|
||||||||
கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் அரசியல் வரலாறு |
||||||||
கொங்குநாடு முன்னேற்ற கழகம் என்பது தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சியாகும். இதன் ஆதரவாளர்கள் பெரும்பான்மையோர் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ளனர். தோற்றம்: 2009ல் கோயமுத்தூரில் நடந்த கொங்கு வெள்ளாள அல்லது வேளாளக் கவுண்டர்கள் சங்கமான கொங்கு வேளாளர் பேரவையின் மாநாடு மூலம் கொங்குநாடு முன்னேற்றப் பேரவை என்ற பெயரில் இக்கட்சி தொடங்கப்பட்டது. கொங்குநாடு முன்னேற்ற கழகம் என்ற பெயர் பதிவு செய்யப்பட்டிருந்ததால் அப்பெயருக்கு இதன் பெயர் மாற்றப்பட்டது. இது கொங்கு வெள்ளாள அல்லது வேளாளக் கவுண்டர்கள் சங்கத்தால் தொடங்கப்பட்ட போதிலும் இக்கட்சி கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து இன மக்களின் முன்னேற்றதிற்காகவும் பாடுபடப்போவதாக கூறியுள்ளது. கட்சியின் சின்னம்: இதன் சின்னமாக சமையல் எரிவாயு உருளை. 2009 மக்களவைத் தேர்தல்: 2009ல் நடந்த மக்களவைத் தேர்தலில் 12 இடங்களில் போட்டியிட்ட இக்கட்சி 579,704 வாக்குகளைப் பெற்றது. இக்கட்சி எத்தொகுதியையும் வெல்லவில்லை எனினும் தோன்றிய 4 மாதத்தில் நிறைய வாக்குகள் பெற்றது அரசியல் பார்வையாளர்களால் சிறப்பாக கருதப்படுகிறது. கோவை, பொள்ளாச்சி , ஈரோடு ஆகிய தொகுதிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமாகவும் திருப்பூர், நாமக்கல் ஆகிய தொகுதிகளில் 50,000 அதிகமாகவும் வாக்குகளை பெற்று, விஜயகாந்தின் தே.மு.தி.க கட்சியினை நான்காம் இடத்திற்கு தள்ளியது. 2009 சட்டமன்ற இடைத்தேர்தல்: 2009 ஆகத்து மாதம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 19588 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் வந்து வைப்புத் தொகையை இழந்தது. |
||||||||
by Swathi on 28 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|