LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF

பனிமலையில் வெப்ப ஊற்றுகள்

பத்ரிநாத் கேதார்நாத் என்றாலே பனிமூடிய மலை நம் கண் முன்னால் வருகிறது. எங்கும் வெள்ளியால் செய்த மலைபோல் அந்த இடம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அந்தப் பனிமலையின் நடுவில் கூட வெந்நீர் ஊற்றுகளைக் காண முடிவது வியப்பைத் தருகிறது.

பத்ரிநாத் ஒரு புனித யாத்திரை ஸ்தலம். இந்த வெந்நீர் ஊற்று கடல் மட்டத்திலிருந்து 10500 அடி உயரத்தில் இருக்கிறது. இதன் பெயர் 'தப்தகுண்டம்'. ஆனால் மற்ற வெந்நீர் ஊற்றுகளான கங்கோத்ரி, மணிகர்ணம், யமுனோத்ரி போன்று இதில் கொதிக்கும் நீர் இல்லை. மிதமான வெப்பம் இருப்பதால் ஸ்நானம் செய்ய மிகவும் இதமாக இருக்கிறது.

இங்கே குளிப்பதும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. பாறை நடுநடுவே இருக்கும் குழிகளை கூழாங்கற்களால் அடைத்தபடி பண்டாக்கள் அமர்ந்திருக்கின்றனர். யாத்திரிகர்களுக்குக் குளிக்க வேண்டுமானால் தேவையான கட்டணம் செலுத்த வேண்டும். பின் பண்டாக்கள் குழிகளை மூடிய கற்களை எடுக்க அதன் நடு இடுக்கிலிருந்து வெந்நீர் பெரிய பவுண்டன் போல் பீய்ச்சுகிறது.
அப்படிப் பீய்ச்சும் போது ஒரு நூதனமான ஒலியும் கேட்கிறது. நாம் எந்த ஒலியை மனதில் நினைத்துக் கேட்கிறோமோ அது போலவே அது நமக்குக் கேட்கிறது! இந்த மாதிரி ஊற்றுகளில் குளித்தால், சரும நோய்கள் நீங்கி புத்துணர்ச்சி
கிடைக்கிறது.

மணிகர்ணம் என்ற வெப்ப ஊற்று சிம்லா அருகில் குலு பள்ளத்தாக்கில் இருக்கிறது. கடல்மட்டத்திற்கு மேல் 7000 அடி உயரத்தில் இம்மாதிரி பல ஊற்றுக்களைக் காணலாம். ஊற்றுக்களில் வரும் நீர் நல்ல கொதிக்கும் நீராக இருப்பதால் இந்த இடத்தைச் சுற்றி ஒரே நீராவியாக 'ஸ்டீம் பாத்' எடுத்துக்கொள்வது போல் ஒரு அனுபவம் ஏற்படுகிறது.

இங்கு ஒரே நேரத்தில் இரண்டு வித்தியாச வெப்பநிலைகளை அனுபவிக்க முடிகிறது. சில்லென்று காற்றுவீச, அங்கு ஓடும் பார்வதி நதி அந்த சிலுசிலுப்பை மேலும் அதிகப்படுத்துகிறது. அதே சமயத்தில் வெப்ப நீரூற்றிலிருந்து சூடான காற்று வீச உடலுக்கும் புத்துணர்ச்சி, மனதுக்கும் பேரானந்தம் கிடைக்கிறது.

இங்கு சாப்பாட்டுக்கு ஒரு ஹோட்டலையும் தேடிப் போக வேண்டாம். ஒரு மெல்லிய துணியில் அரிசி, பருப்பு, மற்ற காய்கறிகள் முதலியவற்றை போட்டுக் கட்டி நீரில் அமிழ்த்தியபடி வைக்க வேண்டும். கட்டப்பட்ட கயிறின் மற்றொரு நுனியை ஒரு மரத்தின் அடியிலோ அல்லது வேறு பாறையின் கீழோ கட்டி விட்டுச் சென்று, பின் ஸ்நானம் செய்துவிட்டு வர, இந்தப் பொருட்கள் எல்லாம் வெந்து தயாராக இருக்கும்!

"கர்ண" என்றால் காது என அர்த்தம். பார்வதி தேவி குளிக்கும் போது அவளது காதின் மணி, நீரின் வேகத்தால் கழண்டு காணாமல் போய்விட்டதாம். அதனால் இந்த இடத்திற்கு 'மணிகர்ணம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

by Swathi   on 22 Sep 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.