசவேண்டாமோ!

by Swathi   on 07 Mar 2015  0 Comments
Tags: தயக்கம் தவிர்   Thayakkam Thavir   கா.பாலபாரதியின் கவிதைகள்   Kaa.Baala Bharathi Kavithaigal   Kaa.Baala Bharathi Poems   Thayakkam Thavir Kavithai   Kavithai about Thayakkam Thavir  
 தொடர்புடையவை-Related Articles
எங்கள் தமிழகம் எங்கள் தமிழகம்
நெஞ்சைத் தருவாரோ நெஞ்சைத் தருவாரோ
யாருக்காக வாழ்வேன் யாருக்காக வாழ்வேன்
(இ)(தி)ரும(ன)(ண)ம் (இ)(தி)ரும(ன)(ண)ம்
அவளைப் பாடவா அவளைப் பாடவா
தயக்கம் தவிர் தயக்கம் தவிர்
அது இது அது இது
தோற்றுப் போனேன் தோற்றுப் போனேன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.