LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF

பூனையும், அதன் நிழலும்

முட்டாள் பூனை ஒன்று, ஒரு வீட்டில் இருந்து, பெரிய கருவாட்டு துண்டை திருடியது. அதனை வாயில் பத்திரமாக கவ்விக்கொண்டு தன் வீட்டிற்கு புறப்பட்டது.


செல்லும் வழியில் சில பூனைக்குட்டிகள் அந்த முட்டாள் பூனையிடம், “கருவாட்டுதுண்டை தறுமாறு” கேட்டன. ஆனால் அந்த முட்டாள் பூனையோ “இதை நான் யாருக்கும் தரமாட்டேன். இதை முழுவதுமாக நான் மட்டுமே சாப்பிட போகிறேன்”, என்று கூறி விட்டுச்சென்றது.


செல்லும் வழியில் அந்த முட்டாள் பூனை ஒரு பாலத்தை கடக்க வேண்டியிருந்தது. பூனை பாலத்தைக் கடக்கும் போது கீழே தண்ணீரைப் பார்த்தது. அந்தத் தண்ணீரில் அதன் உருவம் தெரிந்தது. 


தண்ணீரில் தெரிந்த அதன் உருவத்திலும் வாயில் கருவாட்டு துண்டு இருந்தது. 


அதைக் கண்ட பூனை “இந்த பூனையிடம் ஒரு பெரிய கருவாட்டு துண்டு உள்ளது. இதையும் அபகரித்துவிட வேண்டும்” என்று நினைத்தது. 


உடனே அது பலமாக "மியாவ், மியாவ்" எனக் கத்திக் கொண்டே தண்ணீரில் தெரிந்த பூனையின் மீது பாய்ந்தது. அதனால் அதன் வாயில் இருந்த கருவாட்டுதுண்டும் தண்ணீரில் விழுந்தது. தண்ணீரில் விழுந்தவுடன் தான் அந்த முட்டாள் பூனைக்கு புரிந்தது இது நிழல் பிம்பம் என்று.


பெரிய கருவாட்டு துண்டை தேடிச் சென்ற பூனை தண்ணீரில் தத்தளித்தது. மிகவும் துன்பத்துடன் உயிரக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என கரையேறியது அந்த முட்டாள் பூனை. 


என்ன குட்டீஸ், இந்த கதையில் வரும் முட்டாள் பூனையின் கதாபாத்திரம் நமக்கு விளக்குவது என்னவென்றால், எந்தவொரு, விசயத்திலும் நாம் பேராசை கொண்டால், பெரு நஷ்டம் உண்டாகும் என்பதுதான்.  

by Swathi   on 19 Mar 2014  0 Comments
Tags: பூனை கதைகள்   Cat Stories                 
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
கனடாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு! கனடாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு!
கால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு... கால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு...
விவசாயத்திற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்காகவும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்காக அரசு வகுத்துள்ள நடைமுறைகள் என்னென்ன? விவசாயத்திற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்காகவும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்காக அரசு வகுத்துள்ள நடைமுறைகள் என்னென்ன?
தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி : கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள் தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி : கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்
வழக்கொழிந்து வரும் பாரம்பரிய வாழைப்பழங்கள்  - சாவித்திரிகண்ணன் வழக்கொழிந்து வரும் பாரம்பரிய வாழைப்பழங்கள் - சாவித்திரிகண்ணன்
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
கலைமாமணி. இலந்தை இராமசாமி கலைமாமணி. இலந்தை இராமசாமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.