LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

செவி வழித் தொடுசிகிச்சை உருவான கதை

இந்தியாவில் தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் செல்வபுரத்தில் பிறந்து வளர்ந்த நான் (பாஸ்கர்) சிறு வயது முதலேயே ஒரு நோயாளி உடல் முழுவது தோள்களில் நிறைய புண்கள் இருக்கும். இதற்காக ரோஸ் கலரில் ஒரு மருந்தை சிறு வயது முதலாகவே உடல் முழுவதும் எப்பொழுதும் தடவிக்கொண்டே இருப்பேன். மேலும் அடிக்கடி தலைவலி வரும். அந்தத் தலைவலி வந்தால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றும். அந்த அளவுக்கு கொடுமையாக இருக்கும். மேலும் தாங்க முடியாத வயிற்று வழியும், மலச்சிக்கலும், கண் பார்வை சரியாக தெரியாமலும் இருக்கும். மேலும் தூக்கமின்மை, சப்தத்தைக் கேட்டால் அலர்ஜி இது போன்ற பல நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிறு வயது முதலாகவே சிரமப்பட்டு வந்தேன். எனது அம்மா மற்றும் அப்பாவிடம் தலைவலிக்கிறது என்று கூறினால் அவர்கள் தைலம் வாங்கிக் கொடுப்பார்கள். ஆல்லது ஏதாவது ஒரு மாத்திரையை வாங்கிக் கொடுப்பார்கள். ஆனால் அது எனக்குப் போதவில்லை. அதை மீறி தலைவலி வரும். வரும்பொழுது தாங்க முடியாத அளவுக்கு வேதனையும். வழியும் இருக்கும்.

சிறு வயது முதலாகவே எங்கள் ஊரிலுள்ள ஒரு மருத்துவரிடம் நான் மாதத்திற்கு இரண்டு முறையாவது செல்வேன். அவரும் பல மருந்துக்களையும், மாத்திரைகளையும் ஊசிகளையும் கொடுத்துக் கொண்டே இருப்பார். நான் ஒரு நாள் அவரிடம் எனக்கு ஏன் இப்படிச் சிரமங்கள் வருகிறது ஏன் வீட்டில் மற்றவர்களுக்கு வரவில்லை, எனக்கு மட்டும் வருகிறதே. இதற்குக் காரணம் என்ன? என்று தெரிந்து கொண்டால் எனக்கு வசதியாக இருக்குமென்று அந்த மருத்துவரிடம் கேள்வி கேட்டேன். அதற்கு அவர் கூறினார். MBBS படித்தால் மட்டுமே உனக்குப் புரியும் என்றார் அப்பொழுதுதான் புரிந்து கொண்டேன். அவருக்கும் அது தெரியவில்லை என்று எனவே அவர் மீது கோபப்பட்டு, அதன் பிறகு நான் அவரைச் சந்திக்கவே இல்லை. 

இதன் பிறகு ஹோமியோபதியில் பல வருடங்களாக லேகியம் சாப்பிட்டு வந்தேன், பிறகு இயற்கை மருத்துவம், அக்கு பஞ்சர், மூலிகை, சித்த மருத்துவம் என்று நான் பார்க்காத வைத்தியமே கிடையாது. நான் பல ஊர்களுக்குப் பல வைத்தியத்திட்குப் பல ரூபாய் செலவு செய்து சென்று வந்தேன். ஆனால் என நோய்கள் மட்டுமே தீரவேயில்லை.

நான் ஒரு B.E பட்டதாரி, 1995 ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூரில் மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக்கில் டிப்ளமா சிவில் படித்தேன். மேலும் 1998 ல் கோயம்புத்தூர் இன்ஸ்டிட்யுட் ஆப் டெக்னாலஜி என்ற கல்லூரியில் B.E CIVIL ENGINEERING முடித்தேன். அதுவரை பொருளாதார ரீதியான பணம் ஏதும் கையில் இல்லாததால் பாட்டில் வைத்தியம், இயற்கை வைத்தியம் மட்டுமே அதிகமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு வேலைக்குச் சென்றேன் L&T கோயமுத்தூர் விமான நிலையம், சென்ன, மகாராஷ்ட்ரா, வீராணம் திட்டம், ICICI வங்கி மற்றும் பல ஊர்களில் பல நிறுவனங்களில் பணி புரிந்தேன். எனக்கு ஆரம்பத்தில் 2,000 ரூபாய் சம்பளத்தில் இருந்து கடைசியாக ஒரு லட்சம் சம்பளம் வரை வேலை செய்து வந்தேன்.

பணம் அதிகமாக, அதிகமாக பணம் அதிகமாக செலவு செய்தால் நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று நம்பினேன். ஆனால் அதிகப் பணம் செலவு செய்து, அதிக டெஸ்ட்களையும் அதிக மருந்து, மாத்திரைகளையும் பெரிய பெரிய மருத்துவர்களையும் சந்தித்தபொழுதுதான் புரிந்து. நோய் வேகமாக வளர்ந்தது. ஒரு குறிப்பிட்ட நிலையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்ய முடியாமல் தினமும் மருத்துவரிடம் சென்று ஊசி போட்டுக் கொள்வேன். ஒரு மருத்துவர் ஊசி போட்டால் அடுத்த நாள் அவர் ஊசி கொடுக்க மாட்டார் என்பதற்காக தினமும் வேறு வேறு மருத்துவரிடம் சென்று காய்ச்சல் என்று ஊசி போட்டுக் கொள்வேன். இப்படிப் பல மருத்துவர்களையும். மாத்திரைகளையும், ஊசிகளையும் பயன்படுத்தி பல நாள் வேலை செய்து ஒரு குறிப்பிட்ட நாளில் இனிமேல் ஒன்றுமே முடியாது என்ற நிலையில் அந்த நிறுவனத்திலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்து விட்டேன்.

ஓடிவந்த நான் ஒரு வருடமாக வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்தேன். அப்பொழுதுதான் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். இனிமேல் என் உடலுக்கு நான்தான் மருத்துவர். உடலில் பல மருத்துவர்கள் நிறைய படுத்துக் கொண்டு, தன் பெயருக்குப் பின்னால் ABCD என அனைத்து எழுத்துக்களையும் போட்டுள்ளார்கள். ஆனால் எந்த நோயையும் குணப்படுத்த தெரிவதில்லை. நோயை குணப்படுத்த தெரியாத இவர்கள் என் மருத்துவர்கள் கிடையாது என்று முடிவெடுத்து இனி என வாழ்க்கையில் என் உடலுக்கு நான் தான் மருத்துவர் என்று நான் என் உடலை என் கையில் எடுத்துக் கொண்டேன். சிறு வயது முதலே பல புத்தகங்களைப் படிப்பேன். அதில் மருத்துவ சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டும் கட் செய்து புத்தகத்தில் ஒட்டி வைப்பேன். இப்படி என் வீட்டில் பல புத்தகங்கள் உள்ளன. அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அந்த சிகிச்சையை நான் எனக்கு அனுபவப் பூர்வமாக பல மாதங்கள் செய்து பார்ப்பேன். ஆனால் அதில் எந்த இலாபமும் கிடைப்பதில்லை. உதாரணமாக, தலைவலி குணமாக இதைச் செய்யுங்கள் என்று ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டு இருப்பார்கள். அதை நான் சரியாகச் செய்து பார்ப்பேன். ஆனால் என் தலைவலி குணமாகாது. நான் சிறுவயதில் பென்சில் கொண்டு அந்தப் புத்தகத்தைத் திருத்தி எழுதுவேன்.எப்படி என்றால் தலைவலி குணமாக இந்த விஷயத்தைப் பயன்படுத்துங்கள். இந்த விஷயம் ஒரு வேளை சில தலைவலிகளை குணப்படுத்தும். ஒரு சில தலைவலிகளைக் குணப்படுத்தாது. இப்படி சிறு வயது முதலாகவே எனது கவனம் முழுவதும் என உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். என்பதில் மட்டுமே இருந்ததே தவிர வேலைக்கு செல்ல வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும், திருமணம் செய்து கொள்ள வேண்டும், குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும், கார், பங்களா, வாங்க வேண்டும். புகழ் வேண்டும் என்று எந்த விதத்திலும் என்றுமே எனக்குத் தோன்றியதே கிடையாது. ஏனென்றால் ஒவ்வொரு வினாடியும் என் உடல் எனக்கு பாரமாகவே இருந்தது.

இப்படி என் உடலுக்காக, என் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்காக நான் பல புத்தகங்கள், பல வைத்தியர்களைச் சந்தித்து, பல குருநாதர்களைச் சந்தித்து, பல ஊர்கள் சென்று பல நாட்கள் பல இடங்களில் தங்கி என் வாழ்க்கையில் நான் புரிந்து கொண்ட விஷயங்களைக் கற்றுக் கொண்டும், தெளிவாக எதுவுமே புரியவில்லை. மருத்துவ சம்பந்தப்பட்ட நிறைய புத்தகங்களைப் படித்தால் நமக்கு நோய் அதிகம் தான் ஆகிறது. குறைவதில்லை. ஏனென்றால் எதைப் பார்த்தாலும் பயன் வருகிறது. இன்டெர்நெட்டிலும், புத்தகங்களிலும், மருத்துவ சம்பந்தப்பட்ட விளக்கங்கள் அனைத்தும் ஒரு மனிதனை பயம் அடையச் செய்கிறதே தவிர தைரியத்தை கொடுப்பதே கிடையாது இப்படி என் மருத்துவ அறிவு அதிகரிக்க அதிகரிக்க நோயும் அதிகரித்துக் கொண்டே வந்தது.

ஒரு நாள் கோயமுத்தூரில் கவுண்டம்பாளையத்தில் ரங்கராஜ் என்ற ஒரு நபரைச் சந்தித்தேன். அவர் என்னிடம் 2 மணி நேரங்கள் ஒரே விஷயத்தைப் பற்றி மொக்கை போட்டார். அதாவது சாப்பிடும்பொழுது தண்ணீர்க் குடிக்க கூடாது. குடித்தால் உணவு ஒழுங்காக ஜீரணம் ஆகாது என்ற ஒரே விஷயத்தை 2 மணி நேரம் திரும்பத் திரும்பப் பல கோணத்தில் கூறிக் கொண்டே இருந்தார். நான் 2 மணி நேரம் கழித்து அவரை விட்டு பிய்த்து கொண்டு வெளியே வந்து விட்டேன். அவரைத் திட்டினேன். இவரெல்லாம். ஒரு மனிதரா ஒரே விஷயத்தை இரண்டு மணி நேரம் மொக்கை போடுகிறாரே என்று திட்டிவிட்டு வீட்டுக்கு வந்தேன். சரி அவர் சொன்னதைச் செய்து பார்க்கலாம் என்று ஒரு வாரம் செய்தேன். அப்பொழுதுதான் புரிந்தது என் உடலில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஒரு சின்ன விஷயத்தை நமது பழக்க வழக்கத்தை மாற்றுவதன் மூலமாக நோய்கள் குணமாகும் என்பதை அன்றுதான் புரிந்து கொண்டேன். அதன் பிறகு பல வருடங்களாக அவருடன் இருந்து அவரிடம் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். இந்தப் புத்தகத்திலுள்ள விஷயங்களில் 40% நான் அவரிடம் கற்றுக் கொண்டது தான். அதுதான் எனக்கு அடித்தளம். அதன்பிறகு அவர் எனக்குப் பல குருநாதர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் அறிமுகப்படுத்திய மற்றும் அறிமுகப்படுத்தாத பல ஊர்களில் உள்ள பல குருநாதர்களை நான் சந்தித்தேன். பல புத்தகங்களைப் படித்தேன். அப்பொழுது பல விஷயங்கள் புரிந்து கொள்ள முடிந்தது இருந்தாலும் ஏதோவொரு விஷயம் புரியாமலே இருந்தது.

ஒரு நாள் என் நண்பர் வீட்டில் அமர்ந்திருந்த பொழுது அங்கே வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்களின் பட்டயப் படிப்பு என்ற ஒரு புத்தகம் பார்த்தேன். அதில் முதல் 20 பக்கங்களை படிக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது, அதில் உடலிலுள்ள அனைத்து செல்களும் ஒரே அமைப்பில் உள்ளது சைட்டோபிளாசம், புரோட்டோபிளாசம், நியூக்லியஸ், டி.என்.ஏ, RNA, குரோமோசோம், ஜீன்ஸ், இறைத்துகள், விண்துகள் என இருபது பக்கத்தில் என் அறிவுக்கண்ணைத் திறப்பதற்கு ஒரு நல்ல விஷயம் கிடைத்தது. அதைப் படிக்கும் பொழுதுதான் என் மனதில் ஒரு தீப்பற்றியது. உடலில் உள்ள அனைத்து செல்களும் ஒன்றாக இருக்கும் பொழுது, ஒரே மாதிரியாக இருக்கும் பொழுது தனித்தனி நோய்களுக்குத் தனித்தனி சிகிச்சைகள் கிடையாது என்பதைப் புரிந்து கொண்டேன். எனவே ஏன் வாழ்க்கையில் நோய்களால் நான் பட்ட கஷ்டம் மற்றும் ரங்கராஜ் ஜி சொல்லி கொடுத்தது மற்றும் வேதாத்திரி மகரிஷி ஐயா வின் புத்தகம் இவையனைத்தும் ஒன்று சேர்ந்து நான் மீண்டும் பல மருத்துவ சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கற்றுக் கொள்ளும்பொழுது ஒரு விஷயம் புரிந்தது. அதாவது உலகிலுள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரு நோயாளி செய்யும் தவறுதான் காரணம். ஒரு நோயாளி தனது தவறை சரி செய்யாத வரையில் அந்த நோய் யாராலும் எந்த மருந்தாலும் எந்த மருத்துவராலும் எந்தப் பெரிய Scientist-டாலும் குணப்படுத்த முடியாது என்பதைப் புரிந்து கொண்டேன்.

Dr.பஸ்லூர் ரஹ்மான் M.B.B.S ஐயா அவர்களின் நீங்களும் ஆங்கில மருத்துவராகலாம், பெண்களே உங்களுக்காக, போன்ற புத்தகங்களை படித்தேன் மேலும் கோவையில் இயற்கை குமார் ஐயா நடத்தும் வகுப்புகளில் கலந்து கொண்டேன். அந்த மூலம் பல உண்மைகளை புரிந்து கொண்டேன்.

இப்படி உலகம் முழுவதும் அனைத்து மக்களும் எந்தெந்த வழியில் தவறு செய்ய முடியும்? அதை எப்படிச் சரி செய்ய முடியும் ? என்பதை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். உண்மையில் நான் அடுத்தவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதற்காக ஆராய்ச்சி செய்யவில்லை நான் என் உடலைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, என் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, வேறு வழியில்லாமல் ஆராய்ச்சி செய்து புரிந்து கொண்டேன். ஒரு காலகட்டத்தில் பல விஷயங்களைப் புரிந்து கொண்டு அதை நடைமுறைப்படுத்தும் பொழுது என் உடலிலுள்ள அனைத்து நோய்களும் என்னை விட்டு நீங்கின. நான் ஆரோக்கியமானேன். 24 மணி நேரமும் நோயாளியாக இருந்த நான் வருடம் முழுவதும் ஆரோக்கியத்துடன், அளவுக்கு அதிகமான சக்தியுடன், நிம்மதியுடன், தெளிவுடன், தைரியத்துடன் வாழ ஆரம்பித்தேன். நான் படித்த படிப்புகளுக்காக வேலை செய்து கொண்டிருந்த நான் எனது உறவினர்கள், நண்பர்களுக்கு இந்த முறைகளைத் தெரியப்படுத்தி வந்தேன். ஒரு நாள் யோசித்தேன். நாம் படித்த படிப்புக்கு உலகில் பல ஆயிரம் பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆரோக்கியத்தைப் பற்றிச் சொல்வதற்கு உலகில் யாருமே இல்லை என்பதைப் புரிந்து கொண்டு இனி நான் செய்து கொண்டிருக்கும் வேலை தேவையில்லையென்று வேலையை ராஜினாமா செய்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

முதலில் கோவையில் பத்தாயிரம் நோட்டீசுகள் அடித்து ஒரு மண்டபம் வாடகைக்கு எடுத்து நோயுள்ளவர்கள் வாருங்கள், நான்கு மணி நேரம் நான் பேசுவததைக் கேளுங்கள். அதன்படி நடந்தால் உங்கள் நோய் குணமாகும் என்று அச்சிட்டு விநியோகம் செய்தேன். கோவையிலுள்ள அனைத்துப் பார்க்குகள், கோவில்கள் முன்பு நின்று தனி ஆளாக நோட்டீஸ் சப்ளை செய்தேன். ஒவ்வொரு வீடாக சென்று கொடுத்தேன். ஆனால் யாரும் வரவில்லை.

நோட்டீஸைப் பார்த்த அனைவரும் நீ யார்? நீ என்ன படித்திருக்கிறாய்? அரசாங்கம் உனக்கு அனுமதி கொடுத்திருக்கிறதா? சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியாதென்று உலக மருத்துவர்கள் கூறுகிறார்கள், நீ குணப்படுத்த முடியும் என்று எப்படிச் சொல்லலாம்? உன் வீடு எங்கே இருக்கிறது ! உன் அப்பாவின் பெயரென்ன? உன் விலாசம் என்ன? உன் வயது என்ன? ஒரு வேலை நாங்கள் வந்து அந்துச் சிகிச்சை சரியாக அமையவில்லையென்றால் நஷ்ட ஈடு கொடுப்பாயா ? நீ சொல்வதை நாங்கள் எப்படி நம்ப முடியும்? இது போன்ற பல கேள்விகள் மட்டும் அனைவரும் கேட்டார்கள். ஒரு சிலர் நீ நாலு மணி நேரம் பேசினால் என் காதில் இரத்தம் வந்தால் அதைத் துடைக்க பஞ்சு கொடுப்பாயா? என்ற கேள்விகளும் உட்பட பல கேள்விகளைக் கேட்டார்களே தவிர யாரும் நேரில் வரவுமில்லை. வந்தவர்கள் அமரவுமில்லை. 

இப்படிப் பல நாட்களாகக் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய ஊர்களில் மண்டபம் வாடகைக்கு எடுத்து மைக் செட் வாடகைக்கு எடுத்து பல ஆயிரம் நோட்டீஸ் கொடுத்தான் யாரும் வரவில்லை. பல ஊர்களில் ஒருவர் கூட வராமல் தனியாக அமர்ந்திருப்பேன். பிறகு ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். இப்படி ஒவ்வொருவராக முதலில் வந்து இதை நடைமுறைபடுத்தி குணமாக ஆரம்பித்தவுடன் பலரையும் அனுப்பி வைத்தார்கள். எனவே ஆரம்பத்தில் ஒரு 2 1/2 வருடங்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் நடந்து கொண்டிருந்த இந்த சிகிச்சை பிறகு பல ஊர்களில் பல நாடுகளில் உள்ள மக்கள் பயன்பெற்று இப்பொழுது உலக மக்கள் அனைவரும் இந்த சிகிச்சியால் பயன்பெற்று பல லட்சக்கணக்கான மக்கள் www.anatomictherapy.org என்ற இணையதளத்தின் மூலமாகவும் facebook மூலமாகவும், E-Mail மூலமாகவும் தகவல் தெரிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். 

எனவே இந்தச் சிகிச்சையில் எந்தவொரு மருந்தும், மாத்திரையும் இல்லை. நோயாளி செய்யும் தவறுதான் நோய்க்குக் காரணம். தவறை சரி செய்தால் நோய் குணமாகும் என்பதே இந்தச் சிகிச்சையின் முக்கிய அம்சமாகும். எனவே இப்பொழுது உலகம் முழுவதும் பல லட்சம் பேர் இதனால் பயனடைந்து உள்ளார்கள். எனவே இன்று ஒரு நாளைக்கு சுமார் 500 பேர் இந்த சிகிச்சையை நடைமுறைப்படுத்துபவர்கள் சந்தேகம் கேட்பதற்காக போன் செய்கிறார்கள். இதற்காக நமது அலுவலகத்தில் பல பேரை பணியமர்த்தி பதி சொல்ல வைத்துள்ளோம். மேலும் இணையதளத்திலும் இலவசமாக அனைத்து DVDகளை விடியோக்களும் ஆடியோக்களும் புத்தகங்களையும் டவுன்லோடு செய்து கொள்ள ஏற்பாடு செய்துள்ளோம். youtube மூலமாக அனைத்து விசயங்களையும் இலவசமாக உலக மக்கள் பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

மேலும் உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும், ஊர்களிலும் ஒவ்வொரு நாளும் குறைந்தது 500 அல்லது 1000 பேருக்கு இலவசமாகவும் அல்லது உணவுக்கான கட்டணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு நேரடியாக இந்த விஷயங்களைப் பிரச்சாரம் செய்து வருகிறோம். அனைத்து மொழிகளிலும் இந்தச் சிகிச்சை மொழி பெயர்ப்பு ஏற்பாடு செய்து கொண்டுள்ளோம். எனவே உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்ற நோக்கம் மட்டுமே எங்கள் நோக்கம். எனவே பொருளாதார ரீதியாக உதவி செய்ய விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி நன்கொடைகளை அனுப்பலாம். ஆனால் சிலர் அனுமதியில்லாமல் வெப்சைட் மூலமாகவும், நன்கொடைகளை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு வருத்தத்திற்குரிய விஷயம்.

THE STORY OF HOW ANATOMIC THERAPY STARTED

I, Baskar, was born in Selvapuram in the city of Coimbatore, Coimbatore District, Tamil Nadu, India. I was sick since my childhood. I used to have sores on my skin all over my body. I used to apply a rose-colored medicine throughout my body ever since I was a small boy. I also used to get frequent headache. The headache was so severe that sometimes I felt like committing suicide.
In addition, I used to get indigestion and unbearable stomach ache. My eye sight also was not proper. I was also suffering from many other diseases such as lack of sleep, allergy to sound, etc. Whenever I told my mother and father about my headache they would buy an oil or tablet and give me. But, it was not serving any purpose and my headache continued in spite of using them. Sometimes, my pain and agony was very much unbearable.
Since my childhood, I used to go to a doctor in our town at least twice in a month. He used to give me many medicines, tablets and injections. One day I asked the doctor, “Why am I getting so many troubles like these? Others in my house do not face these problems. What is the reason for this?” He replied, “You will understand only if you study M.B.B.S.” Then I understood that he also did not have the answer to my question. I got angry with him and I never met him again.
Then I took homeopathic medicine or a few years. Then I tried nature cure, acupuncture, herbal medicine, Siddha medicine, etc. I tried all the medicines available, went to several places and spent a lot of money. But my diseases were not getting cured.
I am a B.E. graduate. I studied Diploma in Civil Engineering in Meenakshi Ammal Polytechnic in Uthiramerur in Kancheepuram District in Tamil Nadu in the year 1995. Then, I completed B.E. Civil Engineering in 1998 in Coimbatore Institute of Technology. Till that time, I was trying nature cure and local medicine since I was not economically well off.
Then I got a job and worked in L&T Coimbatore, Airport Chennai, Maharashtra, Veeranam Project, ICICI Bank and many organizations at many places. I started with a salary of Rs.2000 per month and at one point of time I was working for a salary of Rs.1 million.
As I started getting more money, I believed that my diseases could be cured by spending more money. As I met bigger doctors, took more tests and consumed more medicines and tablets I found that my disease was growing further. At one stage, when I was working in a private company, I had to go to the doctor everyday and take an injection. Since the doctor was not ready to give the injection every day, I used to go to a different doctor everyday and took the injection.
Thus, I worked for a long time with the help of medicines and injections and one fine day I ran away from that company without informing them because I could not work any further in this condition.
Then I was bedridden in my house for one year. At that time, I came to one conclusion. From now onwards, I am the doctor to my body. There are so many doctors in this world who have studied a lot and have all the letters in the English alphabets behind their names. But they cannot cure any disease. When they do not know how to cure the disease, they are not doctors. So, I decided that, in my life from now on I am my own doctor and I took responsibility for my body.
Ever since I was a small boy, I used to read a lot of books. I used to cut all the articles concerned to medicine and health form newspapers and magazines and paste them in a notebook. There are many such notebooks in my house.
I used to experiment the treatments given in those books on myself for several months. But I did not get any benefit from them. For example, it was mentioned in a book that something should be done for curing headache. I would follow it faithfully and observe. But my headache would not be cured. Then I used to correct the matter in the book using a pencil with remarks such as “This cannot be used for curing headache.”, “This thing will cure some headaches sometimes”, etc.
Thus, ever since my childhood, my focus of attention was only on keeping my body healthy and I never had any ambition that I should go for a job, earn money, get married, get children, buy car and bungalow, get name and fame, etc. It was because my body was a burden for me every second.
Now I am sharing with you all the knowledge I gathered in my life by reading many books, by meeting many doctors and many Gurus and by visiting many places, staying for several days at several towns for keeping my own body healthy. Even when I kept on learning many things in this way, I was not getting clarity of thought.
As we read more and more medicine-related books, our disease only gets worsened and it does get cured. This is because whatever we read or see creates only a fear in us. All the explanations about medicine in the books and on the Internet only make a man more afraid about his health and they do not instil any confidence in him at all. Thus, as my medical knowledge increased, my disease also kept on increasing.
One day I met a person named Shri. Rangaraj in Koundampalayam in Coimbatore. He bored me by talking for two hours about just one topic. He spoke about the one point that we should not drink water while eating food and if we do so the food will not digest well. He kept on explaining about this matter from different angles for two hours. After two hours, I somehow ended the talk and came out. Then I was abusing him in my mind saying, “What a boring person! He keeps talking about one point for two hours!”
When I reached home, I thought, “All right, let me try what he said.” I practised it for one week. Only then I understood it. I found a big change in my body. I understood on that day that diseases can be cured by slightly changing our habits.
After that, I remained with Shri. Rangaraj for several years and I learnt many things from him. What I learnt from him forms 40% of the content of this book. That laid the foundation for me. Then he introduced me to several Gurus. I met those Gurus and also many other Gurus in many places. I also read many books. Then I could understand many new concepts. Still, I felt that I was missing some more knowledge.
One day, when I was sitting in my friend’s house, I saw a book by Vethathiri Maharishi. I got the opportunity to read the first 20 pages in that book. I came to know that all the cells in the body are of the same structure. I also learnt about cytoplasm, protoplasm, nucleus, DNA, RNA, chromosome, genes and many other things.
This good knowledge opened my eyes. When I read about these, there was a fire in my mind. I understood that when all the cells in the body are of the same structure, separate treatment cannot be there for individual body parts and each and every disease.
Thus, in addition to my own experience of facing many diseases in my own life, I learnt a lot from Shri. Rangaraj and also from the book by Vethathiri Maharishi. When I started learning many other facts related to medicines, I understood one thing. That is, the mistakes being committed by the patient are the cause of all the diseases in the world. I understood that unless and until the patient corrects his mistakes, his diseases cannot be cured by any medicine or any doctor in this world.
Then I started doing research on what are the various mistakes committed by the people around the world and how these mistakes can be corrected. In fact, I was not doing this research for teaching others. I was actually doing it, without any other alternative, for curing my own body and for saving my own life.
At one stage, when I understood many things and started implementing them, all the diseases left my body. I became very healthy. From a person who was a patient for 24 hours, I was transformed into a person who was healthy throughout the year with enormous energy and I started living with peace, clarity of mind and confidence.
Then I started informing my friends and relatives about these procedures and guidelines. Then I pondered one day about what I want to do in life. Many people in this world have studied what I have studied in college and they are working in that field. But there is no one in this world to teach people about how to be healthy. Then I immediately resigned the job from the company where I was working and started thinking how I can make a beginning.
Initially, I printed pamphlets and notices saying, “All those who have diseases are invited to come and listen to my talk for 4 hours. If you follow this your disease will be cured”. I distributed 10000 notices in Coimbatore and hired a hall for the meeting. I gave the notices to the public by standing alone in front of parks and temples and also going door to door. But, finally no one turned up to listen to my talk.
Those who saw the notice asked me so many questions such as, “Who are you? What have you studied? Do you have Government permission? Doctors say that sugar disease cannot be cured. How can you claim that it can be cured? What is your father’s name? What is your address? What is your age? In case we do your treatment and it is not successful, will you give us compensation? How can we believe what you say?”
People asked these and many more such questions. Some people even asked, “If you talk for four hours and we get bleeding in our ears, will you supply cotton to wipe it out?” Finally, no one attended the session. Even those very few persons who turned up at the venue did not sit to listen to my talk.
Thus, even after hiring halls for rent in Coimbatore, Tiruppur, Pollachi and other towns, hiring mike sets and distributing several thousands of pamphlets, nobody came to listen to me. In some places I used to be sitting alone without any audience. Then slowly started coming. When some of them started implementing this and started getting cured, they sent some more people to my sessions.
Thus, this treatment, which was going on without much progress and with meagre public response for about two and a half years, finally began to take off. Today, people in several countries are following this and getting benefits. Several millions of people keep on informing us through our website www.anatomictherapy.org and also through Face book and email about the benefits they have received by following this treatment.
So, the basic feature of our treatment is that the mistakes being done by the patient are the cause of all diseases. Once the mistake is set right, the disease will get cured on its own. There is no medicine or tablet in this treatment.
Today, several millions of people all over the world have been benefited by this treatment. Everyday about 500 people call us on phone to get their doubts cleared. We have employed several people in our office to answer these calls. Moreover, we have arranged for free download of all DVDs, videos, audios and books from our website. We have also made the videos available on www.youtube.com so that the people all over the world can get access to the treatment.
In addition to these, we are propagating these matters by conducting direct contact sessions in different towns in various countries of the world to about 500 to 1000 people per session free of charge or taking a nominal amount only for the food supplied. We have also undertaken the translation of this treatment in all the languages.
We are doing all these with the sole objective that all the people in the world should be healthy. Therefore, those who desire to give financial help for this noble cause can send their donations as per thepeople details given below. But it is sad that some people are taking donations under the name of this treatment in person and also through some other websites without our permission.

by Swathi   on 29 Apr 2014  0 Comments
Tags: Anatomic Therapy   Anatomic Therapy Healer Baskar   செவி வழித் தொண்டு சிகிச்சை   ஹீலர் பாஸ்கர்           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.