LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

தூதாக செல்லுங்கள்! - இல.பிரகாசம்

வெண்ணிற மேகங்களே
படர்ந்த வான்மீது
உறவாடுவ துண்மையானால்
தூதாக செல்லுங்கள!;

கருநிறக் கடல் அலைகளே -எம்
காவிரிப் பெண்ணாள் உங்களோடு
உறவாடுவ துண்மையானால்
தூதாக செல்லுங்ள்!

மலைமீது மோதி மோகம்
கொள்ளும் இளந்தென்றல் காற்றே
உங்கள் உறவு தூய்மையானால்
தூதாக செல்லுங்கள்!

செவ்விதழை ஒத்த அந்த
செம்மண் மீது முத்த மிட்டு
கொஞ்சிக் களிக்கும் மழையே
உங்கள் முத்தம் தூய்மையானால்
தூதாக செல்லுங்கள்!

பகலில் கரையில் புரளும்
ஆற்று நீரோடு ஊடல்
செய்யும் சூரியக் கதிர்களே
உங்கள் உறவு தூய்மையானால்
தூதாக செல்லுங்கள்!


யாவரும் துயிலும் வேளையில்
இரகசியமாய் இரவோடு உறவாடும்
நிலவின் வெள்ளிப் பிள்ளைகளே
உங்கள் நிலவுத் தாய்
தூய்மையாவள் என்ப துண்மையானால்
தூதாக செல்லுங்கள்!

இரு உள்ளம் இணையத்
துடிக்கும் தூயக் காதலர்களுக்காக
வுpரைந்து செல்லுங்கள்
தூதாக செல்லுங்கள்!

 -இல.பிரகாசம்

by Swathi   on 29 May 2016  2 Comments
Tags: Thoothaga Sellungal   Thoothaga Sellungal Kavithai   தூதாக செல்லுங்கள்   Tamil Thoothu Kavithai   தூது கவிதை   தூது தமிழ் கவிதை     
 தொடர்புடையவை-Related Articles
தூதாக செல்லுங்கள்! - இல.பிரகாசம் தூதாக செல்லுங்கள்! - இல.பிரகாசம்
கருத்துகள்
29-May-2016 20:07:43 பிரகாசம் said : Report Abuse
பதிவிட்டமைக்கு நன்றி
 
29-May-2016 20:07:39 பிரகாசம் said : Report Abuse
பதிவிட்டமைக்கு நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.