LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF
- திருப்பாவை

ஆண்டாள் அருளிய திருப்பாவை -பாடல் 29

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

பொருள்: கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.

#Thiruppavai #AndalThiruppavai #Margazhi29

by Swathi   on 14 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு! மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
சனீஸ்வரர் தனிச்சன்னிதி கண்ட திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிசேகம்! சனீஸ்வரர் தனிச்சன்னிதி கண்ட திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிசேகம்!
உத்தரப்பிரதேச கும்பமேளா: தை அமாவாசை நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்! உத்தரப்பிரதேச கும்பமேளா: தை அமாவாசை நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்!
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரியில் 7 அடி உயர வெங்கடாசலபதி பிரதிஷ்டை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரியில் 7 அடி உயர வெங்கடாசலபதி பிரதிஷ்டை
ஆண்டாள் அருளிய திருப்பாவை -பாடல் 28 ஆண்டாள் அருளிய திருப்பாவை -பாடல் 28
ஆண்டாள் அருளிய திருப்பாவை -பாடல் 30 ஆண்டாள் அருளிய திருப்பாவை -பாடல் 30
ஆண்டாள் அருளிய திருப்பாவை -பாடல் 27 ஆண்டாள் அருளிய திருப்பாவை -பாடல் 27
திருவண்ணாமலை தீபத்திருவிழா: மகாதீப கொப்பரை சீரமைப்பு முடிந்து கோயிலில் ஒப்படைப்பு! திருவண்ணாமலை தீபத்திருவிழா: மகாதீப கொப்பரை சீரமைப்பு முடிந்து கோயிலில் ஒப்படைப்பு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.