LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    அரசியல்    அரசியல் வரலாறு Print Friendly and PDF
- கட்சிகள் (Political Parties )

தமிழ் மாநில காங்கிரசின் அரசியல் வரலாறு

தமிழ் மாநில காங்கிரசு அல்லது தமிழ் மாநில காங்கிரஸ் தமாக 1996-2002ல் தமிழ்நாட்டில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி.


தோற்றம்:


     1996 சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் தேசியத் தலைவர் பி. வி. நரசிம்ம ராவ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். ஆனால் காங்கிரசின் தமிழ் நாட்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களில் பெரும்பாலானோர் இதனை எதிர்த்தனர். ஜி. கே. மூப்பனார் தலைமையில் பிரிந்து சென்று ”தமிழ் மாநில 
காங்கிரசு” என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார்.


கட்சியின் சின்னம்:


     சின்னம் மிதிவண்டி சைக்கிள் ஆகும்.


அரசியல் நிகழ்வுகள்:


     தமாக 1996 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 39 இடங்களில் வெற்றி பெற்றது. இத்தேர்தலுடன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் இணைந்து போட்டியிட்டு 20 இடங்களில் வென்றது. 1996-98 காலகட்டத்தில் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசுகளில் அங்கம் வகித்தது. இக்கட்சியின் ப.சிதம்பரம், எம். அருணாச்சலம், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் மத்திய அமைச்சர்களாகப் பணியாற்றினர். 1998 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் 3 இடங்களில் மட்டுமே வென்றது.


புதிய கூட்டணி:


     1999 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணி முறிந்து, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் எந்த தொகுதிகளிலும் வெற்றிபெற வில்லை. 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகக் கூட்டணியில் இடம்பெற்று 23 இடங்களில் வென்றது. 2001ல் மூப்பனாரின் 
மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி. கே. வாசன் தமாக தலைவரானார். 2002ல் தமாக இந்திய தேசியக் காங்கிரசுடன் இணைந்து விட்டது.

by Swathi   on 28 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழகத்தில் முத்திரை பதித்த சுயேட்சைகள்.... தமிழகத்தில் முத்திரை பதித்த சுயேட்சைகள்....
2016 சட்டமன்ற தேர்தல் - இளைஞர் கூட்டமைப்புக்கு 27ஆம் இடம் 2016 சட்டமன்ற தேர்தல் - இளைஞர் கூட்டமைப்புக்கு 27ஆம் இடம்
2011, 2016 தமிழக சட்டமன்ற தேர்தல்களில் கட்சிவாரியான  ஓட்டு விகிதங்கள் 2011, 2016 தமிழக சட்டமன்ற தேர்தல்களில் கட்சிவாரியான ஓட்டு விகிதங்கள்
தமிழக சட்டமன்றம் - 1952 முதல் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பு தமிழக சட்டமன்றம் - 1952 முதல் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பு
2016 தமிழக சட்டமன்ற தேர்தல் கட்சி வாரியாக வாக்கு சதவிதம் 2016 தமிழக சட்டமன்ற தேர்தல் கட்சி வாரியாக வாக்கு சதவிதம்
தமிழக சட்டசபை ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தமிழக சட்டசபை ஆளும் கட்சியும், எதிர்கட்சியும்
காந்திய மக்கள் இயக்கத்தின் வரலாறு காந்திய மக்கள் இயக்கத்தின் வரலாறு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் வரலாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் வரலாறு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.