LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நேரம் : மாலை 6 மணி.

சாகு தன் இருச்சக்கர வாகனத்தில் திருமுல்லைவாயில், ஆரிக்கம்மேடு கிராமம் வழியாக, சிகரெட் புகைத்துக் கொண்டு சென்றுக்கொண்டிருந்தான்.

சாகு பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவன் என்றாலும், நன்கு தமிழ் பேசத் தெரிந்தவன். ஏனென்றால், அவன் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் பத்து வருடங்களாக தங்கியிருகின்றான்.

சாகு, சாலையில் சென்றுக் கொண்டிருக்கும்போது ஒரு நாய் அவனது வண்டியின் குறுக்கே வந்தது. இவன் அதன் மீது மோதா வண்ணம் வலைத்து, நெலித்து ஓட்டிச் சென்று எதிரே வந்த லாரியின் மீது மோத பார்கின்றான். அதிர்ஷ்ட வசமாக லாரியின் ஓட்டுநர் வண்டியை நிறுத்த, இவன் அந்த ஓட்டுநரின் கிருபையால் உயிர் பிழைக்கின்றான். பின்பு, அந்த ஓட்டுநரிடம் வசைப் பாடலை கேட்டுக் கொண்டு, கையில் புகைந்துக் கொண்டிருந்த சிகரெட்டை வீசியெரிந்து விட்டு அம்பத்தூரை நோக்கிச் சென்றான்.

சாகு அம்பத்தூரில் ஒரு பார்சல் சர்வீஸின் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே செல்லும்போது மாலை 6.20 மணி. உள்ளே சென்றதும் வலதுப்புறமாக இருந்த ரிஷப்சென் பணியாளிடம், தன்னிடம் இருந்த ரசீதை கொடுத்து அதற்கான பார்சலை கேட்டான். பணியாள் ரசீதை பார்த்து ஒரு பார்சலை எடுத்து மேஜையின் மீது வைத்தார். அந்த பார்சலின் மேல் புறம் “MEDICINE”  “URGENT” என்ற பெரிய எழுத்துக்கள் தெரிந்தது. பின்பு அதனை எடுத்துக்கொண்டு முகப்பேர் மேற்கு, எம்.ஜி.யார் நகரில் இருந்த மெடிக்கல் ஷாப்பிற்குள் சென்றான். அதன் உரிமையாளன் நிதீஸிடம் சாகு, அந்த பார்சலை காண்பித்தான். நிதீஸ், சாகுவை தன் அறைக்கு சென்று அமரும்படி கூறினான். 15 நிமிடங்கள் கழித்து நிதீஸ் அந்த அறைக்குள் சென்றான். இருவரும் இந்தியில் பேசிக்கொண்டார்கள்.

“என்ன சாகு டீ, காபி எதாவது சாப்பிறியா” என கேட்டவாறு நிதீஸ் அந்த பார்சலை பிரித்தான். உள்ளே, மைதா மாவு போன்ற தோற்றத்தில் 5 பொட்டலங்கள் தெரிந்தது. அதில் ஒரு பொட்டலத்தை பிரித்து சிறிதளவு எடுத்து நாக்கில் வைத்து சுவைத்தான்.

“நைஜீரியாகாரன், நைஜீரியாகாரன் தான்டா. சும்மா ஜிவ்வுனு இருக்கு, அவ்ளோ சின்ன லேப்ல எப்படி இவ்ளோ அருமையா சரக்க தயாரிக்ரானு தெரியல. அந்த FORMULA – மட்டும் நமக்கு தெரிஞ்சிருந்தது, நாம என்னிக்கோ தாவூத்தையே தாவிபோயிருக்கலாம்” என்று நிதீஸ் EARTH PULLER MACHINE – சப்தத்தை போல ஒரு கேவலமான சிரிப்பை சிரித்தான்.

“இந்த பார்சல யார்யாருக்கு அனுப்பனும்” என்று சாகு கேட்டான்.

“பெங்களூரு ஹனுமந்த ரெட்டிக்கு 2, ஹைதரபாத் சத்ய கௌடாக்கு 2 வழக்கம் போல நான் “MEDICINE” பார்சல்னு அனுப்பிட்றேன். நீ அந்த ஒரு பார்சல திருவள்ளூர் ராம்சரஸ்க்கு நைட்க்குள சப்ளை பண்ணிடு சரியா” என்றான் நிதீஸ்.

“ம்ம், சரி குடுத்துடலாம்” என்றான் சாகு.

நிதீஸ், “டேய் வழில எதுவும் ப்ராப்ளம் வராதுல, 30 லட்ச ரூபா சரக்குடா” என்றான்.

“அதெல்லாம் எதுவும் ப்ராப்ளம் வராது, மெயின் ரோட்ல போனாதான் ப்ராப்ளம். திருமுல்லைவாயில்ல இருந்து பச்சையம்மன் கோயில் ரூட்ல போனா ஆரிக்கம்மேடு கிராமம் வரும், அதல இருந்து லஷ்மிபுரம், ரெட்ஹில்ஸ் ரோட்ல போனா, திருவள்ளுர்க்கு ஒரு ஷாட் ரூட் இருக்கு. 30 நிமிசத்ல போய்ட்லாம். போலீஸ் ப்ராப்ளம் சுத்தமா இருக்காது” என்றான் சாகு.

“சரி நீ கிளம்பு, போய் டெலிவரி குடுத்துட்டு ஃபோன் பண்ணு” என்றான் நிதீஸ்.

சாகு அங்கிருந்து கிளம்பிச் சென்று தன் வண்டியின் SIDE BOX – ல் சரக்கை வைத்துக் கொண்டு சென்றான்.

மணி இரவு 7.10, சாகு ஆரிக்கம்மேடு வழியாக சென்றுக் கொண்டிருக்கும் போது தூரத்தில் ஏதோ சலசலப்பு கேட்கிறது. தூரத்தில் போலீஸூம், பொது மக்களும் கலந்து நிற்கின்றனர். சாகுவுக்கு லேசாக பயம், இந்த நேரத்தில் போலீஸூக்கு இங்கு என்ன வேலை என்று, அருகில் இருந்த டீ கடைக்கு சென்று கடைகாரனிடம் விசாரித்தான்.

கடைக்காரன், அங்கு சில குடிசைகள் எரிந்து விட்டதாகவும், அதை அணைக்க FIRE ENGINE – னும், போலீஸூம் வந்துள்ளதாக கூறினான். சாகு அதை கேட்டு நிம்மதி பெரு மூச்சை ஒன்றை விட்டு அங்கிருந்து கிளம்பி, தீ பிடித்த இடத்திற்கு சென்று வேடிக்கை பார்க்கிறான். அங்கு உள்ள குடிசைகள் எரிந்து சாம்பலாகி கிடக்கின்றன. கும்பலில் இருந்த ஒருவன் தற்செயலாக திரும்பி சாகுவை பார்க்கின்றான். பார்த்ததும் பெருங்குரலில் கத்துகிறான், “டேய்.... இவன்தான்டா நம்ம குடிசை எல்லாம் எரிச்சி சாம்பலாக்கினான் அடிச்சி கொல்லுங்கடா” என்று.

கும்பல், அரசாங்க சலுகையை வாங்க, முன்டியடித்துக் கொண்டு ஓடி வருவது போல வந்து, அவனை பகுதி, பகுதியாக பதம் பார்கிறார்கள்.

சாகு வலிதாங்காமல் வண்டியுடன் கீழே விழுகிறான். அதற்குள் சுதாரித்துக் கொண்ட போலீஸ் அடிக்கும் கும்பலை தடுத்து நிறுத்தியது. போலீஸ் விசாரிக்கையில், மாலை 6 மணிவாக்கில் ஒரு லாரியில் இவன் அடிபடகிடந்ததாகவும், அப்பொழுது தன் கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெடை இந்த குடிசையின் மேல் வீசியெரிந்ததாகவும் கூறினான் முதலில் பார்த்தவன்.

பிறகு போலீஸ் அவர்களை சமாதானப்படுத்தி இவனை கைது செய்தனர். இன்ஸ்பெக்டர் ஒரு கான்ஸ்டெபிளிடம், அவன் ஓட்டி வந்த வண்டியை காவல் நிலையம் கொண்டு வரும்படி கூறினார். கான்ஸ்டெபிள் கட்டளைக்கு ஏற்ப கீழே சாய்ந்துகிடந்த வண்டியை நிமிர்த்தினார், அப்பொழுது வண்டியின் SIDE BOX – உடைந்து அதில் இருந்த சரக்கு பொட்டலம் கிழிந்திருப்பதை பார்க்கிறார். பொட்டலத்திலிருந்து சரக்கை ஒரு கை அள்ளி மூக்கின் அருகே வைத்து நன்றாக முகர்ந்து பார்த்தவாறு இன்ஸ்பெக்டரிடம் வண்டியில் ஒரு பொட்டலம் இருப்பதாக கூறி சுருண்டு தரையில் விழுகிறார்.

THEETHUM NANDRUM PIRAR THARA VARAA
by ASHOK.K   on 11 Dec 2017  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா
அவர் - நிலாரவி அவர் - நிலாரவி
காதல் வீரியம் - எஸ்.கண்ணன் காதல் வீரியம் - எஸ்.கண்ணன்
கனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன் கனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்
ஐயர் தாதா -  எஸ்.கண்ணன் ஐயர் தாதா - எஸ்.கண்ணன்
டாக்டர் வீடு - எஸ்.கண்ணன் டாக்டர் வீடு - எஸ்.கண்ணன்
குருத்துவாசனை - சு.மு.அகமது குருத்துவாசனை - சு.மு.அகமது
உலர்ந்த பொழுதுகள் - சு.மு.அகமது உலர்ந்த பொழுதுகள் - சு.மு.அகமது
கருத்துகள்
15-Dec-2017 10:29:54 அறிவழகன்.பி said : Report Abuse
அருமை அற்புதமான சிறுகதை.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.