LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன்

குறள் அனுபவம் -1011

நாணம் என்ற பண்பு யாரிடம் இருக்கும். பெரும்பாலும் நல்லவர்
களிடமே இருக்கும். தன்னை அறியாமல் ஏதேனும் தவறுகளைச் செய்து விட்டால் அவர்கள் படுகின்ற துன்பத்தை சொல்லில் சொல்லி விட முடியாது.

நாணம் குறித்த சிந்தனையே அற்றவர்கள் தான் இறைவனின் அருட் கொடையான இயற்கையை அழித்தும் கொள்ளையடித்தும் வாழ்பவர். மரம் வளர்க்கச் சொல்லும் அரசுகள் மரங்களையும் ம்லை வளத்தையும் ஈவு இரக்கமின்றி அளிக்கின்றவர்களை கடுமையாகத் தண்டிக்காமல் மக்களை மரம் வளர்க்கச் சொல்லு
வது மடமையிலும் மடமை.

கடலும் மழையும் இல்லையென்றால் ஏது மழை. மழையில்லை எனில் ஏது உயிர்க்குல வாழ்க்கை.

காக்கை குருவி எங்கள் சாதி என்ற பாரதிப் பெருமகன் தான்
நீள் கடலும் மழையும் எங்கள் கூட்டம் என்றான்.

புரிகின்றதா. ஆமாம் கடலையும் மலையையும் நமது உறவுகள் என்கின்றான். ஏனெனில் கடலும் மலையும் இல்லையெனில் ஏது மழை.

ஆண்டாள் நாச்சியார் பாடுகின்றாரே

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி என்று மழை குறித்துப் படுகின்றாரே

அந்த மழையை இந்த ஈவிரக்கமற்ற கொள்ளையர்களின் கொள்ளை
கள் தடுக்கின்றனவே. யாருக்காக பொருளீட்டுகின்றார்களோ.
அவர்களின் குழந்தைகளும் தானே தண்ணீருக்காக சாகப் போகின்
றனர்.

மலையை அழித்தால் யானையும் மான்களும் புலிகளும் சிறுத்தைகளும் தண்ணீருக்கு என்ன செய்யும். இதில் ந்மது செய்தித் தாள்களும் ஊடகங்களும் யானைகள் அட்டகாசம் புலிகள் அட்டகாசம் என்று செய்திகள் போடுவதில் சிந்தனையே இல்லையே.

மிருகங்களின் வாழ்விடங்களை அழித்தது யார். பதில் சொல்லுங்கள். பாழாய்ப் போன மனிதர்கள். ஒரு வேளை மிருகங்கள் செய்தித் தாள்களும் ஊடகங்களும் வைத்திருந்தால் மனிதர்களின் கொடுமைகளை அவர்கள் எழுதியிருக்கக் கூடும்.

மணற் கொள்ளையர்களும் மரக் கொள்ளையர்களும் எப்போதுமே ஆளுங்கட்சியில் இருக்கின்றாற் போல அரசியல் கட்சிகள் இருக்
கின்றன. நமது சட்டப் பேரவை உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்ப்பினர்களும் நிறையப் பட்டங்கள் வேறு வாங்கியிருக்
கின்றனர். படித்த பட்டங்கள் என்றிருந்தால் மனிதப் பண்புகள் கற்பிக்கப் பட்டிருக்கும். இவை வாங்கிய பட்டங்கள் தானே.

நல்லவர்கள் பெரியவர்கள் இப்படி மனித குலத்தின் வாழ்வாதா
ரங்களையே அழித்து வாழுகின்ற் இவர்களைப் பார்த்தால் நாணித் தலை குனிவார்கள்.

ஆனால் இந்தக் கொள்ளையர்களுக்கு சூடு சொரணை இருந்தால் தானே நாணம் கை கூடும்.இவர்கள் வீட்டுப் பெண்களாவது தாய்மைப் பண்போடு இவர்களூக்கு உணர்த்தக் கூடாதா.

ஆனால் வள்ளுவப் பேராசான் இவர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்
றார்.

நல்லவர்களும் உய்ர்ந்தவர்களும் எந்தச் செயலைச் செய்ய மிகவும்
மிகவும் நாணப்படுகின்றார்களோ. அதைக் கண்டு கொள்ளாமலே
நாணப்படாமல் அந்தச் செயலைச் செய்பவர்களைக் கண்டு அறமே நாணப்பட்டு நிற்கும் என்கின்றார்

குறட்பா

பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின்
அறன் நாணத் தக்கது உடைத்து

by Swathi   on 10 Nov 2013  0 Comments
Tags: நெல்லை கண்ணன்   திருக்குறள்   திருக்குறள் அனுபவம்   நெல்லை கண்ணன் அனுபவம்   Nellaikannan Experience   Nellaikannan Thirukkural   Thirukkural Experience  
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்! திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்!
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில்  திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா ! திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா !
மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !! மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !!
ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன? ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன?
ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை
வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !! வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !!
தண்ணீர் குடுவையில் திருக்குறள் - சிங்கப்பூர் ! தண்ணீர் குடுவையில் திருக்குறள் - சிங்கப்பூர் !
மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !! மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.