LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com

புதிய கீச்சர்களுக்கு சில ஆலோசனைகள்!

ட்விட்டர் ஒரு அருமையான சமூக ஊடகம்.. இங்கே முகம் பாராமல் நாம் நிறைய மக்களோடு உரையாடுகிறோம், தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம், பெறுகிறோம். நாம் எழுதுவதை வாசிக்க இத்தனை பேர் உள்ளார்கள் என பெருமையடைகிறோம்.. ட்விட்டரில் புதிதாக இணைந்ததும் நம்மை மகிழ்ச்சியுற செய்வது Followers எண்ணிக்கை தான் இல்லையா? சரி மக்கள் ட்விட்டரில் Follow/Unfollow செய்ய எது காரணமாக இருக்கும் என சற்று சிந்தித்து பாப்போம்..

ட்விட்டரில் இணைந்த உடன் நாம் செய்யும் வேலை நம் நண்பர்களையும் இணைக்க மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுப்பது.. தெரிந்த நண்பர்களை இணைத்துக் கொள்ள விரும்பாதவர்கள் இதை செய்வதில்லை.. பின்னர் தேர்ந்தெடுத்த சிலரை பின்பற்றுவது.. தமிழ் ட்விட்டரை பொறுத்த வரை விகடன் வலைபாயுதே பல புதிய கீச்சர்கள் இணையவும், புதியவர்களை பின்பற்ற அடையாளம் காணவும் சிறந்த வழியாக இருக்கிறது. பின் Who-To-Follow என யாரைப் பின்பற்ற வேண்டுமென த்விட்டரே நமக்கு பரிந்துரை செய்யும். ட்விட்டரில் நாம் பிறரால் பின்பற்றப்பட சில விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்..

1. முதலாவது கவனிக்கப் படுவது நம் Twitter Handle. நமது பெயரையே வைப்பது நல்லது, அது SocialMedia Identity ஆகி விடும், பெரும்பாலான நேரம் அதே பெயரில் ஏற்கனவே நமக்கு முன்னரே ஒருவர் பதிவு செய்து இருப்பார். அப்போது நம் ஊர், பெயர் initial , தொழில், கல்வி அல்லது வேறு எதையேனும் ஒற்றாக இணைத்து வைத்து கொள்ளலாம். ஆங்கில வார்த்தைகளை வைப்பது, அல்லது எளிதில் புரியாத வார்த்தைகளில் வைப்பது , பெயருடன் எண்களை சேர்ப்பது தமிழ் ட்விட்டரில் பின்பற்ற யோசிக்க வைக்கும். உங்கள் ட்விட்டர் பெயர் எளிமையாக, நினைவில் வைத்துக் கொள்ளும்படி இருக்க வேண்டும். பெண் பெயர் வைத்தால் அதிக பேர் பின்பற்றுவார்கள் என்பது மோசமான கற்பனை. நீங்கள் நீங்களாக இருங்கள்.

2. இரண்டாவது உங்களது உண்மையான படத்தை ட்விட்டர் பக்கத்தின் முகப்பு படமாக (DP) வைப்பது நல்லது, நம்பகத்தன்மையை அதிகரிக்கும். Twitter Spam கள் தான் முகப்பு படம் இல்லாமலோ, அசிங்கமான படத்தை முகப்பு படமாகவோ வைத்திருக்கும். தமிழ் கீச்சர்களில் அலைபேசியில் இருந்து கீச்சுபவர்களே மிக அதிகம், அவர்களுக்கு உங்கள் BackGround image தெரிய போவதில்லை, உங்கள் Display Picture தான் தெரியும். ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். பார்த்தவுடன் நன்மதிப்பை உண்டாக்கும் வகையில் உங்கள் படம் இருக்கட்டும்.

3. மூன்றாவது உங்கள் சுயவிவர குறிப்பு. இதற்கு ட்விட்டர் 160 எழுத்துகளை வழங்குகிறது, உங்களை பற்றி மிக சுருங்க சொன்னால் போதும். அதும் இல்லாமல் இருப்பது நல்லதல்ல. ஏன் சொல்கிறேன்றால் ட்விட்டர் Suggestion ல் உங்களை பற்றிய சுய விவர குறிப்பு, உங்களின் கடைசி ட்வீட் அல்லது இரண்டையும் காட்டுகிறது. உங்கள் பக்கத்திற்கு சென்று உங்கள் த்வீட்கள் அனைத்தையும் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் பொறுமை யாருக்கும் இல்லை.

4. உங்கள் ட்விட்டர் சுய விவர குறிப்பில் Link பகுதியில் உங்கள் வலைப்பூவின் சுட்டியை கொடுக்கலாம், அல்லது நம் twitamils.com தமிழ் த்விட்டர்களுக்கான தளத்தை சுட்டுங்களேன். ஆனால் செய்ய கூடாத தவறு bit.ly ow.ly போன்று குறுக்கப்பட்ட சுட்டிகளை கொடுப்பது. Location பகுதியில் உங்கள் ஊர் அல்லது மாவட்டத்தை கொடுங்கள். உங்கள் பகுதியில் கீச்சர்கள் சந்திப்பு நடந்தால் உங்களையும் நினைவில் வைத்து அழைக்க வசதியாக இருக்கும்.

5. ட்விட்டர் கணக்கை ஆரம்பித்த பின் அதில் ஒன்றுமே எழுதாமல் இருப்பதும்.. த்வீட்டே இல்லாத பக்கத்தை அதிகம் பேர் பின்பற்ற மாட்டார்கள் என்பதை மனதில் கொள்க. நிறைய பேருக்கு சொல்ல நிறைய கருத்துகள் இருந்தாலும் தமிழ் எழுதுவதில் சிரமங்கள் இருக்கும் அவர்களுக்கான உதவிப் பக்கம் இங்கே  அல்லது குறைந்த பட்சம் அடுத்தவர்களின் கீச்சுகளை RT ஆவது செய்யுங்கள்.

6. தமிழ் த்விட்டர்களுடன் சம்பந்தமே இல்லாத விசயங்களை கீச்சுவதும் , உங்கள் கீச்சுக்கும் அதில் இருக்கும் சுட்டிக்கும் தொடர்பே இல்லாதிருப்பதும் unfollow க்கு வழிவகுக்கும்.

7. உங்களது தளத்தின் சுட்டிகளை மற்றுமே பகிர்ந்து கொண்டு, பிறரோடு உரையாடாமல் இருப்பது உங்கள் Follower எண்ணிக்கையை ஒரு அளவிற்குள்ளயே நிறுத்தி விடுகிறது அல்லது அலுப்படைய செய்கிறது.

8. Get More Followers, TeamFollowBack, Instant Follow Back போன்ற குறுக்கு வழிகள் உங்கள் follower எண்ணிக்கையை உயர்த்தலாம். ஆனால் உண்மையான மனிதர்கள் மூலம் அல்லாமல் Spam Bot களின் மூலம் எண்ணிக்கை உயர்த்துவதில் என்ன மதிப்பு. ட்விட்டர் தொடர்ந்து spam கணக்குகளை மூடி வரும் போது ஒரேடியாக எண்ணிக்கை விழுந்து விடும்.

9. பெரும்பாலும் நேரம் போக்கவே ட்விட்டருக்கு வருகிறோம்.. இங்கேயும் சச்சரவு செய்து கொண்டிருப்பது உங்கள் மதிப்பை குலைத்து உங்களை விட்டு விலக வைக்கும். அறிக தனிப்பட்ட தாக்குதல் செய்வதால் விவாதத்தில் வென்றதாக ஆகாது. ட்விட்டரில் நண்பர்களை தேடுங்கள், பகை வளர்க்காதிர்கள். என் அறிவுரை நான்கு ட்வீட்க்கு மேல் விவாதத்தை தொடராமல் இருப்பது நலம். அது போல் உங்கள் பக்கம் முழுதும் @ mention களாக நிரப்பி கொண்டிருப்பதும் எரிச்சல் அடைய வைக்கும்.

10. உங்கள் ட்விட்டர் நண்பர்களுடன் நல்ல தொடர்பை வளர்த்துக் கொள்வது, அவர்களின் பதிவுகளை பின்னூட்டம் எழுதுவது, ட்விட்டரில் பகிர்வது, ட்வீட் களை RT செய்வது உங்களின் மதிப்பை உயர்த்தும். உங்களுக்கு தெரியுமா? Social Media ல் உங்களுக்கு எத்தனை நண்பர்கள் இருந்தாலும் உங்களால் 150 பேருக்கு மேல் நினைவில் வைத்து கொள்ள இயலாது.

11. ஒரே ட்வீட் அல்லது ஒரே சுட்டியை மறுபடி மறுபடி பகிர்வது உங்களை unfollow செய்ய வழிவகுக்கலாம். காலையில் ஒருமுறை இரவில் ஒருமுறை repeat செய்யலாம். உங்கள் ட்வீட் சிறந்ததாக இருந்தால் RT மூலம் அதுவே சுழற்சியாகும்.

12. உங்களை ஒருவர் Follow செய்கிறார் என்றால் அவருக்கு DM மூலம் நன்றி சொல்லுங்கள். அவர் பக்கத்தில் சிறந்த ட்வீட் இருந்தால் அதை RT செய்யுங்கள். முடிந்தால் அவரை பின்பற்றுங்கள். இதையே RT க்கும் செய்யலாம்.

13. சில நேரம் ட்விட்டரில் நாம் மோசமான அனுபவங்களை பெற நேரிடும், காரசாரமான விவாதமோ அல்லது சச்சரவுக்குரிய த்வீட்டோ சிலரை Unfollow/Block செய்ய உங்களை தூண்டும்.. கொஞ்சம் பொறுங்கள்.. கோபத்தின் போது எந்த முடிவும் எடுக்காமல் தூங்கி முழித்து அடுத்த நாள் காலை யோசிங்க, உங்களை கடுப்பேற்றியவர்க்கு அந்த நாள் மோசமான நாளாக இருந்திருக்கலாம்.. அவர் குடித்திருந்திருக்கலாம்.. அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கலாம். அவர் நகைச்சுவையாக எதாவது சொல்ல போய் நாராசமாக ஆகிருக்கலாம். அவரின் த்வீட்டை எதிர்தரப்பில் வேறு எதையும் நாம் அறிய மாட்டோமே. மன்னிப்பதே மகத்தானது. இன்னா செய்தாரை ஒருத்தல்.. மீதி உங்களுக்கு தெரியும். அதை செய்ங்க. நட்பு வலுப்பெறும்.

14. அனுபவ கீச்சரின் மதிப்பு அவர் புதியவர்களிடம் நடந்து கொள்ளும் முறையில் தான் இருக்கிறது. அவர்களின் கீச்சுகளை RT செய்து பிரபலபடுத்துவதும், அவர்களின் ஐயங்களை தீர்ப்பது, தவறுகளைக் கண்டால் Direct Message மூலம் திருத்துவது, சிறந்த கீச்சர்களை பரிந்துரைப்பது.

15.தயவு செய்து தகாத, மோசமான ட்வீட்களை மீள்ட்வீட் செய்யாதீர்கள், அசிங்கத்தைப் பகிர்வது unfollow ஆக வழிவகுக்கும். குறிப்பாக சாதி, மத, மொழி, வெறுப்பின் வெளிப்பாடுகளை, கெட்ட வார்த்தைகளை.

இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். நேர்மறையாக இருங்கள். நல்லதை நாடுங்கள். நல்ல நட்பை பெறுங்கள்.

பதிவு : @meerantj

by Swathi   on 09 Mar 2015  0 Comments
Tags: கீச்சர்   ஆலோசனைகள்   ட்விட்டர்   New Twitter Users   பயனாளர்கள்   டிப்ஸ்   Tips  
 தொடர்புடையவை-Related Articles
நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !! நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !!
நீங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் பெற வேண்டுமா? நீங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் பெற வேண்டுமா?
விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !! விஜய் சேதுபதி உங்களுக்கு போட்டியா... ராஜமௌலி படத்தில் நடிப்பீர்களா? - சிவகார்த்திகேயனின் பதில்கள் !!
ட்விட்டர் என்ற ஆலமரம் ட்விட்டர் என்ற ஆலமரம்
தமிழில் கீச்சு எழுதும் வழிகள் : தொகுப்பு தமிழில் கீச்சு எழுதும் வழிகள் : தொகுப்பு
கீச்சுகளை தரவெடுத்தல் அழித்தல் கீச்சுகளை தரவெடுத்தல் அழித்தல்
ஸ்பாம் DMகளிலிருந்து ட்விட்டர் கணக்கை பாதுகாக்கும் வழிகள் ஸ்பாம் DMகளிலிருந்து ட்விட்டர் கணக்கை பாதுகாக்கும் வழிகள்
பல ட்விட்டர் கணக்குகளை நிர்வகிக்க பல ட்விட்டர் கணக்குகளை நிர்வகிக்க
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.