LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

தோழர். ப.ஜீவானந்தம்

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி' களான தமிழர்களின் ஆதிபுராதன மொழி தமிழ்மொழி. எகிப்திய, பாபிலோனிய, காஸ்டீய, ஆரிய, கிரேக்க, லத்தீன், மெக்ஸிக்கன், பெருவியன் மொழிகள் வழக்கொழிந்து போய்விட்டன. அத்துணைத் தொன்மையான தமிழ்மொழி இன்னும் உயிரோடு கன்னித் தமிழாக விளங்குகிறது.


சேந்தன் திவாகரம், பிங்கல நிகண்டு போன்ற இன்று கிடைக்கும் பழைய சொல்லகராதிகளை நோக்கின், தமிழ் மொழியில் வேர்ச்சொல் தொகுதியின் சிறப்பு நன்கு விளங்கும். பின்னர் தோன்றிய சூடாமணி நிகண்டையும், அப்பால் தோன்றிய அகராதி நிகண்டு, சதுரகராதி போன்றவற்றையும் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோன்றிய யாழ்ப்பாணம் கதிர்வேற்பிள்ளை அகராதியும், சில ஆண்டுக்களுக்குப் பின்னால் சென்னை அரசாங்கம் வெளியிட்ட தமிழ் "லெக்சிகனை'யும் பார்த்தால் தமிழ் இனத்தின் வளர்ச்சியோடு தமிழ் சொல்லகராதியும் எப்படி வளர்கிறதென்பது தெரியும்.

2500 ஆண்டுகளுக்கு முந்தியத் தொல்காப்பியம் தமிழ் மொழியின் இலக்கண முறைச் சிறப்பைத் தனிச் சோபையோடு காட்டுகிறது. 700 ஆண்டுகளுக்கு முன் பிறந்த நன்னூலும், தமிழ் இலக்கணத்தில் "பழையன கழிதலும், புதியன புகுதலும்' செய்தபோதிலும் தமிழின் அடிப்படை இலக்கண முறையில் கை வைக்காமல் தமிழின் புதிய வளர்ச்சிக்கு ஏற்ப இலக்கணத்திலும் புதிய விதிகளை வளர்த்திருப்பதைக் காணமுடியும்.

வளர்கிறது நம் அன்னை மொழி

பாரதித் தமிழைப் பாருங்கள்! இன்று சகல துறைகளிலும் வளர்ந்து வரும் தமிழைப் பாருங்கள்! தமிழின் வேர்ச்சொல் தொகுதி எப்படி மேலும் வலிவடைகிறது. தமிழின் சொல்லகராதி எப்படி மேன்மேலும் வளப்படுத்தப்படுகிறது. தமிழ் இலக்கண முறை அடிப்படைக்குக் குந்தகமில்லாமல் எப்படிப் புதுமை பெற்று வளர்கிறது என்பது நன்றாகத் தெரியும்.

வள்ளுவன், அவன் காலத்தில் யாவற்றையும் தமிழில் சொன்னான். கம்பன், அவன் காலத்தில் யாவற்றையும் தமிழில் சொன்னான். பாரதி, அவன் காலத்தில் யாவற்றையும் தமிழில் சொன்னான். வள்ளுவனும் கம்பனும் பாரதியும் இலக்கண முறையையும் சொல்லகராதியையும் கைதேர்ந்த விதத்தில் உபயோகித்து தமிழை வளர்த்தார்கள்.

தமிழை மேலும் வளர்க்க மொழியின் உண்மைகள் நமக்கு மிகவும் உதவிகரமானவை. அவையாவன: மொழியை முதலாளி மொழியென்றோ, தொழிலாளி மொழியென்றோ, எந்த ஒரு வர்க்கமும் தனி உரிமை கொண்டாட முடியாது. மொழி சமுதாய மக்களில் ஒவ்வொரு துளிக்கும் முழுக்கடலுக்கும் சொந்தம்.

எந்த மொழியும் ஒரு தனி வர்க்கத்தின் கருவியல்ல.

சமுதாய மக்கள் பரஸ்பரம் சகல விதத்திலும் ஈடுபாடு கொள்வதற்கும், உறவு கொண்டாடுவதற்கும் இன்றியமையாத கருவி மொழி.
புதிய புதிய சமூக அமைப்புகள் தோன்றும்பொழுது, புதிய புதிய உற்பத்தி முறைகளும், ஒட்டுறவுகளும், ஆட்சி அமைப்புகளும், வாணிபப் போக்குகளும், பண்பாட்டு வெளியீடுகளும், இன்னோரென்னவைகளும் தோன்றும். மொழி இவைகளை எல்லாம் பிரதிபலிக்க வேண்டும். மொழி அல்லது சொல்லகராதி சர்வசதா மாறுதலுக்கு ஆளாகிக்கொண்டே இருக்கிறது. தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிற தொழிலும், விவசாயமும், வர்த்தகமும், போக்குவரத்தும், தொழில் நுட்பமும், விஞ்ஞானமும் தாங்கள் செயல்படும் பொருட்டுப் புதிய சொற்களாலும் வெளியீடுகளாலும் ஒவ்வொரு மொழியும் சொல்லகராதியைப் பெருக்கிச் செழிப்படையச் செய்ய வேண்டுமென்று தேவைப்படுகின்றன. தேவைக்குத் தக்கபடி வேர்ச்சொல் தொகுதியைப் பெருக்கவோ சொல்லகராதியை வளப்படுத்தவோ கொஞ்சமும் தயக்கம் காட்டுதல் கூடாது.

இவ்வாறு செய்தால்தான், எந்த மொழியும் சமுதாயத்தின் சகல ஈடுபாடுகளுக்கும், உறவு முறைகளுக்கும் பயன்படும். அவ்வாறு பயன்படாத மொழி அழிந்தொழிந்து போகும்.

அன்றிருந்த தமிழர்கள் அன்றைய நிலைமைக்குத் தக்கபடி சொற்களை உற்பத்தி செய்தனர். அதே போல் இன்றையத் தமிழர்களும் இன்றைய வளர்ச்சிக்குத் தக்கபடி தமிழில் சொற்களை உற்பத்தி செய்ய முடியும். சிறந்த வேர்ச்சொல் தொகுதியும் அற்புதமான இலக்கண முறையும் கொண்டது நமது தாய்மொழியாம் தமிழ்மொழி. டாக்டர் நீரா.சீனிவாசன் போன்ற புதிய எழுத்தாளர்கள் சகல விஞ்ஞான உண்மைகளையும் தமிழில் கூற முடியுமென்று முன் வந்திருக்கிறார்கள். ஒரு சாதாரண யந்திரத் தொழிலாளியிடம் பேசிப்பார்த்தால் அவன் நவீன தொழில் முறை நுட்பங்களைத் தமிழில் அனாயாசமாக வெளியிடுவதைப் பார்க்கலாம். எத்தகையப் பொருளாதாரப் பிரச்சினைகளையும் தமிழில் பேசவும் எழுதவும் வல்லார் எண்ணிக்கைத் தமிழர்களிடையில் பெருகி வருகிறது.

தமிழிலே சகல கல்வியும்

சோவியத் யூனியனில் ரஷ்ய மொழியில் மட்டுமல்ல அண்மையில் வளர்ச்சியடைந்த உக்ரேனியன், பைலோரஷ்யன், எஸ்டோனியன், லாட்வியன், லிதுவேனியன் போன்ற ஐரோப்பிய மொழிகளில் மட்டுமல்ல, மத்திய ஆசிய மொழிகளான உஸ்பெக், காஷக், அர்மேனியன், தாத்தார், அஜர்பைஜானபாஷ்கீர், டாக்மென் மொழிகளிலும் சகல பொருள்களையும் கற்றுக் கொடுக்கின்றனர்.

"தமிழ் நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அகரமுதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவகாரங்களும் தமிழ் பாஷையில் நடத்த வேண்டும் என்பது பொருள்' என்று, பாரதி "தேசியக் கல்வி' என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

""சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!''
என்று பாரதி, தமிழ் மக்களை அழைக்கிறார்.

by Swathi   on 10 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.