LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF
- தமிழ் மண்ணில் சாமிகள்

தொட்டியம் மதுர(மதுரை) காளியம்மன் கதை

எனது ஊருக்கு அருகில் இருக்கும் மிகவும் பிரபலமான கோவில்களில் மதுரை காளியம்மன் கோவிலும் ஒன்று. பிரம்மாண்டமும், ஆச்சிரியங்களும் நிறைந்த அதன் தேர் திருவிழாக் காலங்களை என்னால் எளிதில் மறக்க இயலாது. மற்ற குலதெய்வக் கோவில்களைப் போலன்றி மாறுபட்டு இருப்பது அதன் சிறப்பு. அந்தக் கோவிலைப் பற்றிய இடுகையே இது.

 

கோவில் முன்தோற்றம்

பறையன் இசையில் மயங்கிய காளி :

 

தொட்டியம் பகுதியிலிருந்து மதுரை திருவிழாவிற்கு சென்ற இரண்டு பறை இசைக் கலைஞர்கள், விழா முடிந்து திரும்பி வருகையிலும் தங்கள் களைப்பு தெரியாமல் இருக்க இசைத்துக் கொண்டே வந்தார்கள். அவர்களின் இசையில் மயங்கியிருந்த காளி, அவர்களின் இசையைக் கேட்டுக் கொண்டே தொட்டியம் வந்ததாக கூறுகின்றார்கள்.

 

பறை இசை கலைஞர்கள்

பறையையும், பறை இசைப்பவர்களையும் தாழ்த்தப்பட்டவர்களாய் ஒதுக்கி வைத்திருக்கும் சமூகத்திற்கு மத்தியில் அவர்களை முதன்மைப்படுத்தி சொல்லப்படும் கதை ஆச்சிரியமான ஒன்றுதானே. மேலும் அவர்கள் இருவரின் சிலையும் கோவில் பிரகாரத்தில் அமைக்கப்படுள்ளது. சில கோவிலுக்குள் நுழையவே அனுமதி மறுக்கின்ற நிலை இப்போதும் உள்ளது என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.

 

தமிழர்களின் இசைக் கருவியென பறையை கொண்டாட இப்போதுதான் ஆரமித்திருக்கின்றார்கள். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஒரு தெய்வம் அந்த இசையில் மயங்கி வந்தமையே இதன் மூலக் கதை எனும் போது, பறை இசையையும், அதன் கலைஞர்களின் மகத்துவமும் புரிகிறது. இதை வருங்கால தலைமுறைக்கு தெரிவிக்க

வேண்டும் என்பது நம் முன்னோர்களின் எண்ணமாக இருந்திருக்க வேண்டும். அவர்களின் எண்ணம் நம் சகோதரன் வலைப்பூவின் மூலம் நிறைவேறிவிட்டது என நினைக்கிறேன்.

 

எருமைக் கிடா பலி :

 

மதுர காளியம்மன்

ஆடு, மாடு, கோழி என முப்பலிகளை தருவது பழங்கால வழக்கம். அந்த வழக்கம் இன்றும் தொட்டியம் மதுர காளியம்மன் கோவிலில் நடைபெறுகிறது. பொதுவாக கோழியும், ஆட்டுக்கிடாவும் பலி தரப்பட்டாலும்., எருமைக் கிடா பலி திருவிழாக்காலங்களில் நடைபெறுகிறது. வெட்டப்பட்ட எருமைக் கிடாயை புதைப்பதற்கென பெரும் நிலப்பரப்பும் கோவிலுக்கு அருகிலேயே இருக்கின்றது.

 

சிறப்புகள் :

 

பறையன் இருவரின் சிலையும் கோவிலுள் இருப்பது.

முப்பலி நடைபெருவது.

பலருக்கு குலதெய்வமாக இருந்தாலும், அருகில் வசிப்பவர்களுக்கு விருப்பமான தெய்வமாகவும் மதுரகாளி அருள் செய்கிறார்.

மக்களின் அன்பால், வெகு விமர்சையாக தேர்திருவிழா கொண்டாடப்படுகிறது.

திருமணங்களும், இன்னும் பிற விஷேசங்களும் நடத்தப்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தெய்வமாக இருக்கிறாள் மதுரகாளியம்மன்.

by Swathi   on 01 Aug 2013  7 Comments
Tags: தொட்டியம்   மதுர காளியம்மன்   Thottiyam   Mathura Kaliamman           
 தொடர்புடையவை-Related Articles
தொட்டியம் மதுர(மதுரை) காளியம்மன் கதை தொட்டியம் மதுர(மதுரை) காளியம்மன் கதை
கருத்துகள்
08-Oct-2018 17:52:28 Sangeetha said : Report Abuse
Hi enaku mathura kali ammanai migavum pidikum nan ninaipathai nadathi kudupanga enna aapathula irunthu kapathuvanga enium enna pathupanga i love my mother mathurakali
 
06-Dec-2017 15:54:18 சண்முக சுந்தரம் said : Report Abuse
எங்களின் வாழ்விற்கு காரணமான அம்மா மரைகாளி அம்மன் ஒொரு வருடமும் தவராமல் தலையரங்கத்துக்கு சென்று அம்மாவை அருள்பெவேரம்
 
05-Aug-2017 16:32:32 மணிகண்டன் said : Report Abuse
தொட்டியம் அருள்மிகு ஸ்ரீமதுரைகாளியம்மன் கோவில் நடை காலை 5 மணிக்கு திறக்கும் இரவு 9 மணிவரை திறந்திருக்கும். திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் 52 வது கிலோ மீட்டரில் தொட்டியம் உள்ளது.அடிக்கடி பேருந்துகள் வந்து செல்லும். மேலும் விபரங்களுக்கு ஆதி.மணிகண்டன் பூசாரி செல்; 9976192000 -8124718124
 
09-Mar-2017 00:17:41 சுஜி ப்ரியா said : Report Abuse
ஹை
 
27-Nov-2016 01:22:49 பிரிதிவிராஜ்.S said : Report Abuse
எனக்கு மதுரை காளி அம்மன் குலதெய்வம் மிகவும் சக்தி வாய்ந்த கோவில் நான் அங்கு சென்றிருக்கிறேன் எனது ஆசை தேர் திருவிழாவின் போது செல்வது மற்றும் முப்பலி நடக்கும் போது செல்வது sri mathrai காளி ammn thunai
 
19-Oct-2016 00:55:44 அழகுபாண்டி.C said : Report Abuse
காளி அம்மன் என்றால் அதிகளவில் பிடிக்கும் ஏன் எனக்கு அம்மா என்றும் சொல்லலாம் நான்ஒருபோதும் அவளை நினைக்காத நேரம் இல்லை ஒரு சின்ன விஷயத்த கூட அவளிடம் சொல்லாமல் இருக்க மாட்டேன் அதுபோல் காளி கோயில் இருக்கும் இடத்திற்கெல்லாம் போய்வருவன் அதுபோல் இந்த அம்பாளை தரிசிக்க கண்டிப்பாக ஒருநாள் வர வேண்டும் எனக்கு அந்த பலனை அம்மா எனக்கு குடுக்க வேண்டும் இந்த அம்மனுடைய வரலாறு படித்த உடன் இங்கு செல்ல வேண்டும் என்று என் மனதிற்கு ஆசை வந்து விட்டது எங்க அம்மா பத்தி சொல்லணும் என்றால் இன்னும் சொல்லி கொண்டாயே போகலாம் சின்னதா சொல்லணும் என்றால் காளி அம்மனுடைய தீவிர பக்தன் என்று சொல்லலாம் இந்த மாத்தி பதிவு வசதி ஏற்படுத்தி குடுத்த கோயில் நிர்வாகத்திற்கு மிக்க நன்றி
 
23-Sep-2016 07:38:21 varadaarajan said : Report Abuse
நல்ல பதிவு. கோவிலின் விலாசமும் தொலைபேசி எண்ணையும் கொடுத்தால் வெளியூரில் வசிப்பவர்களுக்கஎ வசதியாக இருக்கும்..பூஜைக்கோ விசாசரிக்கவோ உதவியாக இருக்கும். செய்வீர்கள் என்று நம்புகிறேன் வரதராஜன்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.