LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF

உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!

பொறியாளர் ஒருவர் மூலம் நாம் பெற்ற,  தஞ்சை பெரியகோவில்கட்டுமானம் பற்றிய ஒரு தகவல்!

கோபுர உச்சியை நன்கு உற்று நோக்குங்கள்.  பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல் இருக்கும்.இது ஒரு கல்லோ, அல்லது பல கற்களின் சேர்க்கையோ? இதன் எடை 80 டன். 

இந்த பிம்மாந்திர  கல்லை தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்... அந்த கல்லும் 80 டன். 
அந்த சதுரக் கல்லின் மேல், பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம் எட்டு நந்திகள். ஒவ்வொரு நந்தியின் எடையும் 10 டன்.  ஆக, எட்டு நந்தியின்  மொத்த எடை 80 டன்.

-  இந்த மூன்றும்தான் பெரிய கோவிலின் அஸ்திவாரம்! 
இது என்ன விந்தை எனலாம்!அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும்... தலைகீழான கூற்றாய் உள்ளதே..? என்கிற சிந்தனை ஏற்படலாம்.

நாம், செங்கற்களைக் கொண்டு ஒரு வீடு கட்டும்போது,  கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால் 4 அடிக்காவது அஸ்திவாரம் இடுவோம் அல்லவா?

பெரியகோவில் உயரம் 216 அடி. முழுக்க முழுக்க கற்களைக் கொண்டு எழுப்பப்பட்ட ஒரு பிரம்மாண்ட கற்கோவில் ஆகும்.கற்களின் எடையோ மிக மிக அதிகம்.  

இவ்வளவு பெரிய கோவிலுக்கு அஸ்திவாரம் எவ்வாறு அமைந்து இருக்கும் என நினைக்கிறீர்கள்?
குறைந்தது 50 அடி ஆழம், 50 அடி அகல அஸ்திவாரம் வேண்டும். இந்த அளவு சாத்தியமே இல்லை. 50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும்புகை மண்டலமாகத்தான் இருக்கும்.

ஆனால், பெரியகோவிலின் அஸ்திவாரம் வெறும் 5 அடிதான்! நம்புகிறீர்களா? மேலும் ஒரு வியப்பு. 
இது எப்படி சாத்தியம்..? இங்குதான் நம் சோழ விஞ்ஞானிகளின் வியத்தகு அறிவியல் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது.

பெரியகோவில் கட்டுமானத்தை, அதாவது கற்கள்  இணைக்கப்பட்டதை, ''இலகு பிணைப்பு'' என்கிறார்கள்.
அதாவது ஆங்கிலத்தில் Loose joint என்பார்கள். அதாவது ஒவ்வொரு கல்லையும் இணைக்கும் போது,  ஒரு நூலளவு இடைவெளிவிட்டு அடுக்கினார்கள்! எதற்காக..?

நமது கிராமத்தில் பயன்பட்ட கயிற்று கட்டிலை நினைவில் கொள்ளுங்கள்.. 

கயிறுகளின் பிணைப்பு  இலகுவாகத்தான் இருக்கும்... அதன் மேல் ஆட்கள் உட்காரும் போது, கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி இறுகிவிடும். கயிறுகளின் பிணைப்பு பலமாகிறது.  

இதன் அடிப்படைதான் பெரியகோவில் கட்டுமானம். இலகுவாக கற்களை அடுக்கிக் கொண்டே சென்று, அதன் உச்சியில் மிக பிரம்மாண்டமான எடையை   அழுத்தச் செய்வதன் மூலம், மொத்தகற்களும் இறுகி  மிக பலமான இணைப்பைப் பெறுகின்றன! 

இதுதான் அந்த 240 டன் எடை கொண்ட,  ஸ்தூபி, சதுரக்கல் மற்றும் எட்டு நந்தி.
அஸ்திவாரம் கோவிலின் உச்சியில் இடம் பெற்ற அதிசயம் இது.

எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்தக் கல்லும் அசையாது. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைபெற்று இருக்கும்!

சூரியசந்திரர் இருக்கும் வரை இக்கோவிலும் இருக்கும்!  - என்ற நம் இராஜராஜ சோழ மன்னரின் நம்பிக்கை எந்த காலத்திலும் பொய்க்காது.

by Mani Bharathi   on 21 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்கள் கண்டறிந்த உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்கள் கண்டறிந்த
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.