LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

திருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகப் பாட்டெழுதினாரா? பா. சுந்தரவடிவேல்,

திருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகப் பாட்டெழுதினாரா

பா. சுந்தரவடிவேல், பிஎச்.டி, தென் கரோலின மருத்துவப் பல்கலைக் கழகம், சார்ள்ஸ்டன், தென் கரோலினா

 

திருமூலரது வரலாற்றைச் சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் குறிப்பிடுவதன் வாயிலாகத்தான் அறியமுடிகிறது. பெரும்பாலானோர் அவர் ஆண்டுக்கு ஒரு பாடலாக எழுதினார் என்று கூறுவார்கள். அதனைத் தவறான விளக்கம் என்று நினைக்கிறேன். கீழே இருக்கும் நான்கு வரிகளும் பெரியபுராணத்தில் இருப்பவை (பாடல் எண் 3589). 

 

ஊன் உடம்பில் பிறவிவிடம் தீர்ந்து உலகத்தோர் உய்ய

ஞான முதல் நான்கு மலர் நல் திரு மந்திர மாலை

பான்மை முறை ஓர் ஆண்டுக்கு ஒன்றாகப் பரம் பொருளாம்

ஏன எயிறு அணிந்தாரை ஒன்றவன்தான் என எடுத்து

 

இதில் முக்கியமான குறிப்புக்களைப் பார்க்கலாம்: 

ஆண்டுக்கு ஒன்றாக - ஆமாம், ஒரு ஆண்டுக்கு ஒன்றாக எழுதினார். எதை?

பான்மை முறை - அதாவது ஒவ்வொரு பகுதியையும். பால் என்பது பகுதியை/வகைப்படுத்துதலைக் குறிக்கும். பான்மை என்பது பகுப்பு முறை. அதாவது ஒவ்வொரு பகுதியையும் ஒரு ஆண்டு எழுதினார். 

என்னென்ன பகுதிகள்? இரண்டாவது வரியில் இருக்கிறது விடை. ஞான முதல் நான்கு மலர். அதாவது ஞானம், யோகம், கிரியை, சரியை என்பன அந்த நான்கு மலர்கள். நான்கு பகுதிகள். இந்த நான்கும்தாம் திருமந்திரத்தின் உட்பொருட்கள். இவற்றை விளக்கத்தான் திருமந்திரத்தை எழுதினார். இந்த நான்கு பகுதிகளையும் ஆண்டுக்கு ஒன்றாக எழுதினார். ஆக, திருமூலர் திருமந்திரத்தின் மூவாயிரம் பாடல்களையும் எழுத எடுத்துக்கொண்ட காலம் நான்கு ஆண்டுகள் என்பதே இதன் பொருளாக இருக்கமுடியும். 

அடுத்த பாடலில் (பாடல் எண் 3590) "மன்னிய மூவாயிரத்து ஆண்டு இப்புவிமேல் மகிழ்ந்து இருந்து" என்று வருகிறதே எனச் சந்தேகம் வரலாம். 

முன்னிய அப் பொருள் மாலைத் தமிழ் மூவாயிரம் சாத்தி

மன்னிய மூவாயிரத்து ஆண்டு இப்புவிமேல் மகிழ்ந்து இருந்து

சென்னி மதி அணிந்தார் தம் திருவருளால் திருக் கயிலை

தன்னில் அணைந்து ஒரு காலும் பிரியாமைத் தாள் அடைந்தார் 

 

இரண்டாவது வரியில் வரும் "மூவாயிரத்து" என்பதன் சீர் சரியாக அமைந்திருக்கவில்லை. இந்த ஒற்றைச் சொல் பிற்காலத்தில் மாற்றப்பட்டதாக இருக்க வாய்ப்புள்ளது. முப்பதாண்டு, மூவைந்தாண்டு என்றெல்லாம்கூட இந்த வார்த்தை இருந்திருக்கலாம். அதாவது பாடலை எழுதி முடித்துவிட்டு அங்கு நிலைத்துச் சிலகாலம் இருந்துவிட்டுப் பிறகு திருக்கயிலைக்குச் சென்று அங்கே சிவகதி அடைவதாக வரலாறு கூறுகிறது. எத்தனை ஆண்டுகள் இருந்திருப்பார். பாடல்களை எழுத மூவாயிரம் ஆண்டுகள், எழுதி முடித்து மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார் என்றால், ஆக மொத்தம் ஆறாயிரம் ஆண்டுகள் ஒரு மனிதர்/தவயோகி  வாழ்ந்திருப்பாரா என்பது ஆச்சரியம்.

எனவே, திருமந்திரத்தின் மூவாயிரம் பாடல்களை எழுத அவர் எடுத்துக்கொண்ட காலம் நான்கு ஆண்டுகள் என்றும், அதற்குப் பிறகு சில காலம் திருவாவடுதுறையில் இருந்தார் என்பதை மட்டும் சொல்லலாம்.   

 

Summary in English: 

It is a common misconception that Saint Thirumoolar took three thousand years to write the three thousand poems in Thirumanthiram. This misinterpretation has raised from the misreading of the sourcebook Periyapuranam (written by Sekkizhar) that describes Thirumoolar's life history. In Periyapuranam it is said that Thirumoolar wrote his three thousand poems in four chapters. These four chapters are sariyai, kiriyai, yogam and gnanam. Periyapuranam clearly says Thirumoolar took one year for each chapter. People misunderstood the each chapter for each poem. So, my interpretation is that Thirumoolar wrote Thirumanthiram in four years, he did not take three thousand years to do so. 

 

திருமூலரின் முழு வரலாற்றையும் பெரியபுராணம் வாயிலாக அறிய: http://shaivam.org/thirumurai/twelveth-thirumurai/899/periya-puranam-vampara-varivanduu-charukkam-thiru-mula-nayanar-puranam

by Swathi   on 22 Apr 2017  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
கருத்துகள்
24-Aug-2017 10:21:39 ரேவதி said : Report Abuse
இதெல்லாம் சுத்த பொய் ............ சின்ன உண்மையை சொல்லுங்க இவ்ளோ பெரிய பொய் சொல்றதுக்கு ....
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.