LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- அமெரிக்க அணுகுமுறை

அமெரிக்க மனோபாவம் -4

அவர்களுக்காக வாழ்கிறார்கள் 

அமெரிக்க வாழ்வில் ஒரு ஒழுங்கும், அமைதியும் இருப்பதைக் காணலாம். இதற்குக் காரணம்,அமெரிக்கர்கள் அடுத்தவர்களைப் பற்றியோ, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுபற்றியோ, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுபற்றியோ அதிகம் கண்டுகொள்வதில்லை. ஒவ்வொருவரும் அவரவர்களுக்குப் பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். மேலும் அவர்களுடைய வாழ்க்கை அடுத்தவர்களை மற்றும் சமுதாயத்தைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். இங்கே சமூகம் தனிமனித வாழ்வில் தலையிடுவதில்லை. சுருங்கச்சொன்னால் “ அமெரிக்கர்கள் அவர்களுக்காக வாழ்கிறார்கள்” இந்தியர்களாகிய நாம் அடுத்தவர்களுக்காக, அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ என்று கருதி, சமுதாயத்திற்காக வாழ்கிறோம்.


என் அமெரிக்க நண்பர் திரு. சார்லஸ் ஒரு வங்கியில் உயர் பொறுப்பில் பணியாற்றியவர், திடீரென ஒருநாள் வேலையை விட்டு விட்டதாக அறிந்தேன். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தன்னிடம் விவசாயப்பண்ணை உள்ளது என்றும், மேற்கொண்டு விவசாயம் பார்க்கப்போவதாகவும் குறிப்பிட்டார் இன்னொரு நண்பர் திரு. தாமஸ். கணிப்பொறித்துறையில் உயர்பொறுப்பில் பணியாற்றினாலும் மாலையில் இசைக்குழுவில் வாசிப்பவராக இருக்கிறார். இங்கே மக்கள் பிடித்த வேலையைத் தகுதி பார்க்காமல் செய்கிறார்கள். எனவே அமெரிக்கர்கள் பிடித்ததை செய்பவர்களாகவும், நாம் கிடைத்ததைச் செய்பவர்களாகவும் எனக்குத் தோன்றும்.

 

விரும்பிய தொழிலில் சேர்கிறார்கள்....... 

இங்கே, ஆசிரியத்தொழில், மருத்துவம், காவல்துறை, அரசுசேவை என எதுவானாலும், ஐம்பது சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் இந்தத் தொழிலை விரும்பித் தேர்வு செய்கிறார்கள். எந்தத்துறையில் அதிக வருமானம் வரும் என்று பார்த்து, அதன்பின்னால் அனைவரும் அணிவகுக்காமல் பிடித்த வேலையத் தேர்ந்தெடுத்து உழைக்கிறார்கள் எனவேதான், அமெரிக்காவில் எந்த அரசு அலுவலகம் சென்றாலும் புன்சிரிப்புடன் வரவேற்று மக்கள் தேவைகளை முழுமையாக நிவர்த்தி செய்வதைக் காண முடிகிறது. நம்மூரில் இன்றைய அரசுத் துறைகளின் மெத்தனப் போக்கு; மேசைக்கு மேசை கையைக் காட்டி மக்களை அலைக்கழிக்கும் நிலை; பணியின் இறுதிநாளை எதிர்கொண்டு காத்திருப்பவர்களைப் போல ஒரு சலிப்பு; லஞ்ச லாவண்யம்; இவையனைத்தையும் சம்பள உயர்வினாலோ, சட்டத்தினாலோ மாற்ற முடியாது. இன்றைய அரசுத் துறைகளில் உள்ள இந்த அசாதாரண நிலை, அங்குள்ளவர்களின் மனோபாவம் மாறும்போதுதான் மாற்றம் பெறும். வேலையை பணம், பதவிஉயர்வு, பென்சன் என்று மட்டும் பார்க்காமல் சேவையாக, ஆத்ம திருப்தியாக, பார்க்கும்பொழுது அனைத்தும் மாறிவிடும்.


சட்டத்தின் ஆட்சி..... 

அமெரிக்கர்கள் அதிகம் சட்டத்தை மதிப்பவர்கள், பொதுமக்களுக்கு எது சட்டத்திற்கு உட்பட்டவை என்ற அடிப்படை விஷயம் தெரிந்திருக்கும். இங்கு சட்டமும் மிகவும் கடுமையானதாகவும், அதை மீறுபவர்களுக்கு அது மிகப்பெரிய தண்டனையாகவும் இருக்கும். இங்கே எவர் பெயரையும் சொல்லி, தண்டனையிலிருந்து தப்ப முடியாது, அடுத்து. ஏதேனும் பிரச்சனை என்றால் அமெரிக்கர்கள் தங்களுக்குள் பேசித்தீர்த்துக் கொள்கிறார்கள், இல்லையேல் நீதிமன்றம் செல்கிறார்கள், வீதிகளில் ஒருவருக்கொருவர் சத்தம் போடுவதையோ, போக்குவரத்து ஸ்தம்பிப்பதையோ காண இயலாது.


மகிழ்ச்சி முக்கியம்... 

அமெரிக்கர்கள் சந்தோசத்திற்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பவர்கள். இங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெரும்பாலும் நகைச்சுவை நிறைந்ததாகவே இருக்கிறது. அமெரிக்கர்களைப்பற்றி நம்மிடம் ஒரு தவறான கண்ணோட்டம் உண்டு. அதாவது அவர்கள் உறவுகளுக்கு கண்ணோட்டம் உண்டு. அதாவது அவர்கள் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று. ஆனால் அமெரிக்கர்கள் வாழ்க்கையை மிகவும் ரசித்து வாழ்பவர்கள். ஐந்து நாட்கள் அலுவலகத்திற்காகவும் . இரண்டு நாட்கள் குடும்பத்துடன் செலவிடுபவர்கள். ஒவ்வொரு ஆண்டும் பல முறை திட்டமிட்டு விடுமுறை நாட்களில் விருப்பமான இடங்களுக்குச்சென்று குடும்பத்துடன் செலவிடுவார்கள். இன்னும் சொல்லப் போனால் குடும்பத்துடன் அதிகநேரம் செலவிடுவதற்காக அலுவலக பதவி உயர்வைக் கூட ஏற்றுக்கொள்ளாத சில அமெரிக்க நண்பர்களைப் பார்த்திருக்கிறேன். இங்குள்ள நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு “குடும்பத்தையும், வேலையையும் எப்படி எவ்வித பாதிப்பும் இல்லாமல் எடுத்துச் செல்வது?” என்று பல்வேறு பயிற்சிகளைக் கொடுக்கிறார்கள்.


தேசப்பற்று...... 

அமெரிக்கர்களுக்கு தேசப்பற்று மிகவும் அதிகம். அவர்கள் அமெரிக்கன் என்பதைப் பெருமையாக, கவுரவமாகக் கருதுகிறார்கள். அரசாங்கத்தின் முடிவுகளை ஆதரிப்பதாகட்டும் அல்லது விமர்சிப்பதாகட்டும் அதைக் காட்டத் தயங்கமாட்டார்கள். ஈராக் போரின்போது ஆதரிப்போர் “ இராணுவத்தை ஆதரிப்போம் “ என்னும் எதிர்ப்பவர்கள் “ இராணுவத்தை திரும்ப அழைக்கிறோம்” என்றும் தம் கருத்தைக் காரில் ஒட்டிக் கொண்டும் பல்வேறு அமைதிவழியிலும் கருத்துக்களைத் தெரிவிப்பார்கள். பெருவாரியான மக்கள் “ நம் நாட்டில் அரசியல் சரியில்லை, கல்வி சரியில்லை, ரோடு சரியில்லை, திட்டங்கள் சரியில்லை, என்று விமர்சிப்பதோடு நின்று விடுகிறார்கள்.

பெருவாரியான மக்கள் “ நம் நாட்டில் அரசியல் சரியில்லை, கல்வி சரியில்லை, ரோடு சரியில்லை, திட்டங்கள் சரியில்லை, என்று விமர்சிப்பதோடு நின்று விடுகிறார்கள். தான் இதை சரிசெய்ய எவ்விதம் பங்காற்ற முடியும் என்று சிந்தித்து அதற்காக செயல்படுவதில்லை.

 

தான் இதை சரிசெய்ய எவ்விதம் பங்காற்ற முடியும் என்றோ அல்லது தன் கருத்துடன் ஒத்த நிறுவனத்தில் அல்லது அமைப்பில் சேர்ந்து ஒரு பொதுவிசயம் குறித்து ஆதரவை அல்லது எதிர்ப்பைத் தெரிவிக்கும்போது கருத்தொற்றுமையுடன் பல்வேறு விஷயங்களை சரிசெய்யமுடியும் என்று உணர்ந்து செயல்படவேண்டும்.


சமூக அக்கறை..... 

அமெரிக்கர்கள் மிகவும் சமூக அக்கறை கொண்டவர்கள்.  இதைப்பற்றியே ஒரு தனிக்கட்டுரை எழுதவேண்டும். சுருக்கமாகச் சொன்னால் வசதிபடைத்தவர்கள் அதிகம் தன் பணத்தை சமூகப் பணிக்காக, தொண்டு நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துவிடுகிறார்கள். பணம் கொடுக்க  முடியாதவர்கள் தன்னால் முடிந்த அளவு தன் நேரத்தைப் போதுசெவைக்காகச் செலவிடுகிறார்கள். பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் அனைத்திலும் “ இல்லாதவர்களுக்கு உதவுவது (GIVE) என்பது அமெரிக்க கலாச்சரமாகவே மாறியுள்ளது. பெரும்பாலான அமெரிக்க அலுவலகங்களில் மாதத்திற்குப் பத்து மணி நேரம் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தில் அவர்களின் பணியாளர்களைப் பொது சேவை செய்ய ஊக்கப்படுத்துகிறார்கள். இவ்வாறாக, பல்வேறு வழிகளில் அமெரிக்கர்கள் அடுத்தவர்களுக்கு உதவுவதை, சமுதாயப்பணியில் ஈடுபடுவதைத் தம் கடமையாகக் கருதுகிறார்கள். இங்கு தொழில்அதிபர்களும் தொழில் நிறுவனங்களும் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியைத் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுக்கிறார்கள். உதாரணமாக இன்றைய உலகில் நம்பர் 1 பணக்காரர் வாரன் வாரன் பப்பெட் தன் 85 சதவீதம் சொத்தினை, சமூகப் பணிக்காக எழுதி வைத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் இரண்டு லட்சத்துப் பனிரெண்டாயிரம் கோடி ரூபாயாகும். இவர் இன்று அமெரிக்க இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.


ச.பார்த்தசாரதி

by Swathi   on 21 Jan 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
19-May-2018 05:05:23 தங்கம் said : Report Abuse
பார்த்தசாரதி..மிக்க நன்றி.மிகவும் சிறப்பான கட்டுரை..வளம் மிக்க நாட்டில் வசிக்கும் 30 கோடி பேரின் மனநிலை எவ்வாறு உள்ளது மற்றும் பலம் மிக்க நாட்டில் வசிக்கும் 130 கோடி பேரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்..நன்றி.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.