|
|||||
ஆஸ்கர் பிலிம்ஸின் 'திருமணம் எனும் நிக்காஹ்' ரம்ஜானுக்கு வெளிவருகிறது !! |
|||||
அனீஸ் இயக்கத்தில், ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் திருமணம் எனும் நிக்காஹ். இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.
ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் கொண்டே இருந்தது.
இந்த திரைப்படம் யாரையும் புண்படுத்தவோ, காயப்படுதவோ எடுக்கப்பட்ட படமல்ல. ஒவ்வொரு மதத்துக்குள்ளும் இருக்கும் கலாசார பெருமையை வெளிபடுத்தும் படம் தான் திருமணம் எனும் நிக்காஹ் புரிதல் அவசியம் என்னும் கருத்தை வலியுறுத்தும் படமாகும்.
ஆஸ்கர் பிலிம்ஸின் 'திருமணம் எனும் நிக்காஹ்' ரம்ஜானுக்கு வெளிவருகிறது !!
அனீஸ் இயக்கத்தில், ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் திருமணம் எனும் நிக்காஹ். இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் கொண்டே இருந்தது.
தற்போது இப்படத்தின் வெளியீடு பற்றி ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறுகையில் இப்படம் ரம்ஜான் விருந்தாக திரைக்கு வரவிருக்கிறது. இது எல்லோருக்கும் பொதுவான ஒரு படமாகும். இந்த திரைப்படம் யாரையும் புண்படுத்தவோ, காயப்படுதவோ எடுக்கப்பட்ட படமல்ல. ஒவ்வொரு மதத்துக்குள்ளும் இருக்கும் கலாசார பெருமையை வெளிபடுத்தும் படம் தான் திருமணம் எனும் நிக்காஹ் புரிதல் அவசியம் என்னும் கருத்தை வலியுறுத்தும் படமாகும்.
தற்போது படத்தை சூழ்ந்து இருந்த பிரச்சனைகள் முடிந்து விட்டது. எனவே, ரம்ஜானுக்கு இப்படம் இஸ்லாமிய சகோதரர்களுக்கு விருந்தாக அமையும் என்றார்.
|
|||||
by Swathi on 28 Jun 2014 0 Comments | |||||
Tags: Thirumanam Ennum Nikkah Release Date திருமணம் எனும் நிக்காஹ் | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|