|
|||||
'சதுரங்கவேட்டை'யை வாங்கிய லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் !! |
|||||
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான மனோபாலா தனது பிக்சர் ஹவுஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கும் படம் சதுரங்கவேட்டை. இப்படத்தில் நட்ராஜ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக இஷாரா நடித்திருக்கிறார். ஷான் ரால்டன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது இப்படத்தை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வாங்கி தமிழகம் முழுவதும் வெளியிடப் போகிறது. இப்படம் ஜூலை மாதம் வெளியாக உள்ளது.
இதனை தயாரிப்பாளர் மனோபாலா தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
|
|||||
by Swathi on 21 Jun 2014 0 Comments | |||||
Tags: Sathuranga Vettai Release Sathuranga Vettai Thirupathi Brothers Sathuranga Vettai Movie | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|