LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 876 - நட்பியல்

Next Kural >

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தேறினும் தேறாவிடினும் - பகவைனை முன் தெளிந்தானாயினும் தெளிந்திலனாயினும்: அழிவின்கண் தேறான் பகான்விடல் - தனக்குப புறத்தொரு வினையால் தாழ்வு வந்துழிக் கூடாது நீக்காது இடையே விட்டு வைக்க. (முன் 'தெளிந்தான் ஆயினும், அப்பொழுது கூடாதொழிக' என்றது,. உள்ளாய் நின்று கெடுத்தல் நோக்கி, 'தெளிந்திலனாயினும் அப்பொழுது நீக்கா தொழிக' என்றது, அவ்வழிவிற்குத் துணையாதல் நோக்கி. இதனான் நொதுமலாக்கற்பாலது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பகைவனை ஆக்கமுள்ள காலத்து நட்டோனென்று தௌ¤யலுமாம்; பகைவனென்று ஐயப்படலுமாம்; அழிவுவந்த விடத்துத் தௌ¤வதுஞ் செய்யாது நீக்குவதுஞ் செய்யாது ஒழுகுக. இது பகையாயினார்மாட்டு அழிவின்கண் செய்வதோரியல்பு கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
அழிவின்கண்- இருபகைவருள் ஒருவனால் தோல்வி நேர்ந்த விடத்து; தேறினும் தேறாவிடினும் - இன்னொரு பகைவனைத் தெளிந்தானாயினும் ; தெளிந்திலனாயினும் , தேறான் பகான் விடல் -அவனொடு சேராமலும் அவனைவிட்டு நீங்காமலும் இடைநிலையில் நின்றுகொள்க. முன்தெளிந்தானாயினும் அப்பொழுது கூடாதிருக்க என்றது உடனின்று கெடுக்காதிருத்தற் பொருட்டு. தெளிந்திலனாயினும் அப்பொழுது நீங்காதிருக்க என்றது, வெளிப்படைப் பகையால் மேலுந்தனக்குக் கேடு வராதிருத்தற் பொருட்டு. தேறான் பகான் எதிர்மறை முற்றெச்சங்கள். பகாஅன் இசைநிறையளபெடை. இக்குறளால் பகையை நொதுமலாக்கல் கூறப்பட்டது.
கலைஞர் உரை:
பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டு இருப்பதே நலமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.
Translation
Whether you trust or not, in time of sore distress, Questions of diff'rence or agreement cease to press.
Explanation
Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him).
Transliteration
Thera�num Theraa Vitinum Azhivinkan Theraan Pakaaan Vital

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >