LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

இந்த நாள்...

உனக்கு

நினைவிருக்கிறதா ..


இதே

நாளில் ..


நம்

சிறு வயதுகளில் ..


நீ

என்னருகே

தூங்கிகொண்டிருக்க ..


விடிகாலை

ஐந்து மணிக்கெல்லாம்

என்னை எழுப்பி

குளிக்க வைத்து

தலை துவட்டி

நேத்து இரவு

தைத்து வந்த

துணி மாட்டி

“ இன்னும் கொஞ்சம்

சட்டை லூசு பத்தலடா “

இழுத்துப் பார்த்து

மஞ்சள் தடவிய

புதுத் துணியோடு அம்மா ..


“ காக்க காக்க

கனகவேல் காக்க “

எனக்கு தமிழ் கடவுளை

காவல் வைக்கும் அப்பா ..


வீட்டை சுற்றி

எல்லோரும்

சாக்லேட் கொடுக்க

என்னோடு நீ....


அம்மாவும்

அப்பாவும்

சேர்ந்து நிற்க

காலில் விழுந்து

இருபது ரூபாயோடு

ஆரம்பித்த

எனது

அதே இந்த நாள் ..


உனக்கு

நினைவிருக்கிறதா ...


தமிழகத்தின்

ஒரு மூலையில்

அங்கிருந்தபடியே

வாழ்த்து சொல்லுகிற

அம்மாவும் அப்பாவும் ...


உலகத்தின்

ஒரு கோடியில்

சரியாய் இந்த நேரம்

தூங்கிக்கொண்டிருக்கிற

நீயும் ..


நீங்கள்

என்னருகே இல்லாது

புலர்ந்த எனது

இந்தப் பொழுதும்....


தங்கையே

உனக்கு நினைவிருக்கிறதா ...


இதோ

அந்த நாள் ..


என்

பிறந்த நாள் ...


-      குகன்

by Guhan   on 06 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.