LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருக்கடவூர் பிரபந்தங்கள்

திருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம்

கட்டளைக் கலித்துறை

பங்கயத் தாளும் ஒருநான்கு தோளும் படாமுகமும்
திங்களின் கோடும் வளர்மோ தகத்துடன் செங்கையிலே
அங்குச பாசமு மாகிவந்(து) என்றனை ஆண்டருள்வாய்;
வெங்கய மே!கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 1.

உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒருதொழிலைப்
பண்ணும் பொழுதும் பகரும் பொழுதும்நின் பாதத்திலே
நண்ணுங் கருத்துத் தமியேனுக் கென்றைக்கு நல்குவையோ?
விண்ணும் புகழ்கட வூர்வாழும் கள்ள விநாயகனே! 2.

யாதொன்றை யாகிலும் எண்ணிய போ(து) உன் இணைக்கமல்
பாதம் பரவிய பேர்கட் கலாது பலித்திடுமோ?
பேதம் தெரிந்த மறையோர் தமது பெருச்தெருவில்
வேதம் பயில்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 3.

அரனென் பவனையும் அம்புயத் தோனையும் ஆழிசங்கு
கரனென் பவனையுங் கைதொழ வேண்டி உன் கால்தொழுவார்
இரவும் பகலும் இயலிசை நாடக மென்னும் நன்னூல்
விரவுந் தமிழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 4.

துதியேன் எனினும் தொழுகேன் எனினும் தொழுபவர்தமை
மதியேன் எனினும் வணங்கேன் எனினும் வலியவந்து
கதியே தரும்வழி காட்டிடுவாய்; நின் கருணையினால்
விதியே புகழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 5.

நாக ந்துரகம் பலபணி அடை நவநிதிகள்
பாகஞ்சு மென்மொழியாள் போகமும் உன்றன் பாதமதில்
மோகந் திகழப் பணிந்தோர்க்(கு) அலாமல் முயன்றிடுமோ?
மேகம் பயில்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 6.

இளங்குஞ் சரச்செழுங் கன்றே! எனச்சொலி ஏத்திநின்றாய்
உளங்கசிந் தங்கையால் குட்டிக்கொண் டோர்க்கோர் குறையுமுண்டோ?
வளங்கொண்ட மூவர் தமைமறித் தேதமிழ் மாலைகொண்டு
விளங்கும் புகழ்க்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 8.

மூவரும் தங்கள் தொழிலே புரிந்திட முந்திமுந்தித்
தாவரும் நெற்றியில் தாக்கியுன் நாமத்தைச் சாற்றிடுவார்;
தேவரும் போற்றிய தேவே! உனையன்றித் தெய்வமுண்டோ?
மேவருஞ் சீர்கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 9.

மைப்பொரு வாரண மாமுக மீதினில் வாய்ந்ததுதிக்
கைப்பொரு ளே! என்று கைதொழு வோர்குன் கருணைவைப்பாய்;
பொய்ப்பணி யோஅறி யாதமு தீசன் புகழுமெங்கள்
மெய்ப்பொரு ளே!கட வூர்வாழுங் கள்ள விநாயகனே! 10.

by Swathi   on 21 Dec 2012  4 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
27-Jul-2020 08:23:22 elamaran said : Report Abuse
I was used to read this every friday on my schooling time. Thanks to give the opportunity to read in online.
 
08-Jan-2014 20:32:21 சூரிய ஜோதி said : Report Abuse
8 வது பாடலைத்தான் உண்மையில் காணவில்லை. அது இதுதான்: தண்டாயுதத்தையும் சூலாயுதத்தையும் தாங்கியென்னைக் / கண்டாவிகொள்ள நான் வரும் வேளையில் காத்திடுவாய் / வண்டாரவாரஞ்செய் மாமலர்ச்சோலை வளப்பமுடன் / விண்தாவிய கடவூர் வாழும் கள்ள விநாயகனே 8
 
08-Jan-2014 17:02:25 சூரிய ஜோதி said : Report Abuse
விடுபட்ட 7வது கண்ணி கிடைக்கப் பெற்றேன். இதோ: இளங்குஞ்சரச் செழுங்கன்றே! எனச் சொல்லி ஏத்தி நன்றாய் உளங்கசிந்தங்கையால் குட்டிக் கொண்டோர்க்கோர் குறையும் உண்டோ? வளங்கொண்ட மூவாதமை மறிந்தே தமிழ் மாலை கொண்டு விளங்கும் புகழ்க் கடவூர் வாழும் கள்ள விநாயகனே 7
 
21-Dec-2013 17:53:07 சூரிய ஜோதி said : Report Abuse
இப்பதிகத்தில் 7வது கண்ணி விடுபட்டுள்ளதே. இதை நிவர்த்தி செய்ய இயலுமா?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.