LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- உடல் எடை குறைய (Weightloss)

இளமையிலே தொப்பை எட்டி பாக்கிறதா உங்களுக்கு...

இன்றைய உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இளம் தலைமுறையினர் பெரும்பாலானோருக்கு லைட்டா தொப்பை எட்டிப் பார்க்கும்.

அப்போதைக்கு அதை பற்றி ஃபீல் பண்ணாமல் அப்படியே விட்டு விடுவார்கள். அப்படியே ஒரு 5 ஆண்டுகள் கழித்து பார்த்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும்.

இளைத்தவன் எள்ளு... கொழுத்தவன் கொள்ளு... என்பது பழமொழி.  

இது வெறும் பழமொழி மட்டுமல்ல.. இது உண்மையும் கூட.

கொள்ளுப்பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது.

கொள்ளுப் பருப்பை ஊற வைத்து சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும். வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.

வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.

குதிரைகள் பலமைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்கமாட்டார்கள். கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு ஊளைச்சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து கொடுத்தால் சளி காணாமல் போய்விடும்.

அப்படி ஒரு அருமையான மருத்துவகுணம் இந்த கொள்ளுக்கு உண்டு. உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர் கள் வரை அனைவரும் அருந்தலாம். குளிர்காலத்தி்ல் தான் அதிகம் சளிபிடிக்கும். அந்த காலக்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது. சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்கும். அதைவிட ராத்திரி ஒரு கைப் பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

கொள்ளு பருப்பை ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளுவை அரைத்து பொடி செய்து வைத்துக் கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம். நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியைபோட்டால் அருமையாக இருக்கும். இப்படி செய்ய முடியாதவர்கள் கொள்ளு ரசம், கொள்ளு துவையல், கொள்ளு குழம்பு வைத்து அவ்வப்போது உண்டு வந்தாலும் உடல் எடை குறையும்.!

by Swathi   on 14 May 2015  20 Comments
Tags: Udal Edai Kuraiya   Weight Loss Tips   Belly Fat Reduction   Thoppai Kuraiya   தொப்பை குறைய   உடல் எடை குறைய     

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பீர்க்கங்காய் கடைசல் பீர்க்கங்காய் கடைசல்
உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான காய் : பீர்க்கங்காய் !! உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான காய் : பீர்க்கங்காய் !!
இளமையிலே தொப்பை எட்டி பாக்கிறதா உங்களுக்கு... இளமையிலே தொப்பை எட்டி பாக்கிறதா உங்களுக்கு...
பச்சை பயிரின் பலவிதமான பயன்கள்... பச்சை பயிரின் பலவிதமான பயன்கள்...
பப்பாளி பழத்தின் சிறந்த 15 முக்கிய மருத்துவ குணங்கள் !! பப்பாளி பழத்தின் சிறந்த 15 முக்கிய மருத்துவ குணங்கள் !!
பால் கலக்காத டீ உடல் எடையை குறைக்குமா ? பால் கலக்காத டீ உடல் எடையை குறைக்குமா ?
உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்க 3 டிப்ஸ் !! உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை குறைக்க 3 டிப்ஸ் !!
உயரமான படிக்கட்டுகளால் தொப்பை குறையுமா ? உயரமான படிக்கட்டுகளால் தொப்பை குறையுமா ?
கருத்துகள்
26-Apr-2018 05:46:10 S.Subpriya said : Report Abuse
எடை குறைய என்ன செய்ய வேண்டும்
 
16-Feb-2018 13:37:38 கவிதா said : Report Abuse
௩௪ வயது பெண் சிசேரியன் பிறகு தொப்பை அதிகமாக உள்ளது குறைக்க டிப்ஸ் வேண்டும்
 
30-Oct-2017 10:49:07 GOWSI said : Report Abuse
என்னக்கு தொப்பை யிருக்கு பிரசவம் அகி ஏய்த்து வருடம் ஆகுது ஜஸ்ட் ரெண்ட்டு வருடமாத எந்த தொப்பை பிரச்சனை யிருக்கு தொப்பை குறைய வலி யிருக்க பிளே சொல்லுங்க
 
26-Sep-2017 12:31:29 siva said : Report Abuse
எனக்கு தொப்பை மற்றும் பேக் சைடு பெருசா இருக்கு ஓரு வழி சொல்லுங்கள்
 
01-Sep-2017 11:37:25 nirmala said : Report Abuse
தொப்பை குறையவும் வெள்ளை ஆகவும் வழிகளை sollunga
 
01-Aug-2017 05:12:00 அமலா said : Report Abuse
நன்றி
 
06-May-2017 05:29:55 Raji said : Report Abuse
Hair fall problem athigama iruku.daily hair wash good aaha bad aaaha . good na yenna shampoo use panna num.
 
27-Jan-2017 15:14:56 அசோக் ஆனந்த் said : Report Abuse
என் இரண்டு வயது மகன் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போதே கண்கள் இரண்டும் மேல பார்த்த வாரு கண்கள் சொருகிய நிலைக்கு சென்றும் ஒரு வித மயக்க நிலைக்கு சென்று விடுகிறான் அதற்கான காரணம் என்ன வென்று கூற முடியுமா
 
20-Dec-2016 23:17:09 karthick said : Report Abuse
எனது உடல் எடையை குறைக்க ஒரு வலி சொல்லுங்கள் .மேலும் முகத்தையும் உடலையும் பேன,பொலிவுடன் இருக்க எதாவது ஒரு வலி சொல்லுங்கள்.
 
21-Oct-2016 22:39:30 palanivelu said : Report Abuse
தொப்பை குறைய மற்றும். முக பரு தடுக்க
 
04-Oct-2016 00:27:17 JASHVANTH said : Report Abuse
தொப்பை குறைக்க எதாவது வழி சொல்லுங்கள் . நன் தொப்பையை வைத்துக்கொண்டொன்று மிகவும் அவைதப்படுகின்றேன் .
 
23-Jul-2016 20:30:20 saravanan said : Report Abuse
எனக்கு left வேரை ல ஒரு கட்டி இருக்கு valikuthu ப்ளஸ் ஹெல்ப் me
 
23-Jun-2016 11:18:43 lakshmipriya said : Report Abuse
இதில் வரும் மருத்துவ குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி . உடல் எடையை குறைக்க என்ன வழி? முகம் பளபளப்பாக என்ன வழி ?
 
11-Apr-2016 04:53:34 ராணி said : Report Abuse
தொப்பை குறைய வேண்டும் முகத்தில் உள்ள பருக்கள் போக வேண்டும் முகம் மற்றும் உடல் அழகாக இருக்க வேண்டும்
 
04-Jan-2016 00:44:51 Priya said : Report Abuse
எநகு ஊரின் போறதுக்கு வலது புறம் கட்டி ஒன்று உள்ளது எனக்கு ஏஜ் 27 கல்யாணம் ஆகி 3 மாதமே ஆகுது
 
29-Nov-2015 08:56:07 boss said : Report Abuse
dgkiddvhjgdddfhhhy
 
29-Sep-2015 03:17:53 vijayan said : Report Abuse
Enakku 24 வயசாகுது ஆய்ந்னும் உடம்புல mudi வளரல பாசெலையும் வளரல இதுக்கு எதாச்சும் மருத்துவக்குறிப்பு இருக்கா..?. எதாச்சும் மருத்துவக்குறிப்பு சொல்லுங்களேன்
 
17-Sep-2015 08:14:21 renuka said : Report Abuse
கருப்பாக பிறந்து அவதி படுகிரின்,ப்ளீஸ் யதன டிப்சு கொடுங்க .
 
24-Aug-2015 11:56:20 அப்துலrahim said : Report Abuse

தொப்பை ஆல் ஆவதி படுகிறான்

 
22-May-2015 04:31:04 Sure said : Report Abuse
Udal edaiya athiga padutha vali enna?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.