LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

தெகிடி திரைவிமர்சனம் !!

நடிகர் : அசோக் செல்வன்


நடிகை : ஜனனி அய்யர்


இயக்கம் : பி.ரமேஸ்


இசை : நிவாஸ் பிரசன்னா


எம்.ஏ,க்ரிமினாலஜி முடிக்கும் நம்ம ஹீரோ அசோக் செல்வனுக்கு சென்னையில் டிடெக்டிவ் ஏஜென்சியில் வேலை கிடைக்கிறது. முதல் வேலையாக சில நபர்களைப் பின் தொடர்ந்து அவர்களைப் பற்றி ரிப்போர்ட் சப்மிட் பண்ணும்படி அசைன்மெண்ட் தரப்படுகிறது. அந்த நபர்களில் ஹீரோயினும் ஒருவர். அந்த டிடெக்டிவ் ஏஜென்சியின் பாலிசிகளில் ஒன்று, ஃபாலோ செய்யப்படும் நபருடன் டைரக்ட் காண்டாக் வைக்கக்கூடாது என்பது. அதன்படியே நடக்கும் ஹீரோ, ஹீரோயின் விஷயத்தில் மட்டும் காதலால் கம்பெனியின் பாலிசியை மீறுகிறார். பின்தொடர்ந்த நபர்கள் பற்றி ஹீரோவும் ரிப்போர்ட் தர, அடுத்தடுத்து அந்த நபர்கள் வரிசைப்படி கொல்லப்படுகிறார்கள். இறுதியில் ஹீரோ ஹீரோயினை காப்பாற்றினாரா? யார் அவர்களைக் கொல்வது? விசாரிக்கச் சொன்ன கஸ்டமர் யார்? என ஹீரோ துப்பறிவதே படத்தின் மீதி கதை. 


படத்தில் கம்மியான நடிகர்கள் என்பதால் மெயின் வில்லன் இவராகத் தான் இருப்பார் என இரண்டு பேரை கெஸ் பண்ண முடிகிறது. ஆனாலும் படம் முடிகையில் கொடுக்கும் ட்விஸ்ட் செம......


ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் கொஞ்சம் போனாலும் ஆக்சன் ஃபைட் அல்லது சேஸிங் மிஸ்சிங். வெறுமனே புலனாய்வும், தேடுவதும் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பைக் கொடுக்கிறது.


படத்தில் ஒரு மிகப் பெரிய தவறு என்னவென்றால், நம்ம ஹீரோவையே ஓவர் டேக் பண்ணும் ஜெயப்ரகாஷ் கேரக்டர் தான். ஹீரோவை தனி ரூட்டில் துப்பறிய விட்டாலும் ஜெயப்ரகாஷ்க்கு முன் ஹீரோ பம்மிக்கொண்டு சப்பையாக தோன்றுவது, இத்தகைய த்ரில்லர் படங்களில் இருக்கக்கூடாத ஒரு விஷயம். ஹீரோவை சாமானியனாக காட்டியதைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், படம் விறுவிறுப்பாகச் செல்லும் நல்ல த்ரில்லர் தான். அதிலும் கடைசியில் சொதப்பாமல், லாஜிக்கலாக எல்லாக் கொலைகளுக்கும் காரணம் சொல்லி இருப்பது கதைக்கு சிறப்பு.


ஹீரோ அசோக் செல்வனுக்கு இது இரண்டாவது படம். இந்த படம் முழுவதும் சீரியஸான ஆளாகவே வருகிறார். முகமே அப்படியா, அல்லது சீரியஸான கேரக்டர் என்று இயக்குநர் ரொம்ப மிரட்டி விட்டாரா என்று தெரியவில்லை. ஆனாலும் அவரிடம் ஏதோ மிஸ்சிங்.....

 

ஹீரோயின் ஜனனிக்கு ப்ளஸ்ஸே கண்கள் தான். அதில் பலவித எக்ஸ்பிரசன்ஸ் காட்டி, நம்மைக் கவர்கிறார். காதல் போர்சன் மட்டும் என்பதால் கலர்ஃபுல்லாகவே வந்து போகிறார்.  


பாடல்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்றாலும், பின்னணி இசை பரவாயில்லை....


மொத்தத்தில் தெகிடி...... திரில்லர் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஏற்றப் படம் !!!

by Swathi   on 28 Feb 2014  0 Comments
Tags: தெகிடி   தெகிடி திரைப்படம்   தெகிடி விமர்சனம்   தெகிடி திரை விமர்சனம்   தெகிடி கதை   Thegidi   Thegidi Movie  
 தொடர்புடையவை-Related Articles
தெகிடி திரைவிமர்சனம் !! தெகிடி திரைவிமர்சனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.