LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

தொ.ரா.பத்மநாபய்யர்

தமிழ், ஹிந்தி, செளராஷ்டிரம், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் புலமை பெற்றவர் தொ.ரா.பத்மநாபய்யர். இவர், ஸ்ரீவிளம்பி ஆண்டு பங்குனி 23-ஆம் தேதி (4.4.1899) பிறந்தவர். செüராஷ்டிரரான இவர் பல தெய்வீக நூல்களை எளிய செந்தமிழ் நடையில் இயற்றியுள்ளார். இவர் இயற்றிய "கீதை வெண்பா' மிகவும் சிறப்பான நூலாகப் போற்றப்படுகிறது. இவரை கீதை அஷ்டாவதானி, வெண்பாப் புலி என்றும் போற்றுவர். இப்புலவர் இயற்றிய 15 வெண்பாக்கள் கொண்ட - அந்தாதித் தொடையில் அமைந்த "தமிழின் பெருமை' என்ற இப்பாடல்கள் கிடைத்தற்கரிய பொக்கிஷமாகும். இப்பாடல் வெளிவந்த ஆண்டு 1949.


எண்ணுமெழுத் தென்னுமிவை ஏற்றமுற மாந்தர்க்குக்
கண்ணிரண் டாகுமிவை கல்லாதார் - புண்ணிரண்டு
தம்முகத்தே கொண்டவராய்த் தாங்கணிக்கப் பட்டுள்ளதை எம்மகத்தே கொள்வோம் இனிது.
இனிமை பழைமை எழில்யாவும் கொண்ட
தனிமொழித் தண்டமிழே தக்கோர் - உனுமொழி
தென்மொழி மேலாஞ் சிவன் தந்த செல்வமாம்
நன்மொழி கொண்டதிந் நாடு
நாட்டி லுயர்ந்ததெந் நாட்டின் பெருமையினை
ஏட்டில் வரையத்தான் ஏலுமோ - மேட்டிமையாய்
மூவேந்தர் ஆட்சி முறையாகத் தானடத்திப்
பாவேந்தர்க் கீந்தார் பரிசு
பரிசுகள் பொன்மழையாய்ப் பாவேந்தர்க் கீய
வரிசையாய் நூலியற்றி வந்தார் - துரிசிலா
நூற்களும் கூடினவால் நுண்பொருள் கொண்டனவாய்
மேற்கணக்குங் கீழ்கணக்கு மே
மேவுமே ழேழ்புலவர் வித்தகமாய் வீற்றிருக்கக்
காவலனும் அங்கு கலந்திருந்து - நாவலர்கோன்
நற்கீரர் போன்றவர்கள் நற்றலைமை தன்னிலே
பொற்பீடத் துற்றாள் புகழ்
புகழ்பரவு பொற்றா மரைத்தடந் தன்னில்
திகழ்பலகைப் பண்பதனைச் செப்பின் - நிகழுருவம்
கூட்டக் குறைக்கத் தகுதியுள தெய்வீகம்
நாட்டியநாள் அந்நாள் நவில்
நவிலுந் தமிழ்மணம் நாடெங்கும் வீசக்
கவலைதான் இன்றிக் கவிஞர் - நுவலுந்தம்
நோக்கம் நுடங்காது நுண்மையாய் நூலுக்கே
ஆக்கியநாள் அந்நாளே யாம்
ஆமந்த நாளை அடைவாகக் காண்பதற்கே
நாமும் உழைத்திடுவோம் நண்பர்காள் - காமனைக்
கண்ணழலார் காய்ந்தோன் கலசமுனிக் கேயருள
மண்ணிடை வந்தவள்தன் மாண்பு
மாண்புடனே நல்ல வடமொழியைப் பாணினிக்குச்
சேண்பரவத் தந்த சிவன்றானே - ஈண்டிதற்குந்
தந்தையாமென்பார் தரணிமிசை இம்மொழிக்குச்
சொந்தமிலார் யாரிதனைச் சொல்
சொல்லிற் சுருங்கச் சுவைத்திடச் சொல்லுதலால்
கல்லுங் கரையுங் கனிமொழியால் - வல்லதமிழ்
பாடை தனக்குநிகர் பாடை மிகச்சிலவே
ஈடுசொல் வாய்க்குமால் இங்கு
இங்கிதஞ் செய்வாள் இயலிசை நாடகமென்
றெங்கும் புகழோ டிருப்பாளே - எங்கள்
அருந்தமி ழன்னை அனவரதந் தேடு
மருந்தனாள் மானிலத்தே மற்று
மற்றுந் தொடர்பாடு மங்கையர் மண்பொருள்மேல்
சற்றும் பொருந்தாத சற்சனர்கள் - கற்றும்
தெளிந்தும் இதன் சுவையைத் தீரவா ராய்ந்தும்
உளந்தனிற் கொள்வார் உவப்பு
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரியும்
புவிப்பொறை பூண்ட புனிதர் - தவப்பேறாய்த்
தாமடையவெண்ணும் தனித்தமிழின் இன்சுவையை
நாமடைய வேண்டும் நனிது
நனிதே துதியுரைகள் நாயகனுக் காக்கில்
இனிதே மகிழ்வார் இறையும் - புனிதமாம்
பேறெல்லாந் தந்து பிறப்பிறப் பற்றதொரு
ஈறில் பதமளிப்பார் ஈண்டு
ஈண்டறம் வீடளிக்கும் இன்பம் பொருளளிக்கும்
வேண்டுவன யாவும் மிகவளிக்கும் - மீண்டும்
எலும்பையும் பெண்ணாக்கும் ஈசனைத்தூ தாக்கும்
நலம்பலவுங் கொண்டதென நாடு.

by Swathi   on 10 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.