LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீதேசிகப் பிரபந்தம்

துவயச்சுருக்கு

13.1:
இன்னமுத திற்பிறந் தாளிதங் கேட்க வுரைத்தபிரான்
பொன்னரு ளான்மறை மௌலியிற் பூண்ட விரண்டிசைத்துத்
தன்னுரை மிக்க தனமி தெனத்தந்த வேதகத்திற்
றுன்னு பொருள்கள்பத் துந்தொலை யாநிதி யாகின்றவே.

13.2:
அருவுரு வானவை தன்னை யடைந்திடத் தானடைந்து
வெருவுரை கேட்டவை கேட்பித் தகற்றும் வினைவிலக்கி
யிருதலை யன்புத னாலெமை யின்னடி சேர்த்தருளுந்
திருவுட னேதிகழ் வார்செறிந் தாரெங்கள் சிந்தையுளே.

13.3:
ஓருயி ராய்நின்ற வொண்சுட ரின்ப வுருத்தனிலும்
பேருரு வத்திலும் பின்னதிற் றோற்று முருக்களிலு
மோருரு வான வுலகிலு மேற்கு முருக்களினாற்
சேருதன் மன்னுசெய் யாளன்பர் நம்மனஞ் சேர்ந்தனரே.

13.4:
காரண மாயிறை யாய்க்கதி யாயம ரும்பதியா
யாரண மோது மனைத்துற வாயக லாவுயிராய்ச்
சீரணி யுஞ்சுட ராய்ச்செறிந் தெங்குந் திகழ்ந்துநின்ற
நாரண னார்நமக் காய்நல்கி நாந்தொழ நின்றனரே.

13.5:
வானமர் மன்னுரு வாய்வகை யாலதி னாலுருவாய்
மீனம தாமைகே ழன்முத லாம்விப வங்களுமா
யூனம ருள்ளுரு வாயொளி யாத வருச்சையுமாந்
தேனமர் செங்கழ லாஞ்சேர்த்த னங்கழ லெம்மனத்தே.

13.6:
வேறொ ரணங்கு தொழும்வினை தீர்த்தெமை யாண்டிடுவா
னாறு மதன்பய னுந்தந் தளிக்கு மருளுடையான்
மாறில தாயில கும்மது மெல்லடிப் போதிரண்டா
னாறு துழாய்முடி யானமக் குச்சர ணாயினனே.

13.7:
பெறுவது நாம்பெரி யோர்பெறும்பேறென நின்றவெமை
வெறுமை யுணர்த்தி விலக்காத நன்னிலை யாதரிப்பித்
துறுமதி யாற்றனை யொண்சர ணென்ற வுணர்வுதந்த
மறுவுடை மார்பனுக் கேமன் னடைக்கல மாயினமே.

13.8:
அருமறை யாதுந் துறவோ மெனவறிந் தார்கவருங்
கருமமு ஞானமுங் காதலுங் கண்டு முயலகிலோம்
வருவது மிந்நிலை யாய்மய லுற்ற வெமக்குளதோ
திருமக ளார்ப்பிரி யாத்திரு மாலன்றி நற்சரணே.

13.9:
சுருங்கா வகில மெலாந்துளங் காவமு தக்கடலாய்
நெருங்கா தணைந்துட னேநின்ற நந்திரு நாரணனா
ரிரங்காத காலங்க ளெல்லா மிழந்த பயன்பெறவோர்
பெருங்காத லுற்றினி மேற்பிரி யாமை யுகந்தனமே.

13.10:
கடிசூடு மூன்றுங் கழல்பணிந் தார்க்குக் கடிந்திடவே
முடுசூடி நின்ற முகில்வண்ண னார்முன் னுலகளந்த
வடிசூடு நாமவ ராதரத் தாலுடுத் துக்களையும்
படிசூடி யன்புட னேபணி செய்யப் பணிந்தனமே.

13.11:
தனதன் றிவையெனத் தானன் றெனமறை சொன்னவெலா
மெனதென்றும் யானென்றும் மெண்ணுத லால்வரு மீனமெலா
மனதொன்றி யின்று நமவென்ற தேகொண்டு மாற்றுதலாற்
றனதன்றி யொன்று மிலாத்தனித் தாதை சதிர்த்தனனே.

13.12:
சேர்க்குந் திருமகள் சேர்த்தியின் மன்னுதல் சீர்ப்பெரியோற்
கேற்குங் குணங்க ளிலக்காம் வடிவி லிணையடிகள்
பார்க்குஞ் சரணதிற் பற்றுத னந்நிலை நாம்பெறும்பே
றேற்கின்ற வெல்லைக ளெல்லாக் களையற வெண்ணினமே.

ஸ்ரீமதே நிகமாந்தமஹாதேசிகாய நம:
சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

அடிவரவு: இன்னமுது, அருவுரு, ஓருயிராய், காரணமாய்,
வானமர், வேறோர், பெறுவது, அருமறை, சுருங்காவகிலம்,
கடிசூடு, தனதன்றிவை, சேர்க்கும், கல்லார்.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.